செந்திலுக்காக மீனா செய்த வேலையால் கொந்தளித்த பாண்டியன், சப்போர்ட் செய்த கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/11/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி டியூஷன் எடுப்பதற்கு பாண்டியன் சம்மதம் கொடுத்து விட்டார். இதனால் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து பாண்டியன் தன்னையும் வேலைக்கு போக சொன்னதை சொல்ல, அவர் ஏதோ சொல்லி சமாளி என்றார். அந்த சமயம் வந்த சரவணன், நீ வேலைக்கு போ என்று சொல்ல, தங்கமயில் முடியாது என்றார். மறுநாள் காலையில் கோமதி, மீனா மூலம் கோயில் பிரசாதத்தை கொண்டு போய் தன் அம்மாவுக்கு கொடுத்தார்.

இதை அறிந்த கோமதியின் அண்ணன், அவரின் அம்மாவை திட்டி விட்டு பாண்டியன் இடம் வம்பிழுத்து இருந்தார். அதற்கு பாண்டியனும் பதிலடி கொடுத்து இருந்தார். இதையெல்லாம் பார்த்து ராஜி, கோமதி இருவருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள்.பின் மீனா, செந்தில் தேர்வு எழுதும் விஷயத்தை சொன்னவுடன் முதலில் பாண்டியன் ஷாக் ஆனார். உடனே ஒழுங்காக எழுது என்று அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார். எல்லோரும் வேலைக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயிலையும் பாண்டியன் வேலைக்கு போக சொன்னார். உடனே அவர் ஏதேதோ சொல்லி சமாளித்து அமைதியாகி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் ராஜி-கதிர் இருவருமே டியூசன் போகும்போது அவருடைய சித்தப்பா ரொம்ப கேவலமாக கதிரையும், அவருடைய குடும்பத்தையும் பேச, ராஜி கோபம் வந்து திட்டி இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தப்பா, அவருடைய அண்ணனிடம் கோபப்பட்டு ராஜியை திட்டி பேச, அவர் தன் தம்பியை திட்டி அடித்து விட்டு சென்றார். இதனால் அவருக்கு இன்னும் கோபம் வருகிறது. நேற்று எபிசோட்டில் செந்தில்- மீனா இருவருமே அரசாங்க வேலை, தேர்வு பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தேர்வு எழுத புது சட்டை வாங்க வேண்டும் என்று மீனா சொல்ல, செந்தில் ஒத்துக் கொண்டார்.

நேற்று எபிசோட்:

பின் கடையில் தன்னுடைய அப்பாவிடம் புது சட்டை வாங்குவதற்கு செந்தில் பணம் கேட்டார். ஆனால், அவர் முடியாது. இருக்கும் சட்டையை எடுத்துப் போடு என்று சொல்லிவிட்டு சென்றார். செந்திலுமே கோபப்பட்டு புலம்பி கொண்டு என்ன செய்வது? என்று புரியாமல் இருந்தார். இன்னொரு பக்கம் மீனா தொடர்ந்து செந்திலுக்கு போன் செய்து கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் டியூஷன் எடுக்கும் இடத்திற்கு போன கதிரை பார்த்த ராஜி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு அவருடன் வீட்டிற்கு வந்தார். பின் மீனா, செந்திலுக்கு போன் செய்த போது பாண்டியன் சொன்ன விஷயத்தை பற்றி பழனி சொல்லி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இதனால் கோபப்பட்ட மீனா தனியாக புலம்பி இருந்தார். பின் கதிர் உடன் மீனா துணி வாங்க கடைக்கு போனார் . அங்கு செந்திலுக்காக எல்லா சட்டைகளையும் மீனா பார்க்கிறார். ஆனால், அவருக்கு பிடிக்கவே இல்லை. இதை பார்த்து கதிருக்கு தலை சுத்துகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்திலுக்காக சட்டையை ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருக்கிறார் மீனா. இருந்தாலுமே அவருக்கு பிடிக்கவில்லை பின் நேரம் ஆகிறது என்பதால் ராஜிக்கு போன் செய்து, ஏதாவது சொல்லி சமாளி என்கிறார் மீனா. இன்னொரு பக்கம் சக்தி அப்பா, தன் அண்ணன் அடித்ததை நினைத்து தன் மகனிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

மேலும், பாண்டியன் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த மீனா, லேட்டாக வந்ததற்கு ஏதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார். உடனே கதிர், செந்தில் அண்ணனுக்கு சட்டை வாங்கியது பற்றி சொன்னவுடன் பாண்டியன் கோபப்படுகிறார். எதற்கு வீண் செலவு? என்றவுடன் மீனாவும் ஏதோ சொல்கிறார். இருந்தாலுமே பாண்டியன் கோபப்படுகிறார். பின் சட்டையின் விலை 2000 என்று தெரிந்தவுடன் இன்னும் அதிகமாக கோபப்படுகிறார். ஆனால், மீனா அமைதியாகவே இருக்கிறார். வழக்கம்போல் பாண்டியன் கிளாஸ் எடுக்க ஆரம்பிக்க, எல்லோருக்குமே கடுப்பாகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full