செந்தில் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த மீனா, வெளுத்து வாங்கும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியனிடம் கதிர்-ராஜி இருவருமே ஆசீர்வாதம் வாங்கினார்கள். கதிருமே தன் அப்பாவின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை கண்டு ரசித்தார். பின் எல்லோருமே பாண்டியன் பெயரை வைத்தது நினைத்து பெருமையாக கதிரை பேசினார்கள்.
பின் பாண்டியன், கடையில் தன் மகன் தன்னுடைய பெயரை வைத்தது நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். வியாபாரத்தை கூட பார்க்காமல் தனக்குத்தானே பேசி சிரித்து கொண்டிருந்தார்.
ராஜி- கதிர் இருவருமே டிராவல்ஸ் தொடங்கியதை பற்றி ரொம்ப ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிருக்கு முதல் ஆர்டர் கிடைத்தது. அதனால் இருவருமே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் கதிரின் நண்பர் வந்ததால் ராஜியிக்கு பயங்கர கடுப்பு ஆனது. இன்னொரு பக்கம் வீட்டில் தங்கமயில் அம்மா, அப்பா, தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்க மயிலின் அப்பா, கதிரிடம் வேலைக்கு போகலாம் என நினைக்கிறேன் என்றார். உடனே பாண்டியன், கதிருக்கு ஆட்கள் வேண்டுமா? என்று தெரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
என்னுடைய மளிகை கடைக்கு வேலை செய்ய ஆள் தேவை. உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் அங்கு வந்து வேலை செய்யுங்கள் என்றார். தங்கமயில் வேண்டாம் என்றார். ஆனால், அவருடைய அம்மா நாளைக்கு அனுப்பி விடுகிறேன் என்றார். அதற்குப்பின் தங்கமயில் தன்னுடைய அப்பா, அம்மாவை தனியாக அழைத்து திட்டினார். ஆனால், அவர்கள் அதை பெரிதாக எடுக்கவில்லை. அதற்கு பின் தங்கமயில் அப்பா, பாண்டியன் கடைக்கு சென்று விசாரித்தார். ஆனால், சரவணனுக்கு அதில் விருப்பமில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா, எனக்கு அரசாங்கத்தில் இருந்து வீடு குவாட்டர்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார். உடனே செந்தில், அங்கே போகலாம் என்கிறார். அதற்கு மீனா, அங்கு போக எனக்கு விருப்பமில்லை. இங்கேயே இருக்கலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் அப்பா, கடைக்கு வேலைக்கு வருவது சரவணன் பிடிக்கவில்லை. இதைப்பற்றி சரவணன் தங்கமயில் இடம் சொல்லி சண்டை வாங்குகிறார். தங்கமயில், அப்பா இனிமேல் கடைக்கு வர மாட்டார் என்று சொல்கிறார்.
அதற்கு பின் ராஜி, கதரின் டிராவல்ஸ்க்கு பயங்கரமாக உதவி செய்து கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்து பாண்டியன் ரொம்ப பெருமைப்படுகிறார். அதற்குப்பின் பாண்டியன் சரவணனுக்கும் பழனிக்குமே வேலையை பிரித்து கொடுக்கிறார். இதை கவனித்த சுகன்யா, எல்லோரும் போன பிறகு பழனியிடம் வழக்கம் போல சண்டை வாங்குகிறார். பாண்டியன், உங்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறார். நீங்கள் எடுபுடி என்றெல்லாம் சொல்கிறார். இதனால் பழனி கோபப்பட்டு சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் செந்தில், மீனாவின் அப்பா- அம்மா வீட்டிற்கு சென்று குவாட்டர்ஸ்க்கு போகும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். அவர்களுமே, நீங்கள் தனியாக போங்க, அப்பதான் உங்களுக்கு மரியாதை இருக்கும் என்றெல்லாம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.