குலதெய்வ கோவிலுக்கு போன பாண்டியன் குடும்பம், மீனா அப்பா செய்த வேலை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 25/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சக்தி, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் இரண்டு குடும்பமும் சேர்ந்து விடும் என்றெல்லாம் பேசி இருந்தார். உடனே கோபத்தில் அரசி, என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்கிறேன் என்று சொன்னவுடன் சக்தி சென்று விட்டார். ஆனால், இதைப்பற்றி அரசி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் தங்க மயிலின் அப்பா, அம்மா இருவருமே சீர் செய்வதற்காக வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது தங்கமயில் அம்மா, எங்கள் மகளுக்கு நாங்கள் இருக்கிறோம். மீனா- ராஜுக்கு யாருமே இல்லை என்று நக்கலாக பேசி இருந்தார்கள். இதனால் இருவருடைய முகமும் மாறியது.

பாண்டியன், வீட்டில் எல்லோருமே ஜோடி ஜோடியாக சந்தோஷமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சக்தி, அரசிக்கு ரூட் விட்டு கொண்டிருந்தார் ஆனால், அரசி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் எல்லோரும் பொங்கல் பண்டிகைக்காக புது ஆடை அணிந்து சந்தோஷமாக பொங்கல் வைத்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா இருவரும் கோபப்பட்டார்கள். அதற்குப் பின் அரசியை பார்த்தவுடன் சக்தி சிரித்தார். பின் எல்லோரும் பொங்கல் வைத்து வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் நல்லபடியாக மூன்று மருமகள் வைத்த பொங்கலுமே பொங்கி இருந்தது. இதை பார்த்து ராஜியின் சித்தப்பா கோபப்பட்டார். அவர்களுடைய பொங்கல் தாமதமாக தான் பொங்கியது. பின் எல்லோருமே பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி முடித்தார்கள். அப்போது பாண்டியன், ஒரு சாமியார் மூலம் என்னுடைய குலதெய்வம் எது என்று தெரிந்தது? நாம் எல்லோருமே குலதெய்வ கோயிலில் போய் பொங்கல் வைக்கலாம் என்று சொன்னார். கோமதி, சந்தோஷமாக சரி என்றார். பின் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.

நேற்று எபிசோட்:

தட புடலாக சாப்பாடு இருக்கணும் என்று ரொம்ப சந்தோஷமாக பாண்டியன் சொன்னார். அதோடு சம்மந்தி வீட்டில் எல்லாம் கூப்பிடலாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ராஜி சித்தப்பா, நீ அரசியை தான் கல்யாணம் செய்து கொள்ளணும். என் அண்ணன் இடம் ராஜியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் தான் அவர் மனம் மாறமாட்டார். அப்போ தான் சொத்து முழுக்க உன் பேருக்கு வரும் என்று மாஸ்டர் ப்ளான் போட்டார். இதை அறிந்த சக்தியும் தன்னுடைய அப்பாவின் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார். நேற்று எபிசோட்டில் பாண்டியன், மீனாவின் அப்பாவிற்கு போன் செய்து குலதெய்வ கோயிலுக்கு போவதற்கு வர சொன்னார். ஆனால், அவர் வழக்கம் போல் திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இது எல்லாம் நினைத்து மீனா ரொம்பவே வருத்தப்பட்டார். மறுநாள் எல்லோருமே குலதெய்வ கோயிலுக்கு சந்தோஷமாக பேசிக்கொண்டு சென்று விட்டார்கள். அங்கு பாண்டியன் உடைய அக்கா, மாமா இருப்பதை பார்த்து ரொம்ப எமோஷனலாக பழைய நினைவுகளை பற்றி பாண்டியன் பேசிக்கொண்டு இருந்தார். அதற்குப் பின் பாண்டியன், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோயிலில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் குடும்பம் செய்து கொண்டிருக்கின்றது.

சீரியல் ட்ராக்:

அப்போது தங்கமயிலின் அப்பா, அம்மா வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் எல்லோருமே உபசரிக்கிறார்கள். பின் மற்ற மருமகளின் அம்மா- அப்பா வரவில்லையா? என்று கேட்டவுடன் மீனா- ராஜியின் முகம் மாறுகிறது. அந்த சமயம் மீனாவின் அப்பா- அம்மா வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் மீனா சந்தோஷத்தில் குதிக்கிறார். மீனா அப்பா, நான் உனக்காக வரவில்லை. சாமி கும்பிட வந்தேன் என்று பேசுகிறார். இருந்தாலுமே மீனாவிற்கு தன்னுடைய அப்பா வந்தது சந்தோசம். ஆனால், ராஜி தனக்கு என்று யாரும் வரவில்லையே என்று வருத்தப்படுகிறார். இதை பார்த்து கதிர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்கு பின் நல்லபடியாக மூன்று பேருமே பொங்கல் வைத்து விடுகிறார்கள். பின் கோயிலில் போட்டிகள் வைக்கிறார்கள். அதில் பாண்டியன் குடும்பம் கலந்து கொள்கிறது. இத்துடன் சீரியல் முடிவடைகிறது.

behindtalkies AMP · Quick view
View full