கோவிலுக்கு பரப்பரப்பாக தயாராகும் பாண்டியன் குடும்பம், பயத்தில் தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ஹாஸ்பிடலுக்கு கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி கேவலமாக பேசி இருந்தார்கள். உடனே பாண்டியன், கோமதிக்கு துணையாக நின்று பேசியதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. கோமதி அண்ணன்களும் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து சென்று விட்டார்கள். பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார்.
இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். இதனால் தங்கமயில் அம்மா-அப்பா கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளித்ததால் பாண்டியனும் அமைதியாக விட்டார். பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைக்க உங்களை அழைக்க வந்தேன் என்று அந்தர் பல்டி அடித்து சமாளித்தார்கள். பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்தார். பின் கதிர், ராஜிவை சைக்கிளில் அழைத்து சென்றார். இதை பார்த்த சக்தி, அவர்கள் மீது மோத வேகமாக பைக்கை ஓட்டி வந்தார். ஆனால், கடைசியில் சக்தி தான் கீழே விழுந்த மண்ணை கவ்வினார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா செய்த வேலையை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அவர்களும் மன்னிப்பு கேட்க, தங்கமயில் பயங்கரமாக தன்னுடைய அப்பா அம்மா மீது கோபப்பட்டு கத்துகிறார். என்ன நடக்க போகிறது? என்ற வருத்தத்தில் தங்கமயில் இருக்க, அவர் அம்மா ஆறுதல் செல்லி இருந்தார். பின் எந்த கோயிவில் பொங்கல் வைப்பது? என்ன செய்யலாம்? பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்வது ?என்றெல்லாம் தங்கமயில் அம்மா-அப்பா யோசித்து புலம்பி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவுடன் செந்தில் வெளியே சென்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் போன் செய்ததால் மீனா வேறு ஒருவர் போல் பேசி கலாய்த்து இருந்தார். உடனே பாண்டியன் போனை வைத்து விட்டார். வீட்டில் எல்லோருமே பொங்கல் வைப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கமயில் பேச வரும்போது மட்டும் பாண்டியன் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவர் எல்லாத்தையும் சரவணனிடம் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே கதிர், ராஜி இருவரும் தங்கமயிலுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுக்காமல் பாண்டியன் எழுந்து சென்று விடுகிறார். பின் கோமதி, கோவிலுக்கு எல்லோரும் சீக்கிரமாக தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதற்குப்பின் தங்கமயில், மீனா, ராஜி ,கோமதி சாப்பிட்டுக் கொண்டே கோயிலுக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் ஒவ்வொரு ஜோடியுமே கோயிலுக்கு கிளம்புவதற்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.