பழனிக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்தது என்ன? பயத்தில் புலம்பும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 29/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி சித்தப்பா, நீ அரசியை தான் கல்யாணம் செய்து கொள்ளணும். என் அண்ணன் இடம் ராஜியைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால் தான் அவர் மனம் மாறமாட்டார். அப்போ தான் சொத்து முழுக்க உன் பேருக்கு வரும் என்று மாஸ்டர் ப்ளான் போட்டார். இதை அறிந்த சக்தியும் தன்னுடைய அப்பாவின் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார். பாண்டியன், மீனாவின் அப்பாவிற்கு போன் செய்து குலதெய்வ கோயிலுக்கு போவதற்கு வர சொன்னார். ஆனால், அவர் வழக்கம் போல் திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார். இது எல்லாம் நினைத்து மீனா ரொம்பவே வருத்தப்பட்டார்.

மறுநாள் எல்லோருமே குலதெய்வ கோயிலுக்கு சந்தோஷமாக பேசிக்கொண்டு சென்று விட்டார்கள். அங்கு பாண்டியன் உடைய அக்கா, மாமா இருப்பதை பார்த்து ரொம்ப எமோஷனலாக பழைய நினைவுகளை பற்றி பாண்டியன் பேசிக்கொண்டு இருந்தார். அதற்குப் பின் பாண்டியன், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். பின் கோயிலில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் குடும்பம் செய்தது. அப்போது தங்கமயிலின் அப்பா, அம்மா வந்தார்கள். பின் மீனாவின் அப்பா- அம்மா வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் மீனா சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். மீனா அப்பா, நான் உனக்காக வரவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சாமி கும்பிட வந்தேன் என்று சொல்ல, மீனாவிற்கு தன்னுடைய அப்பா வந்தது சந்தோசம். ஆனால், ராஜி தனக்கு யாரும் வரவில்லையே என்று வருத்தப்பட, கதிர் அவருக்கு ஆறுதல் சொன்னார். பின் கோயிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு போட்டிகள் நடந்தது. முதல் பரிசு கிரைண்டர் என்று சொன்னார்கள். உடனே கோமதி, எப்படியாவது அதை தூக்க வேண்டும் என்று தன்னுடைய குடும்பத்திடம் சொன்னார். ஒவ்வொரு போட்டியிலும் பாண்டியன் குடும்பத்தார் கலந்து கொண்டார்கள். அதேபோல் எல்லா போட்டியிலும் பாண்டியன் குடும்பத்தினர் தான் வெற்றி பெற்றார்கள்.

நேற்று எபிசோட்:

கடைசியாக கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அதிலும் பாண்டியன் குடும்பமே வெற்றி பெற்று கிரைண்டரை தூக்கி விட்டார்கள். கிரைண்டர் வாங்கிய சந்தோஷத்தில் கோமதி இருந்தார். நேற்று எபிசோட்டில் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜியின் அப்பா- சித்தப்பாவை வெறுப்பேற்ற பார்த்தார். ஆனால், அவர்கள் யாரும் இல்லை. பின் பாண்டியன், பழனிக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தேன். பெண் வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னவுடன் பழனிமுகம் மாறி இருந்தது. உடனே பழனி, கல்யாணம் வேண்டாம் என்று சொன்னார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே அவரை சம்மதிக்க வைத்தார்கள்.

இன்றைய எபிசோட்:

பின் ராஜி, கோயிலில் கதிருடன் எடுத்த புகைப்படத்தை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டார். அப்போது வந்த கதிர், நீ பரிட்சையில் கவனம் செலுத்து. எப்படியாவது நீ போலீஸ் ஆக வேண்டும் என்று அவருக்கு உத்வேகம் கொடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தலைமை ஆசிரியர், இன்னும் டூப்ளிகேட் சர்டிபிகேட் தரவில்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள்? சீக்கிரம் கொடுங்கள் இல்லை என்றால் வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் என்று சொல்கிறார். தங்க மயிலுக்கு ஒன்றுமே புரியவில்லை ரொம்பவே பயப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் பழனிக்கு பெண் பார்க்க பாண்டியன் வீட்டில் சென்றிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், தன்னுடைய குடும்பத்தையும் பழனியையும் பற்றி பெண் வீட்டில் எடுத்து சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் பழனியின் அண்ணன்களால் வரும் பிரச்சனையும் முன்கூட்டியே சொல்வதால் அவர்கள் எல்லாத்திற்கும் சம்மதம் சொல்கிறார்கள். பின் இரண்டு வீட்டிலுமே திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டிற்கு வெளியே தங்கமயில் சர்டிபிகேட் இணைத்து புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் குடும்பம் வீட்டிற்கு வருகிறது. அப்போது பாண்டியன்- கோமதி இருவருமே பெண் வீட்டில் நடந்ததை அப்பத்தாவிடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிவடைகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full