மீனா -ராஜி செய்த வேலையால் பாண்டியன் வீட்டில் வெடித்த பூகம்பம், அடுத்து என்ன ? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 31/8/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வடிவு, நகை பற்றி மறைத்து வைத்த விஷயம் ராஜி அப்பாவிற்கு தெரிந்து பயங்கரமாக சண்டை போட்டார். இருந்தும் நகை எங்கே இருக்கு? என்று வடிவு சொல்லவில்லை. இன்னொரு பக்கம், சரவணன்-தங்கமயில் அனுப்பிய போட்டோவால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருந்தது. பின் தங்கமயில் அனுப்பிய போட்டோவை வைத்து ராஜி- மீனா இருவரும் போன் செய்து பங்கமாக கலாய்த்தார்கள். இன்னொரு பக்கம் வீடியோ கால் மூலம் செந்தில், கதிர் இருவரும் சரவணனுக்கு போன் செய்து கிண்டல் செய்தார்கள்.

மேலும், ராஜியின் அப்பா, நகை எங்கே? என்று வடிவை கேட்டு கோபப்பட்டு பேச, இருவருக்கும் இடையே பயங்கரமாக சண்டை நடந்தது. கடைசியில் வீட்டில் உள்ளவர்கள் உண்மையை உளறி விட்டார். இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து தன் அண்ணனிடம் சொல்லி இருந்தார். ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள். பதிலுக்கு பாண்டியனும் சண்டைக்கு போக, கடைசியில் ராஜி செய்த வேலை தெரிந்து மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மேலும், கோமதி அண்ணன்கள், பாண்டியனை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். ஆனால், பாண்டியன் வேதனையில் வீட்டுக்கு வந்து விட்டார். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது ராஜி, கதிர் இரவு-பகல் என்று பார்க்காமல் வேலைக்கு போவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் போனேன் என்று சொன்னார். உடனே கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். எனக்கும் என் அப்பாவிற்கும் இடையே ஆயிரம் சண்டை இருக்கும். உன்னால் என் அப்பா அசிங்கப்பட்டு இருக்கிறார்? என்றெல்லாம் கேட்க, கோமதியும் பயங்கரமாக ராஜுவை திட்டுகிறார்.

சீரியல் கதை:

கடைசியில் மீனா, ராஜி வேளைக்கு சென்ற விஷயம் தெரியும் என்று உளற பாண்டியனுக்கு கோபம் அதிகமாகி விடுகிறது. மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்று பேசுகிறது. கடைசியில் பாண்டியன் வருத்தப்பட்டு திட்டிவிட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜு வீட்டில் பாண்டியன் பற்றி மோசமாக பேசுகிறார்கள். அப்போது வடிவு -ராஜி அப்பா இருவருக்குமே சண்டை நடந்தது, நேற்று எபிசோட்டில் கோமதியிடம் மன்னிப்பு கேட்க ராஜி, மீனா இருவருமே சமையல் கட்டுக்கு போனார்கள். ஆனால், கோமதி முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் செந்தில், பாண்டியன் பேசி கொண்டிருந்த போது, கதிர் வந்து மன்னிப்பு கேட்கிறார். பாண்டியனும் கதிர் மீது கை போட்டு மனதை விட்டு பேசுகிறார். இன்னொரு பக்கம் ராஜி, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அழ, மீனாவும் அவருக்கு ஆறுதல் சொன்னார். கடைசியில் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிடும் போது, மீனா- ராஜி இல்லை. உடனே அவர்களை பாண்டியன் கூப்பிடுகிறார். ராஜி-மீனா வந்தவுடன் பாண்டியன் கோமதி கிளம்பி விட்டார். அப்போது கோமதி, நீங்கள் பண்ணியதை மறக்க மாட்டேன், மன்னிக்க மாட்டேன் என்று திட்டுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், பாண்டியன்- கோமதி நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய எபிசோட்:

அப்போது சரவணன் போன் செய்து நாங்கள் பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டோம் என்று சொன்னவுடன் பாண்டியனின் குரலில் தடுமாற்றம் தெரிந்தது. உடனே கோமதியிடம் கேட்க, நடந்தது எல்லாம் அவர் சொல்லிவிடுகிறார். இதனால் சரவணன் ரொம்ப வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ராஜி- கதிர் இடையே பயங்கரமாக சண்டை நடக்கிறது. ராஜி மன்னிப்பு கேட்டும் கதிர் ஏற்றுக் கொள்ளாமல் திட்டிவிட்டு வெளியே வந்து விட்டார். இன்னொரு பக்கம் செந்தில், மீனா இடையே சண்டை நடக்கிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகம் ஆகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full