மாமனார் பிறந்தநாளுக்கு தங்கமயில் செய்த அலப்பறை, கோபத்தில் கத்திய பாண்டியன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் சரவணன் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் அப்பாவிடம் கொடுத்தார். இதனால் கோபப்பட தங்கமயில் தன் அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி புலம்பி அழுதார். உடனே தங்கமயில் அம்மா, தன்னுடைய மகளுக்கு தேவையில்லாத அறிவுரை எல்லாம் சொல்லி அனுப்பி இருந்தார். அதன் பின் மீனா- ராஜி- தங்கமயில் மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்தநாளை பற்றி தங்களுடைய கணவன்மார்களிடமும் பேசி இருந்தார்கள். ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை தன் மாமனாரிடம் சொல்ல சொல்லி மாமியாரிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் கோபத்தில் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்ல ராஜி வெளியே போனார்.

அப்போது ராஜியின் அண்ணனை பெண் பார்க்கும் வீட்டார் வந்தார்கள். அவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் பேசி கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லாமே வெளியில் வந்து பாண்டியனை வம்பிழுத்து, அவனுடைய குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கதிர் கோபப்பட, பாண்டியன் தடுத்து நிறுத்தி நல்ல விஷயம் நடக்கும் இடத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று கிளம்ப பார்த்தார். அப்போது ராஜி, நான் டியூஷன் எடுப்பது என்னுடைய விருப்பம். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உங்கள் மகன் ரொம்ப யோக்கியமா? சரவணன் மாமா கல்யாணத்திற்கு முன்பு எங்களை கடத்தி வைத்திருந்தான். இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா? என்று கேட்டவுடன் பாண்டியன் கோபப்பட்டு ராஜி அண்ணன் சக்தியை வெளுவெளு என்று வெளுத்தார். பின் வீட்டில் இனிமேல் எது நடந்தாலும் சொல்ல வேண்டும் என்று பாண்டியன் சொன்னவுடன் ராஜி - மீனா ஒத்துக் கொள்கிறார்கள். நேற்று எபிசோட்டில் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடிக்கிறார்.

நேற்று எபிசோட்:

இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, ராஜி செய்த வேலைக்கு தான் அவன் இப்படி செய்தான். அவன் மேல் எந்த தவறும் இல்லை என்று வாக்குவாதம் செய்து தன் அண்ணன் மீது கோபப்பட்டார். இன்னொரு பக்கம் ராஜி கல்லூரிக்கு சென்று இருந்தார். அவருடைய அண்ணனால் பிரச்சனை வரும் என்று பயந்து கதிர் அவருக்கு துணையாக இருந்தார். அதேபோல செந்திலும் தன்னுடைய மனைவி மீனாவிற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று அவர் உடனே வேலை செய்யும் இடத்திற்கு சென்றார். பின் வீட்டில் தன்னுடைய அண்ணன் மகன் செய்ததை நினைத்து கோபப்பட்டு கோமதி பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

அப்போது ராஜி, எங்களை கடத்தவில்லை. தங்க மயிலை கடத்த பார்த்தார்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் அய்யய்யோ என்று பதறுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், கடையில் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே நடந்ததை பற்றியும், சக்தி என்ன செய்வான்? என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே பாண்டியன், எல்லோரும் வேலையை பாருங்கள். அவன் எதுவும் செய்ய மாட்டான் என்று சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் தங்கமயில் தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி விட்டு அலப்பறை செய்கிறார். கடைசியில் பாண்டியனை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட கூப்பிடுகிறார்கள். ஆனால், பாண்டியன், போய் தூங்குங்கள். வேற வேலை இல்லையா என்று திட்டி அனுப்பி விடுகிறார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனின் பிறந்த நாளுக்காக தயாராகி இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் உள்ளே வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் கத்த, பாண்டியன் அதிர்ச்சியாகி நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full