சுகன்யாவின் நாரதர் வேலை, பாண்டியனை அவமானப்படுத்தும் மீனா அப்பா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 24/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், ராஜியை திட்டி என் மகன் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல் என்று அனுப்பி விட்டார். அதற்குப்பின் தங்கமயில், தன் அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னார் . இதைக் கேட்ட தங்கமயில் அம்மா, நீ தான் உன் கணவனை கைக்குள் வைக்க வேண்டும். தயவு செய்து இங்கு வந்து விடாதே என்று சொல்வதால் ரொம்ப வேதனையில் தங்கமயில் அழுதார். பின் தங்கமயில், சரவணன் போன் எடுக்கவில்லை என்று கடைக்குப் போனார். பின் சரவணன், தங்கமயில் திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.

சரவணன் திட்டியதால் வேதனையில் அழுது கொண்டு தங்கமயில் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் அதை பெரிதாக காண்பிக்காமல் நார்மலாக தங்கமயில் பேசினார். ஆனால், கோமதி கர்ப்பம் இல்லாத விஷயத்தை குத்தி காண்பது போல பேசியதால் தங்கமயிலுக்கு இன்னும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்னொரு பக்கம் டியூஷன் நடத்தும் இடத்தில் கதிரின் லோன் விஷயமாக ராஜி பேசினார். அவர்களுமே உதவி செய்வதாக சொன்னார்கள். அதேபோல் கதிரின் நண்பர்களிடமும் லோன் விசயமாக ராஜி பேசினார். பின் ராஜி-கதிர் இருவருமே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது லோன் விஷயத்தைப் பற்றி ராஜி சொன்னார். கோபத்தில் கதிர், நீ எனக்காக எங்கும் அலைய வேண்டாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று கோபமாக பேசினார். இதனால் கோபப்பட்ட ராஜி, இனிமேல் நான் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொன்னார். அதற்கு பின் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பழனி-சுகன்யா இருவருமே பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது டிராபிக் அதிகமாகுவதால் ஒரு இடத்தில் பழனி நின்றார். அந்த இடத்தில் தான் சுகன்யாவின் முன்னாள் கணவன் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் பயந்து போன சுகன்யா, இங்கிருந்து வண்டியை எடுங்கள் எடுங்கள் என்று பழனி இடம் சொன்னார். பழனிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், சுகன்யா சொல்வதால் வண்டியை அங்கிருந்து எடுத்து சென்று விட்டார் பழனி.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பழனி நன்றாக குறட்டை விட்டுக்கொண்டு தூங்கியிருந்தார். சுகன்யா, தன்னுடைய முதல் கணவரை பார்த்ததால் ரொம்பவே பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்து பழனி, சுகன்யாவை சமாதானம் செய்து தூங்க வைத்தார். மறுநாள் காலையில் ப்ராக்டிஸ் செய்வதற்காக கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்றிருந்தார்கள். கதிர் திட்டியதால் ராஜி கோபத்தில் தான் இருந்தார். கதிர் சொல்வதையெல்லாம் ஒழுங்காகவே கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்த கதிர், நீ எனக்காக கஷ்டப்பட வேண்டாம். அதற்காகத்தான் நான் சொன்னேன். நீ உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. உன்னால் முடியும், நீ சீக்கிரம் டிராவல்ஸ் ஆரம்பிப்பாய் என்று எனக்கு என்கரேஜ் பண்ணு. அதுவே போதும் என்றெல்லாம் சொல்வதால் ராஜி அமைதியாகினார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் என்னெல்லாம் வாங்கலாம் என்று லிஸ்ட் போட்டு வைத்திருந்தார். அதை பார்த்த மீனா சந்தோஷப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=JaLUbDoNd5g

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் கீழே விழுந்ததால் காலில் அடிபட்டு இருக்கிறது. அந்த சமயம் பார்த்து மீனாவின் அப்பா- அம்மா இருவருமே பாண்டியன் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது மீனாவின் அம்மா, செந்திலுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்ததால் குலதெய்வ கோவிலுக்கு போகணும் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், எல்லோரும் குடும்பத்துடன் போயிட்டு வாங்க என்று சொல்கிறார். அப்போது மீனாவின் அப்பா, நீங்கள் பணம் கொடுத்ததால் தான் இந்த வேலை மாப்பிள்ளை கிடைத்தது என்றார். உடனே சுகன்யா, செந்தில் அப்பா பணம் கொடுக்கவில்லை. மீனா தான் இந்த பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் மீனாவின் அப்பா பாண்டியன் குடும்பத்தை திட்டிவிட்டு செல்கிறார். கோபத்தில் மீனா, என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சுகன்யாவை திட்டுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full