வேதனையில் புலம்பும் தங்கமயிலை சமாதானப்படுத்தும் மீனா, கொந்தளிக்கும் கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பணத்தை எடுத்து கதிர் என்று உண்மை தெரிந்தவுடன் பாண்டியன் ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார். உண்மையை மறைக்கும் குற்ற உணர்ச்சியில் சரவணன் வருத்தப்பட்டார். கடந்த வாரம் எல்லோருமே வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறது? என்று பயத்திலேயே இருந்தார்கள். அப்போது பாண்டியன், பணம் எங்கே? இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். உடனே கதிர், பணம் ரெடி பண்ண முடியவில்லை என்று அமைதியாக நின்றார்.
இதனால் கோபப்பட்ட பாண்டியன், கதிரின் கையை பிடித்து வெளியே தள்ள பார்த்தார். அப்போது சரவணன் தடுத்து நிறுத்தி, அவன் எனக்காக தான் பணம் கொடுத்தான் என்று நடந்த உண்மையை சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். பின் தங்கமயிலை திட்டி அறிவுரை சொல்லி சென்று விட்டார். கடைசியில் கோமதி, யார் என்ன பிரச்சனை? என்றாலும் என் மகன் தான் காரணமா? அவரவர்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பயங்கரமாக திட்டி இருந்தார். அவமானத்தில் அழுது கொண்டே தங்கமயில் உள்ளே சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் தங்கமயில் செய்த வேலையை நினைத்து கோமதி புலம்பிக்கொண்டே இருந்தார். ராஜி-மீனா எவ்வளோ சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் தங்கமயில் செய்த செலவு பற்றி தான் புலம்பி கொண்டிருந்தார். அப்போது மீனா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று சொல்ல, ராஜி கோபப்பட்டார். உடனே வேலை டென்ஷனில் மறந்து விட்டேன் என்று மீனா சொல்லி சமாளித்தார். இவர்கள் பேசுவதை எல்லாம் தங்கமயில் கேட்டு அழுது கொண்டே சென்று விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கதிர், பாண்டியனிடம் பணத்தை எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, எனக்கு பணம் முக்கியமில்லை. தெரியாமல் செய்ததுதான் தவறு. யாரும் எந்த பணத்தையும் தர தேவை இல்லை என்று சென்று விட்டார் . கோமதி- மீனா-ராஜி மூவரும் சாப்பாடு பத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்கம்யில் சாப்பிடவில்லை என்று மீனா சொல்ல, அவளுக்கு சாப்பிட தெரியாதா? என்று கோமதி கோவமாக சொன்னார்.
இன்றைய எபிசோட்:
பின் ராஜி - மீனா இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவில்லை. இந்நிலையில் இன்று எபிசோட்டில், தங்கமயில் இடம் என்னென்னவோ பேசி ராஜு- மீனா சமாதானம் செய்கிறார்கள். அப்போது தங்கமயில், சண்டையில் நீங்களும் என் மீது இதுதான் சந்தர்ப்பம் என்று வன்மத்தை கக்கி விட்டீர்கள் என்று சொல்ல, மீனா ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு வழியாக தங்கமயிலை சமாதானம் செய்து சாப்பிட அழைத்து வந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் இருந்த கோமதி, நக்கல் ஆகவே தங்கமயிலை வம்பு இழுத்து பேசுகின்றார். இதனால் வேதனை பட்ட தங்கமயில் சாப்பிடாமல் எழுந்தார். பின் மீனா சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். அதற்கு பின்
மீனா, தங்கமயில் விஷயத்திற்கே இப்படி என்றால், நீங்கள் ராஜீ -கதிருக்கு செய்து வைத்த கல்யாணம் தெரிந்தால் என்ன ஆகும்? என்று சொன்னவுடன் கோமதிக்கு நெஞ்சு வலியே வருகிறது. உடனே ராஜி-மீனா தைரியம் சொல்கிறார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், எல்லோரையும் வரவைத்து குடும்ப சூழ்நிலையை எடுத்து சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.