குமாரின் நிலைமையை கண்டு பயந்து இருக்கும் மீனா, கதிர் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மாப்பிள்ளை சதீஸ், போட்ட மெசேஜை பற்றி மீனா- ராஜி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, அவர் ரொம்ப நல்லவர். தயவு செய்து அவரை ஏற்றுக்கொள் என்று அரசிக்கு அறிவுரை சொன்னார். அரசியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். மறுநாள் காலையில் நடன போட்டிக்கான இரண்டாம் சுற்று நடைபெற்றது. ராஜி எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று மீனாவிடம் சொன்னார். அதற்கு மீனா, நீ அரசியை அழைத்துக் கொண்டு கிளம்பு. நான் அத்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்
பின் கோமதி கோயிலுக்கு கிளம்பலாம் என்று மீனாவை கூப்பிட, மீனா ஏதேதோ சொல்லி சமாளித்தார். கடைசியில் ராஜி நடன போட்டிக்கு சென்ற விஷயம் கோமதிக்கு தெரிந்தது. அதை தடுத்து நிறுத்த கோவிலுக்கு கோமதி வந்தார். ஆனால், ராஜி அதை கண்டுகொள்ளாமல் மேடையில் ஏறி நடனமாடி இருந்தார். ராஜி நடனத்தை பார்த்து ஊரில் உள்ள எல்லோருமே கைத்தட்டி கொண்டாடி இருந்தார்கள். கோமதியும் மனது மாறி ராஜியை பாராட்டி இருந்தார். இன்னொரு பக்கம் குமார், அரசி இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் கோயில் திருவிழாவில் ராஜி நடனம் ஆடியதற்கு எல்லோருமே அவரிடம் செல்ஃபி இருந்தார்கள். ஆனால், அங்கிருந்த சில இளைஞர்கள் ராஜியை கிண்டல் அடிக்கும் வகையில் பேசி இருந்தார்கள். இதனால் கொந்தளித்த மீனா அவர்களிடம் சண்டைக்கு போனார். ஓரு வழியாக கோமதி அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்து விட்டார். பின் ராஜி, கதிருக்கு போன் செய்து நடன போட்டியில் கலந்து இருப்பதை சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை சதீஷ், அரசிக்கு போன் செய்தார். அரசியும் சதீஷ் இடம் பேச உள்ளே போனார். அரசி ரூமில் யாருக்கும் தெரியாமல் குமார் ஒளிந்து கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
குமாரை பார்த்தவுடன் அரசி ஷாக் ஆனார். பின் குமார், நீ எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாய். நான் விடமாட்டேன். நீ என்னை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசியை கட்டாயப்படுத்தி இருந்தார். பின் அரசி, ரூமுக்குள் கோமதி வந்தார். அப்போது அரசியை குமார் வாயை பொத்தி மிரட்டி இருப்பது தெரிந்தது. உடனே மீனா, ராஜி இருவருமே வந்து விட்டார்கள். இருந்தாலுமே அரசியை குமாரிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் கோபம் தாங்க முடியாமல் மீனா ஒரு இரும்பு பாத்திரத்தால் குமாரின் தலையில் அடிக்க, அவர் கீழே விழுந்து விட்டார். குமார் பேச்சு, மூச்சு இல்லாமல் விழுந்து கிடந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து இறந்துவிட்டார் என்று மீனா, கோமதி, ராஜி, அரசி நினைத்துக் கொள்கிறார்கள். பின் எவ்வளவோ குமாரை எழுப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால், குமார் எழவே இல்லை. இதனால் குமாரின் நிலைமையை நினைத்து ஒவ்வொருவரும் கதறி அழுகிறார்கள். மீனா, தன்னால் தான் இந்த நிலைமை என்று குற்ற உணர்ச்சியில் பதறுகிறார்.அதோடு போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொல்கிறேன் என்று மீனா சொல்கிறார். ஆனால், கோமதி-ராஜி இருவருமே தடுத்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ராஜி, கதிருக்கு போன் செய்து குமார் வந்த விஷயத்தையும் அவன் இறந்த விஷயத்தையும் சொல்கிறார். இதனால் கதிர் ஷாக் ஆகிவிடுகிறார். அதற்குப்பின் கதிர், இந்த உண்மையை போலீஸிடம் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், தைரியமாக இருங்கள் என்று ராஜிக்கு ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, செந்திலுக்கு போன் செய்து குமாரை கொலை செய்த விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டவுடன் செந்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.