தங்கமயிலின் செயலால் சந்தேகப்படும் மீனா, கோபத்தில் அந்நியனான பாண்டியன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியனுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி எல்லோரும் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன் 50வது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாட, பாண்டியன் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார். அதற்குப்பின் பாண்டியனுக்கு வாங்கி வைத்த கிப்ட்டை கொடுதார்கள். பின் மொத்த பாண்டியன் குடும்பமே கோயிலுக்கு போயி இருந்தார்கள். அந்த சமயம் பாத்து கோமதியின் அண்ணன், சக்தி இருவருமே வந்தார்கள்.
பாண்டியன் சந்தோசமாக இருப்பதை பார்த்த கோமதியின் அண்ணன், நம்ம வீட்டு பெண்ணை தூக்கி அசிங்கப்படுத்தியது போல் அவருடைய மகளை தூக்குடா என்று சொன்னார். இந்த வாரம் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்க, அவர் ரொம்ப பயந்தார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்பி இருந்தார். பின் இந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் தங்கமயில் சொல்ல அவர், நீயே சமாளி என்று போனை வைத்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மறுநாள் காலையில் மீண்டும் ஆதார் கார்டை பற்றி தங்கமயிலிடம் பாண்டியன் கேட்க, அவர் பயத்தில் அமைதியாகவே இருந்தார். இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வந்தது. பின் மீனா, ஆதார் கார்டை பற்றி பேசினாலே நீங்க ஏன் ரொம்ப பதட்டமாகிறீர்கள்? இது ஒரு சாதாரண விஷயம் தானே என்று கேட்க, நான் நல்லா தான் இருக்கிறேன் என்று தங்கமயில் சமாளித்தார். அதற்குப்பின் அம்மா வீட்டிற்கு போன தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்ல, அவர் ஏதாவது சொல்லி சமாளி என்று ஆறுதல் சொல்லி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பாவை பார்த்து பாண்டியன் ஆதார் கார்டை வாங்கி விட்டார். இதை தங்கமயிலின் அப்பா வீட்டில் சொன்னவுடன் தங்கமயில் பதறுகிறார். நேற்று எபிசோடில் தன் வாழ்க்கையே போய்விட்டதாக நினைத்து தங்கமயில் புலம்ப, எல்லோரும் பாண்டியன் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஆதார் கார்டை செந்தில் வீட்டில் கொடுக்க, எல்லோருமே மாறி மாறி தங்கமயிலின் போட்டோவை மட்டும் தான் பார்த்தார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த தங்கமயில் ஆதார் கார்டை பற்றி கேட்க, பத்திரமாக இருக்கிறது என்று கோமதி சொன்னார்.
இன்றைய எபிசோட்:
மேலும், யாருக்குமே எந்த விஷயம் தெரியவில்லை என்று தங்கமயில் கொஞ்சம் நிம்மதி அடைகிறார். இருந்தாலும் ரிஜிஸ்டர் பண்ணி முடித்து ஆதார் கார்டு கையில் வரும் வரை பயமாக இருக்கிறது என்று தங்கமயில் புலம்ப, எதற்கும் கவலைப்படாதே அவர் அம்மா சமாதானம் செய்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், பாண்டியன் பழைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஆயிரம் ரூபாய் கணக்கு வரவில்லை என்று தன் மகளிடம் கேட்க, அவரும் ஆமாம், வரவில்லை என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே செந்தில், சித்தப்பா இருவருமே பயப்படுகிறார்கள். கதிர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதால் பாண்டியன், கதிர் தான் பணத்தை எடுத்து இருப்பான் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பேசி இருக்கிறார். உடனே ராஜி கோபப்பட்டு, அவர் எதற்கு எடுக்கணும்? அவர்தான் வேலைக்கு போகிறார் என்று தன் கணவனுக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். பின் ரூமில் இதைப்பற்றி கதிர்-ராஜி இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அதற்குப்பின் தங்கமயில் செந்தில் இடம் இருக்கும் தன்னுடைய ஆதார் கார்டை வாங்க நினைக்கிறார். ஆனால், எடுக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு தங்கமயில் மீது சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.