சுகன்யாவை வெளுத்து வாங்கிய மீனா, பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 1/4/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை பார்த்து கோமதி வருத்தத்துடன் கதிரிடம் புலம்பி கொண்டிருந்தார். பாண்டியனுமே தன் மகளை நினைத்து வருத்தப்பட்டார். இதை எல்லாம் கதிர், ராஜிடம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். இன்னொரு பக்கம் பழனி தன் அண்ணன் வீட்டில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சத்தத்தை கேட்டு சுகன்யா கோபப்பட்டு பழனியை எழுப்பி திட்டி இருந்தார். பழனியும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார். பின் சுகன்யா, வெளியே போய் தூங்குங்கள். இங்கு நான் தூங்கணும் என்று அனுப்பி விட்டார்.

மறுநாள் காலையில் ராஜியின் அம்மா வடிவு, பழனி வெளியே தூங்கி இருப்பதை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியா இருந்தார். அதற்குப்பின் சுகன்யா, பழனியை எழுப்பி இருந்தார். அவர் எழவில்லை என்றவுடன் மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ஓரமாக நின்று வடிவு பார்த்து விட்டார். பின் அந்த சமயம் பார்த்து அப்பத்தா வந்தவுடன் சுகன்யா நடித்தார். வெளியில் பழனி தூங்கியதற்கு ஏதேதோ காரணத்தை சொல்லி சுகன்யா தப்பித்தார். ஆனால், வடிவிற்கு பயங்கர கோபம் வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உண்மை தெரிந்திருக்குமோ என்று சுகன்யா பார்த்தார். நேற்று எபிசோட்டில் பாண்டியனின் மகன்கள், மருமகள்கள் எல்லோருமே அரசியின் படிப்பை பற்றியும் வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மருமகள்கள் மூவருமே அரசிக்கு சப்போர்ட் செய்து கல்லூரிக்கு போவது பற்றி பேசி இருந்தார்கள். பின் பாண்டியன் வந்தவுடனே அவருடைய மூன்று மகன்களுமே அரசி கல்லூரிக்கு போவதற்கு அனுமதி வாங்கி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் சுகன்யாவிடம் குமார், எப்படியாவது அரசியை கல்லூரிக்கு அழைத்து வாருங்கள். நான் அவரிடம் பேச வேண்டும். வேறு எங்கும் பேசுவதற்கு முடியாது என்று கேட்டார். அதற்கு சுகன்யா, சரி நாம் முயற்சி செய்கிறேன். அரசி மனம் மாறுவாரா என்று தெரியாது என்றார். அதற்கு பின் கல்லூரிக்கு அரசி தயாராக இருந்தார். கோமதி, செந்திலை கொண்டு போய் விட சொன்னார். உடனே சுகன்யா, நான் அரசியை கல்லூரிக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவுடன் மீனாவிற்கு சந்தேகம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, அரிசியை கல்லூரிக்கு சுகன்யா அழைத்து செல்ல சம்மதம் கொடுக்கிறார். ஆனால், மீனாவிற்கு சந்தேகமாக வருகிறது. பின் கல்லூரியில் குமார் அரிசிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது குமார், அரசி இடம் பேச வருகிறார். ஆனால், அரசி எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். சுகன்யாவும் அரசியை குமாரிடம் பேச சொல்கிறார். அப்போது செந்தில்- மீனா கல்லூரிக்கு வந்ததை பார்த்து சுகன்யா சந்தேகப்படுகிறார். பின் கல்லூரியில் குமார் அரசிடம் பேசுவதை பார்த்த செந்தில் பயங்கரமாக கோவப்பட்டு குமாரிடம் சண்டைக்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:

சுகன்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குப்பின் அரசியை கல்லூரிக்கு போக சொல்லிவிட்டு குமாருக்கு செந்தில் எச்சரிக்கை எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் மீனா, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. வீடே பத்திக் கொண்டிருக்கிறது. இதில் உங்களுக்கு குளிர் காயணுமா? என்றெல்லாம் கோபமாக பேசுகிறார். சுகன்யாவும் என்னென்னவோ சொல்லி சமாளிக்க பார்க்கிறார். மீனா பேசியதில் சுகன்யா அழுது கொண்டே வீட்டிற்கே வந்தார். பின் சுகன்யா, மீனா-செந்திலை பற்றி தவறாக சொல்லி இருந்தார்கள். குமார் வந்த விஷயத்தை தெரிந்த பாண்டியன் கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full