சர்டிபிகேட் கேட்டு தொல்லை செய்யும் பாண்டியன், பயத்தில் புலம்பும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சக்தி, அவருடைய அப்பாவும் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வந்த செந்தில், என் மனைவி இடம் தேவையில்லாமல் மிரட்டுவது, வம்பு இழுப்பது என்ற வேலையை வைத்துக் கொள்ளாதே என்று சொன்னார். கோபத்தில் சக்தி அப்பா கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். உடனே சக்தி, அவர்களிடம் எதற்கு வம்புக்கு செல்கிறீர்கள் அப்பா, அமைதியாக இருங்கள். அவர்கள் வேலையை செய்யட்டும் என்று பாண்டியன் குடும்பத்துக்கு ஆதரவாக பேசி இருந்தார்.
இதைக் கேட்டு செந்தில் அமைதியாக போனார். பின் அரசியை திருமணம் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் பிராக்கெட் போட வேண்டும் என்று சக்தி சொன்னவுடன் அவர் அப்பாவும் ஏற்றுக்கொண்டார்.
நேற்று எபிசோட்டில் செந்தில், ராஜியின் சித்தப்பா வழியில் சண்டை வாங்கியதை பற்றி வீட்டில் சொன்னார். பின் அவருடைய மகன் சக்தி நமக்கு சப்போர்ட் செய்தான் என்றார். இதைக் கேட்டவுடன் அரசி, சக்தி தன்னிடம் பேசியதை நினைத்துப் பார்த்தார். அந்த சமயம் பார்த்து சக்தி வர, அவரை பார்த்தவுடன் அரசி உள்ளுக்குள் சிரித்தார். ஒருவரைக் ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் ராஜி தேர்வு எழுதி இருந்தார். அதன் பின் பாண்டியன், சரவணன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது பாண்டியன், டூப்ளிகேட் சர்டிபிகேட்டை பற்றி கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல் பயத்தில் தயங்கி இருந்தார் தங்கமயில். நேற்று எபிசோட்டில் பாண்டியன், சர்டிபிகேட்டை சீக்கிரம் ரெடி பண்ணி கொடு என்று கேட்க, தங்கமயில் பயத்தில் பதறி கொண்டே இருந்தார். உடனே மீனா, நாம் இருவரும் சென்று ரெடி பண்ணலாம் என்று சொன்னவுடன் தங்கமயில் சரி என்றார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ராஜி-கதிர் இருவரும் சாப்பிட போனார்கள். அது பெரிய ஹோட்டல். கதிர், தன்னிடம் பணம் குறைவாக இருப்பதால் ராஜிக்கு மட்டும் பிரியாணி வாங்கி தந்து, தான் குறைவாக சாப்பிட்டார். இதை பார்த்த ராஜி வருத்தப்பட்டார். அதற்குப்பின் இருவரும் பீச்சுக்கு போனார்கள். அங்கு ராஜி எல்லா கவலையும் மறந்து சந்தோஷமாக விளையாடி இருந்தார். பின் கதிரிடம் அவரை பற்றி தெரிந்து கொள்ள கேட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மீது ராஜிக்கு காதல் வருகிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சென்னையில் எடுத்த புகைப்படத்தை ராஜி, மீனாவிற்கு அனுப்பி வைக்கிறார். அதை பார்த்து தங்கமயில், கோமதி, மீனா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதி வாய் தவறி கதிர்- ராஜி திருமணத்தைப் பற்றி பேச வருகிறார். உடனே மீனா தடுத்து நிறுத்தி விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அவர், சர்டிபிகேட்டை பற்றி பேசுகிறார். உடனே தங்கமயில், வீட்டிலேயே சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. ஆனால், நான் வேறு வேலைக்கு போகிறேன். இந்த வேலை டீச்சர் வேலை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
கோமதி, டீச்சர் வேலைக்கு போ, வேறெங்கும் வேண்டாம் என்கிறார். ஆனால் பாண்டியன் உனக்கு பிடித்ததை செய் என்கிறார். தங்கமயில் என்ன பண்ணுவது என்று புரியவில்லை. அவர் வேலைக்கு போகாமல் எப்படி தடுப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார். பின் சரவணன் இடம் தங்கமயில், எனக்கு தலை வலிக்குத்து. வேலைக்கு போக பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறார். ஆனால், சரவணன் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே சென்னையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.