செந்தில் செய்த வேலையால் கொந்தளித்த மீனா, காந்திமதி போட்ட கண்டிஷன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், சுகன்யாவுக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது சுகன்யா, ஒரு கிப்ட் வாங்க கிட்ட காசு இல்லையா? உங்க மச்சான் கிட்ட கேக்க வேண்டியது தானே என்றார். அதற்கு பழனி, நான் கேட்டேன். அவர்தான் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், நாமும் இந்த மாதிரி புது வீட்டுக்கு குடுத்தனம் போகலாமா? என்று கேட்டார். அதற்கு சரவணன், நீ படித்து பட்டம் வாங்கி வேலைக்கு போன கதை எல்லாம் வீட்டில் சொல்லு அப்புறம் போகலாம் என்று திட்டி விட்டார்.
கோமதி, மீனாவை விட்டு பிரிய மனமில்லாமல் ரொம்ப எமோஷனலாக அழுது கொண்டு அங்கிருந்து வந்தார். மீனாவுமே எல்லாரும் கிளம்புவதை நினைத்து அழுதார். ஆனால், செந்தில் அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. அதற்குப்பின் குமார், ராஜியை பார்ப்பதற்காக டிராவல்ஸிற்கு வந்திருந்தார். அப்போது குமார், அப்பத்தாவிற்கு 75வது பிறந்தநாள் வருகிறது. அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். அப்பாவை எதுவும் பேசவிடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். உன் வீட்டில் எல்லோருமே வந்தாலும் சந்தோஷம்தான் என்றெல்லாம் சொன்னார். அதற்கு ராஜி சம்மதித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் செந்தில் வீட்டிற்கு வரவில்லை என்று மீனா போன் செய்து பேசி இருந்தார். ஆனால், செந்தில் நிறைய குடித்துவிட்டு போதையில் இருந்தார். இன்னொரு பக்கம் கோமதி, மீனாவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதற்கு பாண்டியன், ஆறுதல் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று சரவணன், தங்கமயில் உங்களுடன் வீட்டிலேயே இருக்கட்டும் என்றார். உடனே தங்கமயில், சாதுரியமாக பேசி சரவணன் போட்ட பந்தை திருப்பி அவருக்கு அனுப்பி விட்டார். இருந்தாலுமே கோமதி, மீனாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்- பழனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனி, தன்னுடைய அம்மாவின் 75வது பிறந்தநாள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் ராஜி, குமார் சொன்னது நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த கதிர், பாட்டியின் 75வது பிறந்தநாள் பற்றி சொல்வதால், ராஜியுமே என்ன செய்வது என்று புரியவில்லை என்று சொல்கிறார். பின் இருவருமே பிறந்தநாளுக்கு போவதை பற்றி பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் செந்தில், வீட்டிற்கு நிறைய குடித்துவிட்டு வருகிறார். இதை பார்த்து மீனா பயங்கரமாக சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
செந்தில், உன் வேலையை பார் என்று தெனாவட்டாக பேசிவிட்டு செல்கிறார். இதனால் மீனா ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காந்திமதியின் 75வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முத்துவேல் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காந்திமதி, என்னுடைய பிறந்தநாளுக்கு ரெண்டு குடும்பமும் ஒன்று சேரனும். என்னுடைய மகன்கள், மகள், பேரப்பிள்ளைகள் எல்லோருமே வரணும் என்று சொல்கிறார். சக்திவேல், இது நடக்காத ஒன்று. அவர்களுடன் நாங்கள் சேர மாட்டோம் என்கிறார். அதற்கு காந்திமதி, எனக்கு பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.