தங்கமயில் செய்த வேலையால் மீனா, ராஜுவை கோமதி ஏற்றுக் கொள்வாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து தன் அண்ணனிடம் சொல்லி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள். அப்போது ராஜி செய்த வேலை தெரிந்து மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்க, கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார்.
கடைசியில் எல்லா உண்மையும் மீனா உளற பாண்டியனுக்கு கோபம் அதிகமாகி திட்டி இருந்தார். மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்றது. அதன் பின் கோமதியிடம் ராஜி, மீனா இருவருமே மன்னிப்பு கேட்டும் அவர் முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார். அதோடு இந்த விவகாரம் எல்லாம் சரவணன்- தங்கமயிலுக்கு தெரிந்து விட்டது. பின் வீட்டிற்கு வந்த சரவணன்- தங்கமயில் நடந்த சண்டையை பற்றி தான் பேசி இருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், மீனா- ராஜுவை பயங்கரமாக குறை சொல்லி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோடில், 21,000 பணம் பற்றி சரவணன் கேட்க இருவருமே பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளித்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் நகையை பேங்கில் இருந்து எடுக்க கோமதி, தங்கமயில் போனார்கள். வீட்டில் ராஜி-மீனா இருவருமே நடந்ததை பற்றி ரொம்பவே வருத்தப்பட்டு பேசி இருந்தார்கள். பின் பேங்கில் இருந்து மொத்த நகையும் வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து விடுகிறார். பின் அவரவர்கள் நகையை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் இங்கு வந்து மீண்டும் சண்டை போட வேண்டாம் என்று ஜாடை மாடையாக மீனாவை வம்புக்கு இழுத்தார்.
சீரியல் கதை:
மீனாவும் தன்னுடைய மாமியாரை எவ்வளவோ சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், அவர் சமாதானமே ஆகவில்லை. அப்போது தங்கமயில், தன்னுடைய நகைகளை எடுத்து பார்க்க, நகைகள் எல்லாம் கருகிப் போய் இருந்தது. உடனே தங்கமயில் யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். பின் ராஜியின் மொத்த நகையையும் சித்தப்பு கொண்டு போய் அவருடைய அண்ணன்கள் இடம் கொடுத்து பாண்டியன் தரப்பு நியாத்தை சொல்கிறார். ஆனால், அவர்கள் பாண்டியனை திட்டி விடுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நகையை போட சொல்லி ராஜி அப்பா கட்டாயப்படுத்த, வடிவு முடியாது என்று இருவருக்கும் இடையே பயங்கர சண்டை நடக்கிறது.
இன்றைய எபிசோட்:
உடனே அப்பத்தா தடுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் மீனா, ராஜி இருவரும் நகையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயில், என் நகையை போட்டுக்கொள் என்றவுடன் ராஜு வேணாம் என்று சொல்கிறார். பின் தங்கமயில் நகையை அம்மா வீட்டில் வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். அப்போது கோமதி பேங்கில் நகையை வைக்கலாம் கொடு என்று சொன்னவுடன் தங்கமயில் தடுமாறுகிறார். கடைசியில் பாண்டியன் வீட்டில் உட்கார்ந்து பேசும்போது, மீனா தண்ணீர் கொடுக்க பாண்டியன் வாங்காமல் அமைதியாக இருக்கிறார்.
https://youtu.be/KaOJqLagPy4?si=fvewoQzrgdaw2Gle
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மீனா தன்னுடைய மாமியாரிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், கோமதி முடியாது என்று மறுக்கிறார். உடனே மீனா, நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே போகட்டுமா? என்று வருத்தப்பட்டு பேச தங்கமயில், நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து எனக்கே பொறாமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். இப்படி நீங்கள் தனித்தனியாக இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து பேசுங்கள் அத்தை என்று சொன்னவுடன் கோமதி, உங்கள் மீது கோபம் இருக்கிறது. ஆனால், தங்கமயில் சொன்னதற்காக தான் பேசுகிறேன் என்று சொல்கிறார். உடனே மீனா-ராஜி இருவருமே தங்க மயிலுக்கு நன்றி சொல்கிறார்கள்.