பழனி புதுக்கடை திறப்பதால் கொந்தளித்த கோமதி, பாண்டியன் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, நான் ஆபீசிலும் வேலை செய்துவிட்டு வீட்டிலும் என்னால் தனியாக வேலை செய்ய முடியாது. நீங்கள் உதவி செய்தால் நான் செய்யப்போகிறேன் என்றார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி அங்கிருந்து கிளம்பி வந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன், நீ தனியாக கடை ஆரம்பித்தால் எனக்கு சந்தோஷம்தான். நல்லபடியாக தொடங்கு. நாங்கள் எப்போதும் உனக்கு சப்போர்ட்டாக இருப்போம் என்று மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல் பழனிக்கு வாழ்த்துக்கள் சொன்னார். இதை கேட்டு பழனிக்கு சந்தோசமாக இருந்தது.
சரவணன், தங்கமயில் இல்லாத நேரம் பார்த்து ஆதார் கார்டு கேட்க, மாணிக்கம் தந்து விட்டார். அதில் தங்கமயில் தன்னைவிட இரண்டு வயது பெரியவள் என்று தெரிந்தவுடன் சரவணன் ஷாக் ஆனார். பின் யாரிடமும் அதைப்பற்றி பேசாமல் தங்கமயிலை அழைத்துக் கொண்டு தனியாக வந்தார் சரவணன். தங்கமயிலுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் சரவணன், உனக்கு உண்மையிலேயே வயது என்ன? இன்னும் என்னிடம் என்னென்ன எல்லாம் மறைத்திருக்கிறாய்? என்றார். தங்க மயிலுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. நான் எதையும் மறைக்கவில்லை என்று சமாளித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே ஆதார் கார்டை சரவணன் காண்பித்தார். அதை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், இது என்னுடைய கார்டே இல்லை என்று பொய் சொன்னார். கோபத்தில் சரவணன், இன்னும் எவ்வளவுதான் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவாய். மொத்த குடும்பமே இப்படித்தான் ஏமாற்றுக்காரர்களா? இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று பயங்கரமாக கத்தினார். பயந்து போன தங்க மயில் கெஞ்சி கதறி அழுதார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. இன்னியோடு உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன். வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல்கிறேன். வண்டியில் ஏறி என்று தங்கமயிலை அழைத்துக் கொண்டு வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயிலை அழைத்துக் கொண்டு கோபத்தில் சரவணன் வீட்டிற்குள் வருகிறார். ஆனால், அதற்குள்ளே வீட்டுக்குள் பழனிவேல் உடைய பஞ்சாயத்து சென்று கொண்டிருக்கிறது. நாளை கடை திறக்கப் போகும் விஷயத்தைப் பற்றி சுகன்யா வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிடுகிறார். இதனால் கோமதி, எதற்காக முன்னாடியே சொல்லவில்லை என்று சண்டை போடுகிறார். கோபத்தில் சுகன்யாவும் திமிராக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பழனி, தன் தரப்பு நியாயத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி பார்க்கலாம். ஆனால், கோமதி கேட்கவில்லை. பின் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு தன் அண்ணன்கள் ஏற்பாடு செய்த விஷயத்தை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பாண்டியன் எதுவும் சொல்லாமல் தன்னுடைய மாமியார் சொன்னதை நினைத்து பார்த்து நீ நல்லபடியாக கடையை தொடங்கு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பின் பழனிவேல் கடையை திறக்கும் விஷயத்தைப் பற்றி செந்தில், மீனாவிடம் கோமதி சொல்கிறார். இதை கேட்டு இருவருக்குமே ஷாக் ஆகிறது. இன்னொரு பக்கம் சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவேல் வீட்டில் சொல்கிறார். இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்படுகிறார். அவர் யார் கடையை திறப்பதற்கு நேரம் சொல்வதற்கு என்றெல்லாம் கத்திக் கொண்டிருக்கிறார். பழனிவேல், நான் இந்த கடை வைக்க சம்மதித்து இருக்கக்கூடாது. அவர்களிடம் சொல்லாமல் செய்தது தவறுதான் என்றெல்லாம் வருத்தப்பட்டு பேசுகிறார். இதனால் முத்துவேல் திட்டுகிறார். பின் காந்திமதி, பழனியை சமாதானம் செய்து கடையை திறப்பதற்கான வேலைகளை செய்ய சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.