அரசாங்க வேலைக்கு செல்ல செந்தில் எடுக்கும் முடிவு, அரசியின் காதல் விஷயத்தை அறிந்த மாப்பிளை- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 23/4/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதியும், அவருடைய மகள், மருமகள் எல்லோருமே கோயிலுக்கு சென்றார்கள். அங்கு இருந்த பேனரில் நடனம் போட்டியில் முதல் பரிசு கார், இரண்டாம் பரிசு பைக் என்று போடப்பட்டது. அதை பார்த்த உடன் ராஜி, கதிருக்கு எப்படியாவது பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சுகன்யா, பழனியிடம் வீட்டு வேலையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார். பழனி வேதனையில் எதுவுமே பேச முடியாமல் வேலை செய்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்தவுடன் வழக்கம்போல சுகன்யா நாடகம் ஆடி இருந்தார்.

பின் ராஜி, மீனாவிடம் நடன போட்டி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இருவருமே கோமதியிடம் நடன போட்டியில் கலந்து கொள்வதற்காக போய் பேசி இருந்தார்கள். ஆனால் கோபத்தில் கோமதி, நடன போட்டி எல்லாம் தேவையில்லை. மாமாவிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும். வந்த வேலையை பார்க்கலாம் என்று திட்டி விட்டு சென்றார். எதுவும் பேசாமல் மீனா-ராஜி அமைதியாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. இதை தன் அம்மாவிடம் சொல்லி புலம்பினார் தங்கமயில். அதற்குப்பின் போன் எடுத்த சரவணன் இடம் தங்கமயில் கதறி அழுதார். ஆனால், அவர் எதையுமே கண்டு கொள்ளவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் சரவணன், வேற ஏதாவது என்னிடம் மறைக்கிறாயா? அந்த வேலை செய்யும் இடத்தில் ப்ரூப் ஏதாவது கொடுத்திருக்கிறாயா? என்று கேட்டு இருந்தார். தங்கமயில் எதுவுமில்லை என்று சொன்னார். அதற்கு சரவணன், நான் டூப்ளிகேட் சர்டிபிகேட்டை தயார் செய்கிறேன். வேறு வேலையை பார்க்கலாம், அங்கிருந்து கிளம்பு என்று சொன்னார். தங்கமயிலும் கோமதியிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி அங்கு கிளம்பி விட்டார். அதற்குப்பின் ராஜி, எப்படியாவது நடன போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து மீனா, என்ன நடக்கிறது என்று கேட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்கு ராஜி, எப்படியாவது அனுமதி வாங்கி தாருங்கள் என்று கெஞ்சி இருந்தார். மீனா, நடனப் போட்டியை பற்றி பேச, கோமதி கோபப்பட்டார். உடனே மீனா, நாம் கோயிலுக்கு வரவேண்டும், ராஜி நடனம் ஆட வேண்டும் என்பது சாமி போட்ட முடிச்சு. இல்லை என்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்று ஏதேதோ சொல்லி கோமதியின் மனதை மாற்றி விட்டார். ஒரு வழியாக கோமதியும் நடனத்திற்கு சம்மதித்து விட்டார்.
இன்னொரு பக்கம் பாண்டியன், கார் வாங்குவதற்காக செந்திலை பேங்கிற்கு சென்று பணத்தை எடுத்து வர சொன்னார். அப்போது போன் செய்த மீனாவின் அப்பா, வேலையைப் பற்றி பேச செந்திலை அழைத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அப்பா, அரசாங்க வேலையை பற்றியும், செந்தில் செய்யும் மளிகை வேலையை பற்றியும் வித்தியாசப்படுத்தி பேசி காட்டுகிறார். எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்த பாண்டியன், பணத்தை எடுத்து வர சொல்லி கத்துகிறார். அதனால் செந்தில் கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் அரசியை பார்ப்பதற்காக மாப்பிள்ளை அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். பின் அரசி- மாப்பிள்ளை இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது அரசி, குமாரை காதலித்த விஷயத்தை சொன்னவுடன் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். பின் மீனா, என்ன நடந்தது? என்று கேட்க, குமார் விஷயத்தை அரசி சொல்கிறார். இதனால் அதிர்ச்சியில் மீனா அமைதியாகி விடுகிறார். இன்னொரு பக்கம் பேங்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்த செந்தில் தன்னுடைய மாமனாரை சந்திக்கிறார். பின் அரசாங்க வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்யும் ஒரு நபரை அறிமுகம் செய்து வைக்கிறார். செந்தில் தங்கைக்காக எடுத்து வந்த பணத்தை மீனா அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full