சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்கிய சுகன்யா, கொந்தளித்த மீனா - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, கர்ப்பம் இல்லாத விஷயத்தை குத்தி காண்பது போல பேசியதால் தங்கமயிலுக்கு இன்னும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்னொரு பக்கம் டியூஷன் நடத்தும் இடத்தில் கதிரின் லோன் விஷயமாக ராஜி பேசினார். அவர்களுமே உதவி செய்வதாக சொன்னார்கள். அதேபோல் கதிரின் நண்பர்களிடமும் லோன் விசயமாக ராஜி பேசினார். பின் ராஜி-கதிர் இருவருமே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது லோன் விஷயத்தைப் பற்றி ராஜி சொன்னார். கோபத்தில் கதிர், நீ எனக்காக எங்கும் அலைய வேண்டாம்.
நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று கோபமாக பேசினார். இதனால் கோபப்பட்ட ராஜி, இனிமேல் நான் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொன்னார். அதற்கு பின் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பழனி-சுகன்யா இருவருமே பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது டிராபிக் அதிகமாகுவதால் ஒரு இடத்தில் பழனி நின்றார். அந்த இடத்தில் தான் சுகன்யாவின் முன்னாள் கணவன் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் பயந்து போன சுகன்யா, இங்கிருந்து வண்டியை எடுங்கள் எடுங்கள் என்று பழனி இடம் சொன்னார். பழனிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், சுகன்யா சொல்வதால் வண்டியை அங்கிருந்து எடுத்து சென்று விட்டார் பழனி.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பழனி நன்றாக குறட்டை விட்டுக்கொண்டு தூங்கியிருந்தார். சுகன்யா, தன்னுடைய முதல் கணவரை பார்த்ததால் ரொம்பவே பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்து பழனி, சுகன்யாவை சமாதானம் செய்து தூங்க வைத்தார். மறுநாள் காலையில் ப்ராக்டிஸ் செய்வதற்காக கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்றிருந்தார்கள். கதிர் திட்டியதால் ராஜி கோபத்தில் தான் இருந்தார். கதிர் சொல்வதையெல்லாம் ஒழுங்காகவே கேட்கவில்லை.
கடந்த வாரம் எபிசோட்:
இதை பார்த்த கதிர், நீ எனக்காக கஷ்டப்பட வேண்டாம். அதற்காகத்தான் நான் சொன்னேன். நீ உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. உன்னால் முடியும், நீ சீக்கிரம் டிராவல்ஸ் ஆரம்பிப்பாய் என்று எனக்கு என்கரேஜ் பண்ணு. அதுவே போதும் என்றெல்லாம் சொல்வதால் ராஜி அமைதியாகினார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் என்னெல்லாம் வாங்கலாம் என்று லிஸ்ட் போட்டு வைத்திருந்தார். அதை பார்த்த மீனா சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிச்சனில் கோமதி, தங்கமயில், சுகன்யா மூவருமே சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். மீனா வேலைக்கு நேரம் ஆகிறது என்று கிளம்புவதால் சுகன்யா வழக்கம் போல் வம்பு இழுத்து மீனாவை பேசுகிறார். இதனால் மீனாவும் பதிலடி கொடுக்கிறார். அதற்குப்பின் பாண்டியன் வலிக்கி கீழே விழுந்ததால் அவருடைய காலில் அடிபட்டு இருக்கிறது. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். அந்த சமயம் பார்த்து மீனாவின் அப்பா, அம்மா இருவரும் வருகிறார்கள். அப்போது மீனாவின் அம்மா, மாப்பிள்ளைக்கு வேலை கிடைத்ததால் குலதெய்வ கோயிலுக்கு போகணும் என்று சொல்கிறார். பாண்டியன், குடும்பத்துடன் எல்லாரும் சென்று வாருங்கள் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது சுகன்யா, செந்திலுக்கு பணம் கொடுத்த விஷயத்தை பற்றி சொல்கிறார். பழனி தடுத்துமே சுகன்யா கேட்கவில்லை. மீனா தான் லோன் போட்டு பணம் தந்தார் என்று சொன்னார். இதைக் கேட்டு மீனாவின் அப்பா, அம்மா இருவரும் கோபித்து கொண்டு செல்கிறார்கள். பின் கோமதி, சுகன்யாவை திட்டுகிறார். ஆனால், சுகன்யா எதுவுமே பேசவில்லை. உண்மை தெரிந்து விட்டது என்று சந்தோஷத்தில் இருக்கிறார். இதனால் கோபத்தில் மீனா, சுகன்யாவை பார்த்து என் விஷயத்தில் நீங்கள் தலையிட தேவையில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ராஜி, குமாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜி, கதிர் பற்றியும் கதிர் தனக்காக செய்வது எல்லாம் சொல்கிறார். இதனால் குமார் மனம் மாறுவது போல காண்பிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.