கடையில் மாணிக்கம், தங்கமயில் செய்யும் அட்ராசிட்டி, கொந்தளிக்கும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், இனி உன் அப்பா கடை பக்கமே வரக்கூடாது என்று திட்டினார். அதற்குப்பின் பழனி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்ப வந்த பாண்டியன், கடைக்கு பழனியை போக சொன்னார். பழனியும் வேகவேகமாக கிளம்பினார். இதை பார்த்து கோபப்பட்ட சுகன்யா, சக்திவேலிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பழனிக்கு சொந்தமாக பிசினஸ் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டார். சக்திவேல், பழனியை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிடு எல்லாமே செய்து தருகிறேன் என்றார்.
நேற்று எபிசோட்டில் கிச்சனில் எல்லோருமே வேலைக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமதி, தங்கமயில் வேலைக்கு போகாமல் இருப்பதை சூசகமாக சொன்னார். இதனால் தங்கமயில் அங்கிருந்து சென்று விட்டார். பின் தங்கமயில், சரவணன் இடம் சண்டை போட்டார். அதற்கு சரவணன், நீ என்ன படித்திருக்கிறாய்? பொய் சொல்லி தானே ஏமாற்றுகிறாய் என்றார். அதற்குப்பின் தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து, மளிகை பொருட்களை எடுத்து வந்ததை பற்றி கேட்டு சண்டை போட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அவரும் சம்பளம் கொடுத்தவுடன் திருப்பிக் கொடுக்கிறேன் என்றார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே வேலைக்கு தயாராகி கிளம்பினார்கள் செந்தில் கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வீட்டிலேயே அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் தங்கமயில், நான் வெளியே வேலைக்கு போவதில் நிறைய பிரச்சனை இருக்கிறது. நான் மளிகை கடைக்கு வேலைக்கு வருகிறேன் என்று சொன்னார். சரவணன், கோமதி, பாண்டியன் எல்லோருமே வேணாம் என்றார்கள். ஆனால், தங்கமயில் விடாமல் ஏதேதோ கதைகளை கட்டினார். பாண்டியன், தங்கமயிலின் வற்புறுத்ததால் ஒத்துக்கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், ராஜிக்கு கார் ஓட்ட சொல்லித் தருகிறார். ராஜி ரொம்பவே பதறுறார். அப்போது எதிரில் வரும் குமாரின் பைக்கின் மீது ராஜி மோதி விடுகிறார். கதிர்- ராஜி இருவருமே பதறி கொண்டு குமாரை பார்க்க போகிறார்கள். ராஜி தான் கார் ஓட்டி வந்தது என்று தெரிந்ததுமே குமார், எனக்கு ஒன்றும் இல்லை. உனக்கு ஒன்னும் ஆகவில்லையா? பத்திரமாக ஓட்டு என்று நல்லவர் போல் பேசிவிட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்து கதிருக்கு ஷாக்காக இருக்கிறது. இன்னொரு பக்கம் மளிகை கடையில் வழக்கம் போல மாணிக்கம் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து தங்க மயிலும் மளிகை கடைக்கு வேலைக்கு வருகிறார். இதை பார்த்து பழனிக்கு, என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரவணனுக்கு பயங்கர கடுப்பாக இருக்கிறது. தங்கமயிலும் மாணிக்கமும் மளிகை கடையில் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து சரவணனுக்கு கோபம் கொந்தளிக்கிறது. இருந்தாலும் அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர்-ராஜி இருவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது