ராஜிக்கு சப்போர்ட் செய்யும் மீனா, கோமதி முடிவு என்ன? வேதனையில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/4/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சுகன்யா, பழனிக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருந்தார். டார்ச்சல் தாங்க முடியாமல் பழனி வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது சுகன்யா, உங்கள் வீட்டிற்கு நான் வடித்துக் கொட்டணுமா? என்னால் வீட்டு வேலை செய்ய முடியாது என்று ரொம்ப மோசமாக பழனியை திட்டி இருந்தார். பின் பழனியிடம் தண்ணிர் எடுக்க சொல்லி குடத்தை கொடுத்தார். பின் காய்கறிகளை காய்கறிகளை கட் பண்ணுவது என்று வீட்டு வேலை எல்லாம் செய்ய சொன்னார். பழனி அழுது கொண்டு எதுவும் பேசாமல் செய்தார். இதையெல்லாம் வீட்டிற்கு வந்த சரவணன் பார்த்து விட்டார். வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு சுகன்யா மோசமாக பேசிக் கொண்டிருந்தார்.

சுகன்யாவின் நடவடிக்கையை பார்த்து சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது வெளிவந்த சுகன்யா, சரவணனை பார்த்து விட்டார். ஒன்னும் தெரியாது போல சுகன்யா நாடகமாடி இருந்தார். பின் மாடியில் பழனி-சரவணன் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, கல்யாண நாளில் இருந்து இப்படித்தான் நடந்து கொண்டார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று தனக்கு நடந்த சோகமான விஷயத்தை சரவணன் இடம் சொல்லி வேதனைப்பட்டார். இன்னொரு பக்கம் மீனா-ராஜி- தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒவ்வொரு கணவர்மார்களும் எப்படி எல்லாம் தங்களை மிஸ் செய்கிறார்கள் என்று போன் செய்து பேசி இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோடில் கோமதியும், அவருடைய மகள், மருமகள் எல்லோருமே கோயிலுக்கு சென்றார்கள். அங்கு இருந்த பேனரில் நடனம் போட்டியில் முதல் பரிசு கார், இரண்டாம் பரிசு பைக்
என்று போடப்பட்டது. அதை பார்த்த உடன் ராஜி, கதிருக்கு எப்படியாவது பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சுகன்யா, பழனியிடம் வீட்டு வேலையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார். பழனி வேதனையில் எதுவுமே பேச முடியாமல் வேலை செய்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்தவுடன் வழக்கம்போல சுகன்யா நாடகம் ஆடி இருந்தார்.

நேற்று எபிசோட்:

பின் ராஜி, மீனாவிடம் நடன போட்டி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இருவருமே கோமதியிடம் நடன போட்டியில் கலந்து கொள்வதற்காக போய் பேசி இருந்தார்கள். ஆனால் கோபத்தில் கோமதி, நடன போட்டி எல்லாம் தேவையில்லை. மாமாவிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும். வந்த வேலையை பார்க்கலாம் என்று திட்டி விட்டு சென்றார். எதுவும் பேசாமல் மீனா-ராஜி அமைதியாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. இதை தன் அம்மாவிடம் சொல்லி புலம்பினார் தங்கமயில். அதற்குப்பின் போன் எடுத்த சரவணன் இடம் தங்கமயில் கதறி அழுதார். ஆனால், அவர் எதையுமே கண்டு கொள்ளவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சரவணன், வேற ஏதாவது என்னிடம் மறைக்கிறாயா? அந்த வேலை செய்யும் இடத்தில் ப்ரூப் ஏதாவது கொடுத்திருக்கிறாயா? என்று கேட்கிறார். தங்கமயில் எதுவுமில்லை என்று சொல்கிறார். அதற்கு சரவணன், நான் டூப்ளிகேட் சர்டிபிகேட்டை தயார் செய்கிறேன். வேறு வேலையை பார்க்கலாம், அங்கிருந்து கிளம்பு என்று சொல்கிறார். தங்கமயிலும் கோமதியிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி அங்கு கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் ராஜி, எப்படியாவது நடன போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து மீனா, என்ன நடக்கிறது என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு ராஜி, எப்படியாவது அனுமதி வாங்கி தாருங்கள் என்று கெஞ்சுகிறார். மீனா, நடனப் போட்டியை பற்றி பேச, கோமதி கோபப்படுகிறார். உடனே மீனா, நாம் கோயிலுக்கு வரவேண்டும், ராஜி நடனம் ஆட வேண்டும் என்பது சாமி போட்ட முடிச்சு. இல்லை என்றால் சாமி கண்ணை குத்தி விடும் என்று ஏதேதோ சொல்லி கோமதியின் மனதை மாற்றி விடுகிறார். ஒரு வழியாக கோமதியும் நடனத்திற்கு சம்மதித்து விடுகிறார்.
இன்னொரு பக்கம் பாண்டியன், கார் வாங்குவதற்காக செந்திலை பேங்கிற்கு சென்று பணத்தை எடுத்து வர சொல்கிறார். அப்போது போன் செய்த மீனாவின் அப்பா, வேலையைப் பற்றி பேச செந்திலை அழைக்கிறார். இதுடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full