பாண்டியன் வீட்டில் விவேசம், கோபத்தில் கோமதி அண்ணன்கள் செய்த வேலை- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 4/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்மந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுக்க, கோபத்தில் அவர்கள் மீனாவை மிரட்டி விட்டு சென்றார்கள். பின் ராஜியின் கனவை அறிந்த கதிர் ஆச்சரியப்பட்டார். பின் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்ற கதிர், ராஜியிடம் பந்தயம் வைத்து இருந்தார். அதில் ராஜி வெற்றி பெற்று இருந்தார். ராஜியின் ஓட்டத்தைக் கண்டு பிரமித்து போன கதிர், நீ எப்படியாவது போலீசாக வேண்டும்.

நான் உன்னை போலீஸ் ஆக்குகிறேன் என்று சப்போர்ட்டாக பேசி இருந்தார் . பின் பாண்டியன், பழனிக்கு பெண் பார்த்து இருக்கிறேன். நல்ல குடும்பம், பெண் நல்ல படித்திருக்கிறார். மரியாதை தெரிந்த பெண் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பழனி, குஷியில் வெட்கப்பட்டார். பின் இதைப்பற்றி பழனி, தன் அண்ணன்கள் இடம் சொல்ல, அவர்கள் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் எடுக்கும் பாடத்தை மீனா, ராஜி ரசித்து பாராட்டி இருந்தார்கள். இந்த வாரம் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்க போகும் போது அலப்பறை செய்து இருந்தார்கள். பழனியை அழகாக ரெடி பண்ணி இருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் அங்கு பாண்டியன், தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு பெருமையாக பழனியை பற்றி பேசி இருந்தார். மஞ்சுளாவை எல்லோருக்கும் பிடித்து விட்டது. பெண்ணை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப பிடித்து விட்டது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள், எப்படியும் அவனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். அவனை கேலி செய்து அனுப்பி விடுவார்கள் என்று கிண்டலாக பேசி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் தனியாக பழனி- மஞ்சுளா இருவருக்குமே பிடித்து போனதால் வீட்டில் ஒப்பந்தம் பேசி நிச்சயதார்த்தம் வரை பேசி முடித்தார்கள்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் வெளியில் நின்று, பழனிக்கு இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம். அண்ணன்கள் நிச்சயதார்த்தத்திற்கு வரலாம். என் தலைமையில் தான் கல்யாணம் என்று அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்டு அவர்கள் பயங்கரமாக கோபப்பட்டார்கள். அதன் பின் வீட்டிற்கு தெரியாமல் ரன்னிங் பிராக்டிக்ஸ்க்கு கதிர்- ராஜி போனார்கள். அங்கு ராஜி கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்பட்டார் கதிர்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வரும் வழியில் மறைத்து பழனிக்கு பெண் பார்த்த விஷயத்தை பற்றி கேட்கிறார்கள். உடனே பாண்டியன், அண்ணன்கள் அவனுக்கு சரியில்லை. அதனால்தான் அக்கா புருஷனாக நான் செய்தேன் என்கிறார். அதற்கு கோமதி அண்ணன்கள், இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது. பழனிக்கு எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். ஆனால், பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக நிச்சயதார்த்தம், திருமணம் நடக்கும் என்று சவால் விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து மீனா, இட ஆக்குரப்பு விஷயத்தில்
கோமதியின் அண்ணன்கள் தன்னிடம் தகராறு செய்ததைப் பற்றி பாண்டியனிடம் சொல்ல, அவர் ஷாக் ஆகிறார். உடனே மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படி செய்வேன் என்று சொன்னவுடன் பாண்டியன் அவருக்கு சப்போர்ட் ஆக பேசுகிறார். பின் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெறுகிறது. பழனி சந்தோஷத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full