தங்கமயிலை வச்சி செய்யும் மீனா-ராஜி, கோமதி அண்ணன் வீட்டில் வெடிக்கும் கலவரம்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் தங்கமயில், பாண்டியன் வீட்டிற்கு வீடியோ கால் செய்து பேசி இருந்தார். அப்போது, ஏன்? என்னுடைய போட்டோவிற்கு யாருமே எந்த ரிப்ளையும் பண்ணவில்லை என்று வருத்தப்பட்டு பேச எல்லோருமே அவருக்கு மெசேஜ் அனுப்பினார்கள். இதை பார்த்து கோமதி புலம்பி இருந்தார். இன்னொரு பக்கம், தன் வீட்டிற்கு அண்ணன் வந்ததை பார்த்து ராஜி அம்மா வடிவு அதிர்ச்சி ஆகி இருந்தார்.
அப்போது ராஜி சித்தப்பா, உங்களுக்கு கஷ்டம் என்று எங்களிடம் கேட்டால் பணத்தை கொடுப்போம். நீங்கள் எதற்காக அன்னி நகை வாங்கினீர்கள்? என்று சொன்னவுடன், நான் எதற்கு என் தங்கைக்கு போட்ட நகையை வாங்க போறேன்? என்று கோபமாக பேசி விட்டு சென்று விட்டார். கடைசியில் ராஜியின் அப்பா, எங்கே நகை? என்ன செய்தாய்? என்று கேட்க எதுவுமே பேசாமல் அமைதியாக வடிவு நிற்கிறார். உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், சரவணன்-தங்கமயில் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக எடுத்த புகைப்படத்தை எல்லாம் தெரியாமல் ஃபேமிலி குரூப்பில் அனுப்பி இருந்தார். இதை பார்த்த செந்தில், கதிர், சித்தப்பா மூவருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் போனை கேட்க, எல்லோரும் தடுக்க பார்த்தார்கள். இருந்தாலும், பாண்டியன் போட்டோவை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி விட்டார்.
சீரியல் கதை:
இன்னொரு பக்கம் மீனா- ராஜி- கோமதி எல்லோருமே தங்கமயில் அனுப்பிய போட்டோவை பார்த்து கிண்டல் கேலி செய்து இருந்தார்கள். பின் இதை வைத்து மீனா, பாண்டியனிடம் வம்பு இழுத்தார். கடைசியில் செந்தில், சரவணனுக்கு போன் செய்து போட்டோ விஷயத்தை சொல்ல, சரவணன்- தங்கமயில் இருவரும் அதிர்ச்சியாகி தங்கமயில் போட்டோவை டெலிட் செய்ய பார்த்தார். ஆனால், மாத்தி பண்ணி விட்டார். சரவணனனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில், தங்கமயில் அனுப்பிய போட்டோவை வைத்து எல்லோருமே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரவணன்- தங்கமயில் இருவருமே போட்டோவை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து தங்கமயில் அம்மா போன் செய்து பயங்கரமாக திட்டி விடுகிறார். அதற்குப் பின் கோமதி, தங்கமயிலை திட்டி கோபத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார். உடனே மீனா, ராஜி இருவருமே கோமதியை கலாய்த்து விட்டு வருகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் ராஜி- மீனா இருவரும் தங்க மயிலுக்கு போன் செய்து ஒவ்வொரு போட்டோவை பற்றி பங்கமாக கலாய்க்கிறார்கள். இன்னொரு பக்கம் வீடியோ கால் மூலம் செந்தில், கதிர் இருவரும் சரவணனுக்கு போன் செய்து கலாய்க்கிறார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் சரவணன்- தங்கமயில் இருவருமே அமைதியாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜியின் அப்பா, நகை எங்கே? என்று வடிவை கேட்டு கோபப்பட்டு பேசுகிறார். உடனே அவருடைய அம்மா தடுக்க, இது எங்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்று கோபத்தில் கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது