பாண்டியனை ஏமாற்றும் செந்தில், உண்மையை சொல்வாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார் தன்னுடைய நண்பர்களுடன் சந்தோசமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். குமாரை பார்த்து மாரி, அரசி எங்கே? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். ஆனால், குமார் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் வீட்டுக்கு வந்த அரசியை பார்த்தவுடன் குமார் ஷாக் ஆனார். பின் அரசி, நண்பருடன் தெருவில் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அப்படியே வந்துவிட்டார் என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு குமாருக்கு இன்னும் கோபம் அதிகமானது.
பாண்டியன் தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளியே இருந்த குமார், எப்படியாவது பாண்டியனை கஷ்டப்படுத்தனும் என்ற நினைத்து அரசியை வெளியே கூப்பிட்டார். பின் குமார், பர்ஸ் எடுத்துக் கொண்டு வர சொல்கிறார். அரசியும் எடுத்து வந்து தந்தார். ஆனால், அந்த பர்ஸ் இல்லை என்று குமார் அரசி தலையில் அடித்தார். இதை எல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து வண்டியை கீழே தள்ளிவிட்டு உள்ளே போனார். அதற்குப்பின் குமார், உன்னை அடித்தால் உன் அப்பா கஷ்டப்பட்டார். அதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறேன். நீ எவ்வளவு சித்திரவதை படப்போகிறாய் பார் என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் குமாரை சாப்பிட்ட அவர் அம்மா அழைத்தார். ஆனால், அவர் அரசியுடன் சாப்பிடுகிறேன் என்று பெட்ருமில் போய் உட்கார்ந்து கொண்டார். பின் அரசியிடம் குமார் சாப்பாட்டை மேலே கொண்டு வா என்று சொன்னார். அரசியை மேலும் கீழும் ஆக வேலை வாங்கி அலைய வைத்தார். பின் குமார், பாண்டியனையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி திட்டிக் கொண்டிருந்தா. கோபத்தில் அரசி குழம்பை குமாரின் மூஞ்சிலேயே ஊற்றி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் குமார் தலை முழுவதுமே அரசி சாம்பாரை கொட்டி விடுகிறார். சூடு காரம் தாங்க முடியாமல் குமார் கதறுகிறார். மொத்த குடும்பமே வேலை வந்துவிடுகிறது. சக்திவேல், குமார் அம்மா, அப்பத்தா எல்லோருமே என்ன ஆனது? என்று கேட்க, தவறி சாம்பார் மேலே கொட்டியது என்று ஏதே சொல்லி சமாளிக்கிறார். அதற்குப்பின் சக்திவேல், குமாரை பயங்கரமாக கிண்டல் செய்கிறார். இன்னொரு பக்கம் கதிர், தேர்வு ரிசல்ட் வருவதால் வீட்டில் எல்லோரும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நிலத்தை விற்று லட்சக்கணக்கில் கட்டு கட்டாக முத்துவேல்- சக்திவேல் இருவரும் பணத்தை வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக் :
அப்போது வந்த சுகன்யா, பணத்தை பார்த்து வாயை பிளந்து பேசுகிறார். பின் பழனியை எப்படியாவது இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முத்துவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர், ராஜி இருவருமே பாண்டியனின் கடைக்கு போகிறார்கள். அங்கு ராஜி, கடையில் வியாபாரம் பார்ப்பதால் பாண்டியன், அது எல்லாம். பரீட்சைக்கு படி என்கிறார். உடனே ராஜி, உங்களுக்கு தான் போலீஸ் வேலை பிடிக்காது என்றவுடன் பாண்டியன் வருத்தப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=0i6OyX9IZHU
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன், அரசிக்காக கார் வாங்க வைத்திருந்த பத்து லட்ச ரூபாய் பணத்தை செந்திலிடம் கொடுத்து பேங்கில் போட சொல்கிறார். செந்தில் அந்த பணத்தை கவர்மெண்ட் வேலைக்கு கொடுக்கப் போவதாக மீனாவிடம் சொல்கிறார். உடனே மீனா அதெல்லாம் வேண்டாம். நீங்கள் மாமா சொன்னது போல் பேங்கில் போடுங்கள் என்று சொல்கிறார். ஆனால், செந்தில் கேட்காமல் மீனாவின் அப்பாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். பின் செந்தில் பணத்தை பேங்கில் போடாத உண்மையை மீனாவிடம் சொல்கிறார். மீனா கோபப்பட்டு செந்திலை தீட்டி பாண்டியனிடம் உண்மையை சொல்ல சொல்கிறார்.