தங்கமயிலுக்காக பாண்டியன் ஏற்பாடு செய்த வேலை, கோமதியின் வருத்தம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மூன்று மருமகள்களுக்கும் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடந்தது. ஆனால், தங்கமயில் மட்டும் நகையை நினைத்து தன்னுடைய அப்பா- அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். இதை எல்லாம் கேட்ட ராஜி- மீனா இருவருமே தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் அப்பா- அம்மா ஏதோ சொல்லி சமாளிதார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. கடைசியில் தங்கமயில், இதெல்லாம் கவரிங் நகை தான். இதனால் தான் நான் பயப்படுகிறேன் என்று உண்மையை சொல்ல, மீனா- ராஜி இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
எல்லா உண்மையை தங்கமயில் சொல்ல, மீனா- ராஜி இருவருமே நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றார்கள். பின் நல்லபடியாக மூவருக்குமே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்தது. பின் அப்பத்தாவிடம் மூன்று ஜோடிகளும் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்கள். இதனால் அப்பத்தா மற்றும் இரண்டு மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இன்னொரு பக்கம் குழலியின் பிரச்சனையை பற்றி பாண்டியன் கேட்க, தன்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குழலி கதறி அழுதார்.
நேற்று எபிசோடில் குழலி சொன்னதைக் கேட்டு பாண்டியன் வீட்டில் எல்லோருமே கோபப்பட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பாண்டியன், பழனி, சரவணன் மூவருமே குழலியின் மாமியார் வீட்டுக்கு போனார்கள். அங்கு குழலியின் கணவர், மாமனார், மாமியார் எல்லோருமே அவர்களை நல்லபடியாக தான் விசாரித்தார்கள். ஆனால், பாண்டியன் கோபப்பட்டு பேசினார். உடனே குழலியின் கணவர் நடந்ததை சொல்ல, பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. குழலி தான் மொத்த குடும்பத்தையும் கொடுமைப்படுத்துகிறார் என்று தெரிந்ததும் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார்.
நேற்று எபிசோட்:
பின் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிற்கு வந்தார் பாண்டியன். அங்கு பழனி, நடந்த எல்லாத்தையும் சொல்ல எல்லோருமே ஷாக் ஆகினார்கள். குழலி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் எல்லோரும் குழலியிடம் கேள்வி கேட்க, அவர் அழுது புலம்பி அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் பாண்டியன், இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தன் மூன்று மருமகள்களையும் புகழ்ந்து பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், லீவு நாளில் கூட சவாரி இருக்கிறது என்று வெளியே கிளம்புகிறார். இதை பார்த்து கோமதி வருத்தப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
பின் சவாரிக்கு சென்ற இடத்தில் ஒரு பெண் மற்றும் அவர் ஆண் நண்பர்கள் ஏறுகிறார்கள். ஆனால், அந்த பெண்ணை அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் பாண்டியன், எல்லோரையும் அழைத்து தங்கமயிலுக்கு வேலை ரெடி. டீச்சர் வேலைக்கு பேசி இருக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் பதறுகிறார். பின் தங்கமயில், வேலைக்கு போகவில்லை என்று தயங்கி தயங்கி சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே கோமதி, நானாக இருந்தால் ஜாலியாக கிளம்பி இருப்பேன். நீ ஏன் தயங்கி இருக்கிறாய்? எல்லா வேலையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சந்தோஷமாக வேலைக்கு போ என்று சொல்ல, பாண்டியன் எதுவும் பேசாமல் இருந்தார். பின் தங்கமயில், சர்டிபிகேட் எல்லாம் அம்மா வீட்டில் இருக்கிறது என்று ஏதோ காரணத்தை சொல்கிறார். ஆனால், அவர்கள் தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் உறுதியாக இருக்கிறார்கள். பின் பாண்டியன், உனக்கு வேலைக்கு போகணும் ஆசை இருந்ததா என்று கேட்க, கோமதி வெட்கப்பட்டு சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.