திருமண ஏற்பாடு செய்யும் பாண்டியன், சுகன்யா சூழ்ச்சியில் சிக்குவாரா அரசி? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜியின் அப்பா வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி-குமார் காதலை பற்றி பேசும்போது அப்பத்தா, கோமதி நிலைமை நினைக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே முத்துவேல், அரசி பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் பேசாதே. நம் மகனின் நிலைமையும் யோசித்துப் பார். குமார் மீது எந்த தவறும் இல்லை என்று சப்போர்ட்டாக பேசினார். அதற்குப்பின் தங்கமயில் பாண்டியனுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க, அரசி அப்பா என்று கூப்பிடும் போது பயங்கரமாக கோமதி கோபப்பட்டார்.
அரசி, நான் செய்தது மிகப்பெரிய தவறு. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். என்னிடம் பேசுங்கள் அப்பா என்று பாண்டியன் காலை பிடித்து கதறி அழுதார். பின் தன்னுடைய அண்ணன்கள் ஒவ்வொரு இடமும் மன்னிப்பு கேட்டு கதறி இருந்தார் அரசி. ஆனால், அவர்கள் யாருமே மன்னிக்கவில்லை. கோமதி, அரிசியை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தங்கமயில், உன் அப்பா- அம்மா மீது சத்தியம் செய்து செய். யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அரசி, பாண்டியன் மீது சத்தியம் செய்து நான் அவருடன் பேச மாட்டேன். பழகமாட்டேன் என்றார். அதற்கு பின் கோமதி மீதும் சத்தியம் செய்தார். அதற்குப் பிறகுதான் பாண்டியன் அரசிடம் பேசி இருந்தார். வீட்டில் எல்லோருமே கொஞ்சம் ஓரளவுக்கு சமாதானம் ஆனார்கள். சுகன்யாவிற்கு மட்டும் வயிறு எரிந்தது. கடைசியில் பாண்டியன், நான் ஒரு இடத்திற்கு போய் விட்டு வருகிறேன். யாரும் என்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார்.
இன்று எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வெளியே கிளம்பும்போது சக்திவேல் கிண்டல் கேலி செய்து பேசுகிறார். கோபத்தில் பழனி, சக்திவேலை திட்டுகிறார். அதற்குப்பின் வெளியே வந்த கோமதி, தன்னுடைய மூத்த அண்ணன் முத்துவேலை அழைக்கிறார். ஆனால், சக்திவேல் பயங்கர கேவலமாக கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் பேசுகிறார். அப்போது வெளியே வந்த முத்துவேல், என்ன விஷயம் என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது கோமதி, என் மகள் அவள் செய்த தவறை உணர்ந்து விட்டாள். தயவு செய்து என் மகளின் வாழ்க்கையில் குமார் வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே முத்துவேல், ஒரு தந்தையாக வலி வேதனை என்னவென்று எனக்கு தெரியும். இனிமேல் எங்கள் வீட்டு பையன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டான். தைரியமாக போ என்று சொன்னவுடன் கோமதி திரும்பி வந்து விடுகிறார். பின் முத்துவேல், குமாருக்கு பெண் பார்த்து விட்டேன். நாளை பெண் வீட்டாரிற்கு போகலாம் என்று சொன்னவுடன் சக்திவேல் ஷாக் ஆகிறார்.
https://www.youtube.com/watch?v=QIuDdVOdBBQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்ற பாண்டியன், உங்கள் மகனுக்கு அரசியை திருமணம் செய்து வைக்க எனக்கு சம்மதம். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்க, அவர்களுமே ஒத்துக் கொள்கிறார்கள். பின் வீட்டில் இதைப் பற்றி பாண்டியன் சொன்னவுடன் எல்லோருமே சம்மதம் செல்கிறார்கள். ஆனால், அரசி அமைதியாகவே இருக்கிறார். அதற்குப்பின் பாண்டியன், உனக்கு சம்மதமா? என்று அரசியிடம் கேட்டதற்கு அவரும் ஒத்துக்கொள்கிறார். அதற்கு பின் அரசி தனியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்த சுகன்யா, குமார் உடைய காதலை மறந்து விட்டாயா? உன் அப்பா சொன்ன பையனை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாயா? அவ்வளவுதான் உன்னுடைய காதலா? என்றெல்லாம் கேட்டு குழப்ப பார்க்கிறார்.