கதிரின் செயலால் ஆத்திரமடைந்த பாண்டியன், மீனா சொன்ன விஷயம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், நீ பரிட்சையில் கவனம் செலுத்து. எப்படியாவது நீ போலீஸ் ஆக வேண்டும் என்று அவருக்கு உத்வேகம் கொடுத்தார். பழனிக்கு பெண் பார்க்க பாண்டியன் வீட்டில் சென்றிருந்தார்கள். அப்போது பாண்டியன், தன்னுடைய குடும்பத்தையும் பழனியையும் பற்றி பெண் வீட்டில் அறிமுகம் செய்து வைத்தார். பின் இரண்டு வீட்டிலுமே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். பின் பாண்டியன்- கோமதி இருவருமே பெண் வீட்டில் நடந்ததை அப்பத்தாவிடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
ராஜி, போலீஸ் தேர்வு எழுதினால் என்ன பிரச்சனை வருமோ? என்று மீண்டும் பயந்து கொண்டிருந்தார். உடனே கதிர் அவருக்கு அறிவுரை சொல்லி சப்போர்ட்டாக இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், பள்ளியில் சர்டிபிகேட் கொடுக்க சொன்னதை பற்றி சரவணன் இடம் பேசி இருந்தார். ஆனால், சரவணன் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. பின் அதிகாலையில் ராஜி-கதிர் இருவருமே கிரவுண்டில் ஓடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியனுக்கு பயங்கர கோபம் வந்து வீட்டில் சொன்னார். அப்போது கதிர்-ராஜி வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன், ராஜி போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்று சண்டை போட்டார். அதற்கு கதிர், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். இதற்கும் ராஜிக்கும் சம்பந்தமில்லை. அவள் விருப்பப்படி போலீஸ் ஆகுவார். அதற்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்று பாண்டியனை எதிர்த்து பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்டில் கதிர், நண்பனின் திருமணத்திற்கு சென்னை போவதாக வீட்டில் சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் பாண்டியன் சண்டை போட்டார். உண்மையில் கதிர், ராஜியின் தேர்வுக்காக தான் சென்னை போகிறார்.
நேற்று எபிசோட்:
இதனால் பாண்டியன்-கதிர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் அதிகமானது. இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, தனக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் பிரச்சனையை முடிக்க பார்த்தார். மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்வேன். என்னால் யாருக்கும் சலுகை செய்ய முடியாது என்று அதிகாரியை திட்டி விட்டார். இதனால் ராஜியின் சித்தப்பா மீனாவின் மீது கோபப்பட்டார். கடைசியில் கதிர்- ராஜி இருவருமே சென்னைக்கு கிளம்பினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர் - ராஜி இருவருமே பாண்டியனிடம் சொல்லாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள். இதனால் வீட்டில் என்ன கலவரம் வருமோ? என்ற பயத்தில் கோமதி இருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அவர் எல்லோரையும் வரவைத்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது கதிர்-ராஜி வீட்டில் இல்லாததை அறிந்து பாண்டியன் விசாரிக்கிறார்கள். அதற்கு கோமதி, இருவரும் சென்னை கிளம்பி விட்டார்கள் என்று சொன்னவுடன் கோபப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
ஆத்திரத்தில் பாண்டியன், அவரவர்கள் முடிவெடுப்பதற்கு இந்த வீட்டில் எதற்கு நான் இருக்கனும் என்றெல்லாம் கத்துகிறார். உடனே பாண்டியன் சொல்வதற்கு செந்தில் பதில் சொல்வதால் இன்னும் கோபம் அதிகமானது. அப்போது மீனா, ராஜி சித்தப்பா ஆஃபீஸ் வந்து மிரட்டியதை பாண்டியனிடம் சொன்னார். உடனே செந்தில் கோபப்பட்டு அவரிடம் சண்டைக்கு போக பார்த்தார். ஆனால், பாண்டியன் தடுத்து நிறுத்தி இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, பொய் சொல்லி போவதை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால், கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சப்போர்ட்டாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.