சக்திவேல் குடும்பத்திற்கு ஆப்பு வைத்த மீனா, வேதனையில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளியே இருந்த குமார், எப்படியாவது பாண்டியனை கஷ்டப்படுத்தனும் என்ற நினைத்து அரசியை வெளியே கூப்பிட்டார். பின் குமார், பர்ஸ் எடுத்துக் கொண்டு வர சொல்கிறார். அரசியும் எடுத்து வந்து தந்தார். ஆனால், அந்த பர்ஸ் இல்லை என்று குமார் அரசி தலையில் அடித்தார். இதை எல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து வண்டியை கீழே தள்ளிவிட்டு உள்ளே போனார். அதற்குப்பின் குமார், உன்னை அடித்தால் உன் அப்பா கஷ்டப்பட்டார். அதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறேன். நீ எவ்வளவு சித்திரவதை படப்போகிறாய் பார் என்று சொன்னார்.
அதற்குப்பின் குமாரை சாப்பிட்ட அவர் அம்மா அழைத்தார். ஆனால், அவர் அரசியுடன் சாப்பிடுகிறேன் என்று பெட்ருமில் போய் உட்கார்ந்து கொண்டார். பின் அரசியிடம் குமார் சாப்பாட்டை மேலே கொண்டு வா என்று சொன்னார். அரசியை மேலும் கீழும் ஆக வேலை வாங்கி அலைய வைத்தார். பின் குமார், பாண்டியனையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி திட்டிக் கொண்டிருந்தா. கோபத்தில் அரசி குழம்பை குமாரின் மூஞ்சிலேயே ஊற்றி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமார் தலை முழுவதுமே அரசி சாம்பாரை கொட்டி விட்டார். சூடு காரம் தாங்க முடியாமல் குமார் கதறினார். மொத்த குடும்பமே வேலை வந்துவிடுகிறது. சக்திவேல், குமார் அம்மா, அப்பத்தா எல்லோருமே என்ன ஆனது? என்று கேட்க, தவறி சாம்பார் மேலே கொட்டியது என்று ஏதே சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் சக்திவேல், குமாரை பயங்கரமாக கிண்டல் செய்தார். இன்னொரு பக்கம் கதிர், தேர்வு ரிசல்ட் வருவதால் வீட்டில் எல்லோரும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் நிலத்தை விற்று லட்சக்கணக்கில் கட்டு கட்டாக முத்துவேல்- சக்திவேல் இருவரும் பணத்தை வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது வந்த சுகன்யா, பணத்தை பார்த்து வாயை பிளந்து பேசி இருந்தார். பின் பழனியை எப்படியாவது இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முத்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர், ராஜி இருவருமே பாண்டியனின் கடைக்கு போனார்கள். அங்கு ராஜி, கடையில் வியாபாரம் பார்ப்பதால் பாண்டியன், அது எல்லாம். பரீட்சைக்கு படி என்றார். உடனே ராஜி, உங்களுக்கு தான் போலீஸ் வேலை பிடிக்காது என்றவுடன் பாண்டியன் வருத்தப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, போலீஸ் வேலைக்கு படிப்பதற்கு பாண்டியன் எந்த ஒரு தடையுமே போடவில்லை அமைதியாகவே இருக்கிறார். இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்துவிட்டு வந்த சுகன்யா, பழனி இடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். வழக்கம் போல் பழனியை ரொம்ப ஏளனமாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்ட மீனா, பழனிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் மீனாவை, சுகன்யா திட்டுகிறார். அதற்குப்பின் மீனா, சுகன்யாவிடம் போட்டு வாங்கி சக்திவேல் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று எல்லாமே தெரிந்து கொள்கிறார். இதனால் மீனா யாருக்கும் தெரியாமல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து சொல்லி விடுகிறார்.
சீரியல் டிராக்:
இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, செந்திலை சந்தித்து அரசாங்க வேலைக்கு பணம் கட்டுவது தொடர்பாக விசாரிக்கிறார் . செந்திலும் ரெடி பண்ணுகிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை நினைத்து ரொம்ப வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார். தங்கமயில், சரவணனுக்கு ஃபோன் செய்துமே அவர் எடுக்கவே இல்லை. அதற்குப்பின் மீனாவிடம் போன் செய்து தங்கமயில் பேசுகிறார். பின் மீனா, சரவணன் இடம் போன் கொடுத்து பேச சொல்கிறார். ஆனால், அவர் பேசாமல் என்னுடைய போனில் பேசுகிறேன் என்று கொடுத்து விடுகிறார். இதனால் மீனாவிற்கு சரவணன் மீது சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது