கோலாகலமாக பாண்டியனின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய மருமகள்கள்- கலகலப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை தன் மாமனாரிடம் சொல்ல சொல்லி மாமியாரிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் கோபத்தில் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்ல ராஜி வெளியே போனார். அப்போது ராஜியின் அண்ணனை பெண் பார்க்கும் வீட்டார் வந்தார்கள். அவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் பேசி கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லாமே வெளியில் வந்து பாண்டியனை வம்பிழுத்து, அவனுடைய குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ராஜி, நான் டியூஷன் எடுப்பது என்னுடைய விருப்பம். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.
உங்கள் மகன் ரொம்ப யோக்கியமா? சரவணன் மாமா கல்யாணத்திற்கு முன்பு எங்களை கடத்தி வைத்திருந்தான் என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டு ராஜி அண்ணன் சக்தியை வெளுவெளு என்று வெளுத்தார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, தன் அண்ணன் இடம் வாக்குவாதம் செய்தார். பின் வீட்டில் தன்னுடைய அண்ணன் மகன் செய்ததை நினைத்து கோபப்பட்டு கோமதி பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது ராஜி, எங்களை கடத்தவில்லை. தங்க மயிலை கடத்த பார்த்தார்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் அய்யய்யோ என்று பதறுகிறார். மேலும், கடையில் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே நடந்ததை பற்றியும், சக்தி என்ன செய்வான்? என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனே பாண்டியன், எல்லோரும் வேலையை பாருங்கள். அவன் எதுவும் செய்ய மாட்டான் என்று சமாதானம் செய்து அனுப்பி விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் வீட்டில் தங்கமயில், தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி விட்டு அலப்பறை செய்தார். கடைசியில் அனைவரும் பாண்டியனை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட கூப்பிட்டார்கள். ஆனால், பாண்டியன், கோபத்தில் போய் தூங்குங்கள். வேற வேலை இல்லையா என்று திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனின் பிறந்த நாளுக்காக தயாராகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன், உள்ளே வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் கத்த, பாண்டியன் அதிர்ச்சியாகி நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், எதற்கு இப்படி குப்பை ஆக்குகிறீர்கள்? ஏன் இந்த தேவை இல்லாத வேலை? என்று கேட்கிறார் பின் அவருக்கு எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். அதற்குப்பின் பாண்டியனை கேக் வெட்ட சொல்கிறார்கள். ஆனால், பாண்டியன் வேண்டாம் என்று தயங்கி நிற்கிறார். பின் எல்லோரும் கட்டாயப்படுத்தியதால் பாண்டியன் கேக் வெட்டி கொடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது பாண்டியன் ஆனந்த கண்ணீரில், இதுவரை என் வாழ்க்கையில் யாரும் இப்படி செய்ததில்லை என்று சொன்னதற்கு கோமதி, இதையெல்லாம் உங்கள் மூன்று மருமகள்களும் செய்தது தான் என்று சொல்ல, அவர்களுக்கு நன்றி சொல்கிறார். அதற்குப்பின் பாண்டியனுக்கு வாங்கி வைத்த கிப்ட்டை கொடுக்கிறார்கள். பாண்டியன் அதை பிரித்து பார்த்து சந்தோஷப்படுகிறார். கோமதிக்கும் ஒரு புடவை வாங்கித் தந்திருக்கிறார்கள். அதற்குப்பின் இருவருமே தங்களுக்கு கொடுத்த புது துணி துணியை அணிந்து கொண்டு வெளியே போக, மகன்கள், மருமகள்கள் சந்தோஷமாக வழியனுப்பி வைக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full