சந்தோசமாக நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிய பாண்டியன் குடும்பம், ராஜியின் அப்பா செய்த வேலை? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 6/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், பழனிக்கு பெண் பார்த்து இருப்பதாக வீட்டில் சொல்ல, எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பழனி, குஷியில் வெட்கப்பட்டார். பின் இதைப்பற்றி பழனி, தன் அண்ணன்கள் இடம் சொல்ல, அவர்கள் கோபப்பட்டு சண்டை போட்டு இருந்தார்கள். கடந்த வாரம் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்க போகும் போது அலப்பறை செய்து இருந்தார்கள். பழனியை அழகாக ரெடி பண்ணி இருந்தார்கள்.

பின் அங்கு பாண்டியன், தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு பெருமையாக பழனியை பற்றி பேசி இருந்தார். மஞ்சுளாவை எல்லோருக்கும் பிடித்து விட்டது. பெண்ணை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப பிடித்து விட்டது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள், எப்படியும் அவனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். அவனை கேலி செய்து அனுப்பி விடுவார்கள் என்று கிண்டலாக பேசி இருந்தார்கள். பழனி- மஞ்சுளா இருவருக்குமே பிடித்து போனதால் வீட்டில் ஒப்பந்தம் பேசி நிச்சயதார்த்தம் வரை பேசி முடித்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் வெளியில் நின்று, பழனிக்கு இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம். அண்ணன்கள் நிச்சயதார்த்தத்திற்கு வரலாம். என் தலைமையில் தான் கல்யாணம் என்று அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசி இருந்தார். அதன் பின் கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வரும் வழியை மறைத்து பழனிக்கு பெண் பார்த்த விஷயத்தை பற்றி கேட்டார்கள். உடனே பாண்டியன், அண்ணன்கள் அவனுக்கு சரியில்லை. அதனால் தான் அக்கா புருஷனாக நான் செய்தேன் என்றார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதற்கு கோமதி அண்ணன்கள், இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது. பழனிக்கு எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் செய்வோம் என்று மிரட்ட, பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக நிச்சயதார்த்தம், திருமணம் நடக்கும் என்று சவால் விட்டார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுத்தார். அந்த சமயம் பார்த்து மீனா, இட ஆக்கிரமிப்பு விஷயத்தில் கோமதியின் அண்ணன்கள் தன்னிடம் தகராறு செய்ததைப் பற்றி பாண்டியனிடம் சொல்ல, அவர் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

உடனே மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படி செய்வேன் என்று சொன்னவுடன் பாண்டியன் அவருக்கு சப்போர்ட் ஆக பேசி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, நிச்சயதார்த்தத்திற்கு என்னுடைய அம்மா, அண்ணிகளை எல்லாம் கூப்பிடலாமா? என்று கேட்க, பாண்டியன் சிரித்துக் கொண்டே சம்மதம் சொல்கிறார். பின் வீட்டில் எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கான வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பழனி, தன்னுடைய அம்மா, அண்ணிகள் இடம் நிச்சயதார்த்தத்தை பற்றி சொல்லி அழைக்கிறார். அவர்களும் சம்மதம் சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் வந்த பழனியின் அண்ணன்கள் அவரை திட்டி வெளியே அனுப்பி விடுகிறார்கள். மறுநாள் நிச்சயதார்த்தத்திற்காக பாண்டியன் வீட்டில் எல்லோருமே கோயிலுக்கு கிளம்பி போகிறார்கள். இன்னொரு பக்கம் பழனியின் அம்மா, அண்ணிகளும் தயாராகி வருகிறார்கள். அதை பார்த்தவுடன் அவருடைய கணவன்கள் சண்டை போட்டார்கள். உடனே ராஜி அப்பா, அவர்கள் போகட்டும் என்றவுடன் எல்லோருமே சந்தோசமாக கிளம்புகிறார்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?என்று தன்னுடைய அண்ணனிடம் கேட்க, அவர் நிச்சயதார்த்தம் நடந்தால் தானே, அசிங்கப்பட்டு வரட்டும் என்று சிரித்துக் கொண்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full