செந்தில் செய்த வேலையால் கொந்தளித்த மீனா, குமாரால் அரசிக்கு வந்த ப்ரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், பணத்தை செந்தில் இடம் கொடுத்து பேங்கில் போட சொன்னார். செந்தில், அந்த பணத்தை வைத்து தன்னுடைய மாமனாரிடம் கொடுக்க நினைத்தார். பின் இதைப்பற்றி மீனாவிடம் செந்தில் சொன்னார். உடனே மீனா, வேண்டாம். பேங்கில் போடுங்கள். லஞ்சம் கொடுத்து வேலை வாங்க கூடாது என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் வீட்டில் பணத்தை வைத்துக்கொண்டு குமார்-சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சக்திவேல் வீட்டில் சோதனை செய்தார்கள்.

சக்திவேல் எடுத்து சொல்லியுமே அவர்கள் கேட்கவில்லை. வீட்டில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு, நீங்கள் எதுவாக இருந்தாலும் ஆபீஸில் வந்து பேசுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அதற்குப்பின் இதை பற்றி முத்துவேலிடம் சக்திவேல் சொன்னார். பின் சக்திவேல், பாண்டியன் மகள் வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அரசியை திட்டினார். அதற்குப்பின் முத்துவேலுக்கு சம்பந்தப்பட்ட எல்லா இடங்களின் மீது ரெயிடு நடத்துவதாக தகவல் கிடைக்கிறது. இதனால் பதறி எடுத்துக் கொண்டு சக்திவேல், குமார் போனார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் மீனா, சக்திவேல் வீட்டில் ரெய்டு நடந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த சுகன்யா, உங்கள் அண்ணன் வீட்டில் அதிகாரிகள் பணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள். கடையில் எல்லாம் ரெய்டு நடத்துகிறார்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு கோமதி, ராஜி இருவரும் ஷாக்கானார்கள். ஆனால், அது மீனா செய்த வேலை தான் யாருக்கும் தெரியவில்லை. இன்னொரு பக்கம் செந்தில், தன் மாமனாரிடம் அரசாங்க வேலைக்காக பணத்தை கொடுத்து விட்டார். ஆனால், இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்தார்.

நேற்று எபிசோட்:

பாண்டியன், பேங்கில் பணத்தை போட்டு விட்டாயே என்று கேட்டதற்கு, செந்தில் ஆமாம் என்றார்.
அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன் இடம் பாண்டியன், தங்கமயில் எப்போது வீட்டிற்கு வருவார்? என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தார் சரவணன். இதனால் செந்திலுக்கு சரவணன் நடவடிக்கையில் சந்தேகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தங்கமயில் வேதனையில் இருந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் தங்கமயில் வாழாவெட்டியாக வந்துவிட்டாள் என்று அவருடைய பெற்றோரிடம் விசாரித்தார்கள். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, அவர்களை திட்டிய அனுப்பி விட்டார். தங்கமயிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் அழுது இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் அம்மா, இன்னும் இரண்டு நாள்தான் உனக்கு டைம். நீ உன்னுடைய மாமியார் வீட்டுக்கு கிளம்பும் வேலையை பார் என்று தங்கமயிலை மோசமாக திட்டி விடுகிறார். இதனால் தங்கமயில், சரவணன் வேலை செய்யும் இடத்திற்கு போகிறார். ஆனால், அவர் அங்கு இல்லை. பின் சரவணனுக்கு போன் செய்து பேசுகிறார் தங்கமயில். அப்போது சரவணன், நீ எனக்கு போன் செய்யாதே. உன்னிடம் பேச விருப்பமில்லை என்று திட்டி போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் சக்திவேல்- முத்துவேல் எல்லோருமே பணம் பறிபோனதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே வரி கட்டவில்லையா? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்க, சக்திவேல் வழக்கம்போல எல்லோரிடமும் கத்தி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் அவர், அரசி வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் அப்பத்தா சக்திவேலை திட்டுகிறார். இன்னொரு பக்கம் செந்தில், பணத்தை மாமனார் இடம் கொடுத்த விஷயத்தை சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். உடனே மீனா, நீங்கள் பணத்தை வாங்கி பேங்கில் போடுங்கள். இல்லையென்றால் உண்மையை மாமாவிடம் சொல்லுங்கள் என்கிறார். ஆனால், செந்தில் அமைதியாக இருக்கிறார். அதற்கு பின் ரூமில் குமார், அரசி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குமார், நீ ஏதாவது போன் செய்தாயா? என்று கேட்கிறார். அதற்கு அரசி, நான் எல்லாம் செய்யவில்லை. இந்த உண்மை தெரிந்திருந்தால் கண்டிப்பாக நானே சொல்லி இருப்பேன் என்று திமிராக பேசுகிறார். இதனால் கோபத்தில் குமார், அரசியின் கழுத்தைப் பிடித்து நெருக்குகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full