செந்தில் செய்த வேலையால் கொந்தளிக்கும் மீனா, தங்கமயில் அப்பாவின் அட்ராசிட்டி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், என்னுடைய மளிகை கடைக்கு வேலை செய்ய ஆள் தேவை. உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் அங்கு வந்து வேலை செய்யுங்கள் என்றார். தங்கமயில் வேண்டாம் என்றார். ஆனால், அவருடைய அம்மா நாளைக்கு அனுப்பி விடுகிறேன் என்றார். அதற்குப்பின் தங்கமயில் தன்னுடைய அப்பா, அம்மாவை தனியாக அழைத்து திட்டினார். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுக்கவில்லை. அதற்கு பின் தங்கமயில் அப்பா, பாண்டியன் கடைக்கு சென்று விசாரித்தார். ஆனால், சரவணனுக்கு அதில் விருப்பமில்லை.
நேற்று எபிசோட்டில் மீனா, எனக்கு அரசாங்கத்தில் இருந்து வீடு குவாட்டர்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றார். உடனே செந்தில், அங்கே போகலாம் என்றார். அதற்கு மீனா, அங்கு போக எனக்கு விருப்பமில்லை. இங்கேயே இருக்கலாம் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில் அப்பா, கடைக்கு வேலைக்கு வருவது சரவணன் பிடிக்கவில்லை. இதைப்பற்றி சரவணன் தங்கமயில் இடம் சொல்லி சண்டை வாங்கினார். தங்கமயில், அப்பா இனிமேல் கடைக்கு வர மாட்டார் என்றார். அதற்கு பின் ராஜி, கதரின் டிராவல்ஸ்க்கு பயங்கரமாக உதவி செய்து கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் பாண்டியன் சரவணனுக்கும் பழனிக்குமே வேலையை பிரித்து கொடுத்தார். இதை கவனித்த சுகன்யா, எல்லோரும் போன பிறகு பழனியிடம் வழக்கம் போல சண்டை வாங்கினார். பாண்டியன், உங்களை மரியாதை இல்லாமல் நடத்தினார். நீங்கள் எடுபுடி என்றெல்லாம் சொன்னா. இதனால் பழனி கோபப்பட்டு சண்டை போட்டார். இன்னொரு பக்கம் செந்தில், மீனாவின் அப்பா- அம்மா வீட்டிற்கு சென்று குவாட்டர்ஸ்க்கு போகும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அவர்களுமே, நீங்கள் தனியாக போங்க, அப்பதான் உங்களுக்கு மரியாதை இருக்கும் என்றெல்லாம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட் தங்கமயில் அம்மா, ஊர் முழுவதும் கடன் வாங்கி வைத்திருப்பதால் வீட்டின் முன்பு அசிங்கப்படுத்துகிறார்கள். இதை பார்த்து தங்கமயில் ரொம்ப வருத்தப்பட்டு தன் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் மீனாவை சந்தித்த அவருடைய அப்பா, குவாட்டர்ஸ் ஏன் போக வேண்டாம்? நீங்கள் இருவரும் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும். தயவு செய்து அந்த வீட்டை விட்டு போ என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவே இல்லை. உங்கள் மருமகனை வேண்டுமென்றால் அந்த வீட்டிற்கு போக சொல்லுங்கள் என்று சொல்லி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கதிர்-ராஜ் இருவரும் டிராவல்ஸ் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அதற்குப்பின் அரசி வரும் வழியில் குமார் நின்று பேசுகிறார். ஆனால், அரசி சரியாக பேசவில்லை. அந்த சமயம் வந்த கதிர், குமாரை அடிக்கப் போகிறார். உடனே அரசி தடுத்து குமாரை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் மளிகை கடைக்கு தங்க மயிலின் அப்பா வருகிறார். அவர் கடையில் எந்த வேலையும் செய்யாமல் கஸ்டமர்களிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு கோபம் அதிகமாகிறது. பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து கல்லாவிலிருந்து தங்கமயில் அப்பா பணத்தை எடுத்து வைத்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.