செந்தில்,கதிர் செய்த வேலையால் கொந்தளித்த பாண்டியன், சந்தோஷத்தில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், கதிரை அலைத்து பேசினார். அப்போது பாண்டியன், அரியரை எப்போது கிளியர் செய்ய போனார். இந்த கார் ஓட்டும் தொழிலை விட்டு ஒழுங்கு மரியாதையாக படி என்று திட்டினார். அதற்கு கதிர், என் வேலையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் பாஸ் செய்து விடுவேன் என்று சொன்னார். அதற்கு பாண்டியன், இந்த கார் வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையாக மளிகை கடைக்கு வா. நீ அங்கு வாங்கும் சம்பளத்தை விட 100 ரூபாய் அதிகமாக தருகிறேன் என்று சொன்னார். ஆனால், கதிர் முடியாது என்று மறுத்து விட்டார்.

பின் பாண்டியன், உன் அண்ணன் கடையில் நன்றாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு கதிர், அண்ணன் நன்றாக இருக்கிறாரா? என்று அவரைத்தான் கேட்கனும் என்று சொல்ல, செந்திலால் எதுவுமே பேச முடியாமல் திணறினார். அதற்குப்பின் கோமதி, எதற்காக இப்படி அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தன்னுடைய மகன்களை திட்டினார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்தில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். அப்போது மீனா, இந்த பிரச்சனை எல்லாம் வரும் என்று தெரிந்துதான் நான் லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தேன். லோன் கிடைக்க தாமதம் ஆகிவிட்டது. இல்லை என்றால் முன்னாடியே பணத்தை கொடுத்திருப்பேன் என்று இருவரும் ரொம்ப எமோஷனலாக பேசினார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

ராஜி, கதிரை தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது ராஜி, வீடு இருந்தால் அப்பா, அம்மா கேள்வி கேட்க தான் செய்வார்கள். எதற்காக அவரிடம் நீ எதிர்த்து பேசுகிறாய்? உன்னுடைய வாழ்க்கையில் நீ என்னதான் செய்ய முடிவு எடுத்திருக்கிறாய். நான் போலீசாக வேண்டும் என்று ஒரு லட்சியத்துடன் இருக்கிறேன். நீ கடைசிவரை கார் ஓட்ட போகிறாயா? என்று கேட்டார். அதற்கு கதிர், நான் கார் ஓட்டுவது உனக்கு பிரச்சனையா? நான் இப்படியே இருக்க மாட்டேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், கடையில் செந்தில் சந்தோஷமாக இல்லை என்று சொன்னதை வைத்து பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

இதனால் செந்தில் மனமடைந்து அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அதற்கு பின் கதிர்- செந்தில் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள் . அப்போது செந்தில், நான் அப்பா பேசியதற்கு ஏதாவது பேசி இருக்கணும். கடையில் என்னை ரொம்ப மோசமாக திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பாவை சந்தித்து செந்திலுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? நம்பிக்கையானவர்களா? என்றெல்லாம் பயத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அவருமே கண்டிப்பாக இன்னும் ரெண்டு நாட்களில் வேலை கிடைத்து விடும் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து குழந்தை விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது தங்கமயிலின் அம்மா, மாப்பிளை உன்னிடம் எப்படி நடந்து கொள்கிறார்? உன்னுடைய கைக்குள் வைக்க பாரு என்று தேவையில்லாததெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால், தங்கமயில் தன்னுடைய அம்மாவை திட்டி விடுகிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். செந்தில்-கதிர் மட்டும் வரவே இல்லை. இதனால் பாண்டியன், சாப்பிட கூட வர முடியாது.

சீரியல் ட்ராக்:

அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கணுமா? என்று திட்டுகிறார். உடனே கோமதி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அந்த சமயம் பார்த்து கதிர்- செந்தில் இருவருமே வந்து விடுகிறார்கள். அப்போது பாண்டியன், இனி லேட்டாக வந்தால் சோற்றில் கை வைக்கக்கூடாது. பட்டினியாக இருக்கட்டும் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்டு செந்தில்- கதிர் இருவருமே திட்டு வாங்கன மானங்கெட்ட சோறு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று உள்ளே சென்று விடுகிறார்கள். பாண்டியன் சென்ற பிறகு கோமதி செந்தில்- கதிர் இருவரையும் அழைத்து சாப்பாடு போடுகிறார். அந்த சமயத்தில் மீண்டும் பாண்டியன் உள்ளே வருவதால் கோமதிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பாண்டியன் ஏதாவது சொல்லிவிடுவார் கோமதி அவரை அழைத்து செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full