மீனா அப்பா சொன்ன வார்த்தையால் ஷாக்கான செந்தில், தங்கமயில் அம்மா சொன்னது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 4/3/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' செந்தில், தன்னுடைய அப்பாவிடம் பேசி எப்படியோ படம் பார்க்க அனுமதி வாங்கி தந்தார். பின் இதைப்பற்றி சுகன்யாவுடன் பழனி சொன்னவுடன் அவர் மீண்டும் அதுக்கும் சண்டை போட்டார். அதற்குபின் வீட்டிற்கு வந்த பாண்டியன் எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அரசி போனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியன் கேள்வி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே சுகன்யா, அரசி ரொம்ப நல்ல பொண்ணு. அவள் மீது சந்தேகப்பட வேண்டாம் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்.

அதற்குப்பின் அரசி ரூமுக்கு போன சுகன்யா, நீ குமாரை காதலிக்கும் விஷயம் எனக்கு தெரியும். அவன் ரொம்ப நல்லவன். உன்னை அவனுக்கு பிடிக்கும் என்று அரசி மனசை மாற்றும் வகையில் பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா வந்தவுடன் பேச்சை சுகன்யா மாத்தி விட்டார். நேற்று எபிசோட்டில் செந்தில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், என்னுடைய அப்பா செய்யும் சில விஷயங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே மீனா, போக போக எல்லாம் மாறும், கவலைப்படாதே என்று அவருக்கு அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் பயிற்சி எடுக்க நேரமாகிவிட்டது என்று கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வர, அதை பற்றி கவலை கொள்ளாமல் ராஜியை கதிர் அழைத்துக் கொண்டு போனார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து கோமதி இடம் திட்டி இருந்தார். அதற்குப்பின் கிரவுண்டில் கதிர், ராஜிக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்க, அங்கு ராஜியின் அப்பா வந்தார்.

நேற்று எபிசோட்:

உடனே அங்கிருந்து நபர், ராஜி கனவை நிறைவேற்ற கதிர் ரொம்பவே போராடுகிறார் என்று சொன்னார். இதை கேட்ட ராஜியின் அப்பாவிற்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் தங்கமயில், வேலைக்கு போனார். அங்கு அவருடைய மேக்கப் எல்லாம் பார்த்து எல்லோருமே சிரித்தார்கள். டீச்சர் வேலைக்கு போகிறீர்களா? வேலைக்கான உடை அணிந்து கொண்டு வேலை செய்யுமா என்று ஓனர் திட்டி இருந்தார். பின் சாப்பிட்ட இடத்தை கிளீன் செய்ய சொன்னார்கள். அதை பார்த்து தங்கமயில் ரொம்ப வேதனை அடைந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயிலுக்கு அவருடைய அம்மா கால் செய்கிறார். அப்போது
ஓனர், வேலையை செய் என்று திட்டுகிறார். இதைக் கேட்டவுடன் தங்கமயில் அம்மா ரொம்ப வருத்தப்படுகிறார். அதற்கு பின் அவர் பாண்டியனை சந்தித்து தங்கமயில் வேலை பற்றி பேசினார். உடனே பாண்டியன், பெண்கள் வேலைக்கு போவது நல்லது தானே. சொந்தக்காலில் நிற்பது தான் அவர்களுக்கு மரியாதை என்று பேசுகிறார். அவர்களாலும் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சுகன்யா, பழனியின் அண்ணன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எல்லோரிடமும் சுகன்யா பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த பழனி, வீட்டுக்கு வா போகலாம் என்று சொன்னவுடன், சுகன்யா நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்கிறார். எதுவும் பழனியால் பேசவே முடியவில்லை. இன்னொரு பக்கம்
செந்தில்- மீனா இருவரும் மீனாவின் அப்பா வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது மீனாவின் அப்பா, உங்களால் இனிமேல் படித்து வேலைக்கு போவது என்பது கஷ்டமான விஷயம். நீங்கள் பணம் கொடுத்து வேலைக்கு சென்று விடுங்கள். 10 லட்சம் கொடுத்தால் கவர்மெண்ட் வேலை ரெடியாக இருக்கிறது என்று சொன்னவுடன் மீனா ஷாக் ஆகிறார். செந்தில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full