தன் அப்பாவிற்காக ராஜியிடம் சண்டை போட்ட கதிர், உண்மையை உளறி வாங்கி கட்டிய மீனா- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வடிவு, நகை பற்றி மறைத்து வைத்த விஷயம் ராஜி அப்பாவிற்கு தெரிந்து பயங்கரமாக சண்டை போட்டார். இருந்தும் நகை எங்கே இருக்கு? என்று வடிவு சொல்லவில்லை. ஆனால், உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு ராஜி அப்பா சென்று விட்டார். இன்னொரு பக்கம், சரவணன்-தங்கமயில் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக எடுத்த புகைப்படத்தை எல்லாம் தெரியாமல் ஃபேமிலி குரூப்பில் அனுப்பி இருந்தார்கள்.
இதை பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி விட்டது. இதை வைத்து மீனா, பாண்டியனிடம் வம்பு இழுத்தார். கடைசியில் செந்தில், சரவணனுக்கு போன் செய்து போட்டோ விஷயத்தை சொல்ல, சரவணன்- தங்கமயில் இருவரும் அதிர்ச்சியாகி இருந்தார்கள். உடனே தங்கமயில் போட்டோவை டெலிட் செய்ய பார்த்தார். ஆனால், மாத்தி பண்ணி விட்டார். பின் தங்கமயில் அனுப்பிய போட்டோவை வைத்து ராஜி- மீனா இருவரும் போன் செய்து பங்கமாக கலாய்த்தார்கள். இன்னொரு பக்கம் வீடியோ கால் மூலம் செந்தில், கதிர் இருவரும் சரவணனுக்கு போன் செய்து கிண்டல் செய்தார்கள். மேலும், ராஜியின் அப்பா, நகை எங்கே? என்று வடிவை கேட்டு கோபப்பட்டு பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் இருவருக்கும் இடையே பயங்கரமாக சண்டை நடந்தது. கடைசியில் அவர், வடிவை அடித்து கீழே தள்ள போகும்போது மாரி, உங்கள் மகளுக்கு தான் கொடுத்தோம் என்று உண்மையை உளறி விட்டார். இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகி பயங்கரமாக சண்டை போட்டு வந்து விட்டார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ராஜி பயத்தில் இருந்தார். பின் வீட்டிற்கு வந்த சித்தப்பா, தன்னுடைய அண்ணனிடம் நடந்தது எல்லாம் சொல்ல, அண்ணனும் நகை விஷயத்தை அவரிடம் சொல்லி இருந்தார்.
சீரியல் கதை:
ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள். பதிலுக்கு பாண்டியனும் சண்டைக்கு போனார். கடைசியில் ராஜி செய்த வேலையை எல்லாம் அவர் சித்தப்பா சொல்ல மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தறல்கள். அப்போது கோமதி அண்ணன்கள் பாண்டியனை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். பின் பாண்டியன் அவர்களுக்கு பதில் கொடுத்து விட்டு வந்தார். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்கிறார்.
இன்று எபிசோட்:
பாண்டியன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். எதற்கு நீ வேலைக்கு போனாய்? என்ன காரணம்? என்று கோமதி கேட்டதற்கு ராஜி, கதிர் இரவு-பகல் என்று பார்க்காமல் வேலைக்கு போவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் போனேன் என்று சொன்னார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், உடனே கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். எனக்கும் என் அப்பாவிற்கும் இடையே ஆயிரம் சண்டை இருக்கும். நீ எதற்காக வேலைக்கு போனாய்? உன்னால் என் அப்பா அசிங்கப்பட்டு இருக்கிறார்? என்றெல்லாம் கேட்க, கோமதியும் பயங்கரமாக ராஜுவை திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் மீனா, அவள் சொந்தமாக நிற்க வேலைக்கு போகிறார். இதிலென்ன தப்பு? என்று சொல்ல, இந்த விஷயம் உனக்கு தெரியுமா? என்று கேட்டதற்கு உண்மையை மீனா உளறி விடுகிறார். இதனால் பாண்டியன், மீனாவை தான் அதிகம் திட்டுகிறார். பின் மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்று பேசுகிறது. கடைசியில் பாண்டியன் வருத்தப்பட்டு திட்டிவிட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜு வீட்டில் பாண்டியன் பற்றி மோசமாக பேசுகிறார்கள். அப்போது வடிவு -ராஜி அப்பா இருவருக்குமே சண்டை நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.