தங்கமயில் செய்த வேலையால் புலம்பித் தள்ளும் கோமதி, பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 14/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் அக்கவுண்டில் பணம் இல்லாததை பற்றி விசாரிக்க பாண்டியன் வங்கிக்கு போக, எல்லா உண்மைகளும் தெரிந்து விடுகிறது. பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், கதிரை அறைந்து விட்டார். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாக, கடைசியில் உண்மையை கதிர் ஒத்துக் கொண்ட பிறகு ராஜுவால் எதுவுமே பேச முடியவில்லை. பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று பாண்டியன் கண்டமேனிக்கு கத்தி இருந்தார். உடனே சரவணன், உண்மையை சொல்லப் பார்க்க, செந்தில்- சித்தப்பா இருவரும் அவரை தடுத்து அமைதியாக்கி விட்டார்கள்.

உண்மையை மறைக்கும் குற்ற உணர்ச்சியில் சரவணன் வருத்தப்பட்டார். பின் எல்லோருமே எப்படியாவது பணத்தை ரெடி பண்ணும் வேலையும் மும்முறமாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், கதிரை திட்டிக் கொண்டிருந்தார். இதனால் சரவணனுக்கு கோபம் வந்து, உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் வந்தது. நம்ம ஹோட்டலில் தங்க முடியாமல் இருந்தபோது கதிர் தான் அந்த பணத்தை அனுப்பினான் என்று சொல்ல, தங்கமயில் அமைதியாகி இந்த உண்மையை வீட்டில் சொல்ல வேண்டாம். எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் கோமதி வழக்கம் போல் ராஜிவால் தான் இந்த நிலைமை என்று திட்ட, கோபத்தில் மாமியார்-மருமகள் இடையே சண்டை நடந்தது. மறுநாள் காலையில் எல்லோருமே வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறது? என்று பயத்திலேயே இருந்தார்கள். ராஜி தன்னுடைய நகையை கழட்டி கதிரிடம் கொடுத்து பணத்தை ரெடி பண்ண சொல்ல, அவர் வாங்க மறுத்து விட்டார். பின் பாண்டியன், பணம் எங்கே? இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். உடனே கதிர், பணம் ரெடி பண்ண முடியவில்லை என்று அமைதியாக நின்றார்.

கடந்த வாரம் எபிசோட்:

இதனால் கோபப்பட்ட பாண்டியன், கதிரின் கையை பிடித்து வெளியே தள்ள பார்த்தார். அப்போது சரவணன் தடுத்து நிறுத்தி, அவன் எனக்காக தான் பணம் கொடுத்தான் என்று நடந்த உண்மையை சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். பின் தங்கமயிலை திட்டி அறிவுரை சொல்லி சென்று விட்டார். கடைசியில் கோமதி, யார் என்ன பிரச்சனை? என்றாலும் என் மகன் தான் காரணமா? அவரவர்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பயங்கரமாக திட்டி இருந்தார். அவமானத்தில் அழுது கொண்டே தங்கமயில் உள்ளே சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் செய்த வேலையை நினைத்து கோமதி புலம்பிக்கொண்டே இருக்கிறார். ராஜி-மீனா எவ்வளோ சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் தங்கமயில் செய்த செலவு பற்றி தான் புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மீனா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று சொல்ல, ராஜி கோபப்பட்டார். அதற்குப்பின் வேலை டென்ஷனில் மறந்து விட்டேன் என்று மீனா சொல்லி சமாளிக்கிறார். இவர்கள் பேசுவதை எல்லாம் தங்கமயில் கேட்டு அழுது கொண்டே சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் பாண்டியனிடம் பணத்தை எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று கதிர் சொல்ல, எனக்கு பணம் முக்கியமில்லை. தெரியாமல் செய்ததுதான் தவறு. யாரும் எந்த பணத்தையும் தர தேவை இல்லை என்று சென்று விடுகிறார். கோமதி- மீனா-ராஜி சாப்பாடு பத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கம்யில் சாப்பிடவில்லை என்று மீனா சொல்ல, அவளுக்கு சாப்பிட தெரியாதா என்று கோமதி கோவமாக சொல்கிறார். பின் ராஜி - மீனா இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிடுகிறார்கள். ஆனால், அவர் வரவில்லை. அப்போது ராஜி, உங்களுக்கு கதிர் பணம் அனுப்பின விஷயம் தெரியுமா? என்று கேட்க, தங்கமயில் அமைதியாக இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full