சக்தி செய்த வேலையால் கோபத்தில் பாண்டியன் குடும்பம், பயத்தில் தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் கதிர் சவாரி போனதால் கோமதி-ராஜி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் கதிர் -ராஜி இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி உண்மையை சொல்ல ராஜி போனார். கடைசியில் ராஜி போட்ட கண்டிஷனுக்கு கதிர் ஒத்து கொண்டார். அதன் பின் வீட்டுக்கு வந்த ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். உடனே ராஜி மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் கோமதி ஒத்து கொண்டார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்த, அவர் முகமே வாடியது.
இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்ப, அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டார். இந்த வாரம் சரவணன் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் அப்பாவிடம் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து தங்கமயில் புலம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனார். பின் தங்கமயில், சரவணன் செய்ததையும், மீனா-ராஜி- கோமதி செய்வதையும் சொல்லி தன் அம்மாவிடம் புலம்பி அழுதார். பின் தங்கமயில் அம்மா, நீ எப்படியாவது மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வர பாரு. அந்த வீட்டினுடைய மொத்த கண்ட்ரோலையும் உன் கையில் எடு என்று வழக்கம் போல தன்னுடைய மகளுக்கு தேவையில்லாத அறிவுரை எல்லாம் சொல்லி அனுப்பி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதன் பின் மீனா- ராஜி- தங்கமயில் மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்தநாளை பற்றி தங்களுடைய கணவன்மார்களிடமும் பேசி இருந்தார்கள். ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை தன் மாமனாரிடம் சொல்ல சொல்லி மாமியாரிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் கோபத்தில் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்ல ராஜி வெளியே போனார். இதனால் எல்லோருமே பயந்தார்கள். அப்போது ராஜியின் அண்ணனை பெண் பார்க்கும் வீட்டார் வந்தார்கள். அவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் பேசி கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லாமே வெளியில் வந்து பாண்டியனை வம்பிழுத்து, அவனுடைய குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசிக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், ஒரு கட்டத்தில் கதிர் கோபப்பட, பாண்டியன் தடுத்து நிறுத்தி நல்ல விஷயம் நடக்கும் இடத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று கிளம்ப பார்த்தார். அப்போது ராஜி, நான் டியூஷன் எடுப்பது என்னுடைய விருப்பம். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. உங்கள் மகன் ரொம்ப யோக்கியமா? சரவணன் மாமா கல்யாணத்திற்கு முன்பு எங்களை கடத்தி வைத்திருந்தான். இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா? என்று கேட்டவுடன் பாண்டியன் கோபப்பட்டு ராஜி அண்ணன் சக்தியை வெளுவெளு என்று வெளுத்தார். பின் வீட்டில் இனிமேல் எது நடந்தாலும் சொல்ல வேண்டும் என்று பாண்டியன் சொன்னவுடன் ராஜி - மீனா ஒத்துக் கொள்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடிக்கிறார். இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, ராஜி செய்த வேலைக்கு தான் அவன் இப்படி செய்தான். அவன் மேல் எந்த தவறும் இல்லை என்று வாக்குவாதம் செய்தார். உடனே ராஜிவின் அப்பா, இவனிடம் நான் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லியும் செய்தான் என்கிறார். உடனே கோபப்பட்டு சக்தியின் அப்பா, நீங்கள் எல்லோரும் ஒன்று. நானும் என் மகனும் வேறு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜி கல்லூரிக்கு சென்று இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அவருடைய அண்ணனால் பிரச்சனை வரும் என்று பயந்து கதிர் அவருக்கு துணையாக இருக்கிறார். அதேபோல செந்திலும் தன்னுடைய மனைவி மீனாவிற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று அவர் உடனே வேலை செய்யும் இடத்திற்கு செல்கிறார். பின் வீட்டில் தன்னுடைய அண்ணன் மகன் செய்ததை நினைத்து கோபப்பட்டு கோமதி பேசி கொண்டிருக்கிறார். அப்போது ராஜி, எங்களை கடத்தவில்லை. தங்க மயிலை கடத்த பார்த்தார்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் அய்யய்யோ என்று பதறுகிறார். என் அண்ணன்களை இனிமேல் சும்மா விட மாட்டேன் என்று கோமதி பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.