செந்தில் சொன்ன விஷயத்தால் சந்தோஷப்படும் பாண்டியன், கதிர் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமாரும் சக்தி வேலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது குமார், அரசியை சாப்பாட்டை பரிமாற சொன்னார் . வேண்டுமென்றே குமார், அரசி சாப்பாடு போடும் போது தட்டை நகர்த்தி விட்டார். இதனால் கோபப்பட்டு குமார், அரசியை மோசமாக திட்டி இருந்தார். அதோடு அரசியும், பாண்டியன் குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் சக்திவேல் சந்தோஷப்பட்டார். அப்போது வந்த அப்பத்தா, குமாரை திட்டி இருந்தார். பின் ரூமிற்கு வந்த குமார், அரசியிடம் மீண்டும் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட அரசி, குமாரை அடித்து கீழே தள்ளி கழுத்தை கயிறு வைத்து நெருக்கினார்.
மூச்சு விட முடியாமல் குமார் திணறினார். அதற்குப்பின் அரசி, குமாரை மிரட்டி வெளியே போய் தூங்க சொன்னார். இன்னொரு பக்கம் செந்திலுக்கு போன் செய்த மீனாவின் அப்பா வீட்டிற்கு வர சொன்னார். செந்தில் ரொம்பவே பதறினார். பின் மீனா- செந்தில் இருவருமே கிளம்பும்போது பாண்டியன், செந்திலுக்கு வேலை வைத்தார். உடனே மீனா ஏதோ காரணம் சொல்லி செந்திலை அழைத்து கொண்டு தன் அப்பா வீட்டிற்கு போனார்கள். அப்போது செந்தில், வேலை விஷயத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார் உடனே மீனாவின் அப்பா, பதற வேண்டாம். ஆர்டர் போட்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்று சொன்னார்கள். இதை கேட்டவுடன் செந்தில் சந்தோஷப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் மீனாவின் அப்பா, நாம் ஒரு இடத்திற்கு போக வேண்டும். கிளம்புங்கள் என்று சொன்னார். மீனா, கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் தானே? பணம் ஏமாத்திட மாட்டார்களே? என்று பயப்பட்டார். அதற்கு அவருடைய அப்பாவும் ஆறுதல் சொல்லி அவர்களை அழைத்து வந்தார்.
இன்னொரு பக்கம் பாண்டியன், செந்திலுக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருந்தார். ஆனால், செந்தில் போன் எடுக்கவே இல்லை. பின் மீனாவிற்கு ஃபோன் செய்ய, அவருமே போன் எடுக்கவில்லை. இதனால் பாண்டியன் கோபப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் அலுவலகத்திற்கு சென்ற செந்தில், மீனா, மீனாவின் அப்பா மூவருமே ஒரு அதிகாரியை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது அவர், செந்தில் வேலைக்கான ஆர்டரை கையில் கொடுத்தார். அதை பார்த்தவுடன் செந்திலுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை ஷாக்கில் உறைந்து போய் இருந்தார். அதை நம்புவதா? நம்ப வேண்டாமா? என்று கூட புரியாத அளவிற்கு செந்தில் இருந்தார். அப்போது மீனாவின் அப்பா, இது உங்களுடைய வேலை சீக்கிரத்திலேயே உங்களுக்கு பெர்மனென்ட் ஆகிவிடும் தைரியமாக இருங்கள் என்று சொன்னார். உடனே செந்தில் தன்னுடைய மாமனாருக்கும் மீனாவிற்கும் எமோஷனலாக நன்றி சொல்லி சொன்னார். சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் செந்தில் குதித்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், சரவணன்- கதிர்-பழனியை வீட்டிற்கு வர வைத்திருந்தார். கோமதி எதற்காக வந்தீர்கள்? எதற்காக செந்தில் வரச்சொன்னார்? என்று கேட்டார். அவர்கள் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்து பாண்டியன், எல்லோரும் வீட்டில் இருப்பதை பார்த்து ஏன்? என்ன ப்ரச்சனை என்று கேட்கிறார். அந்த சமயம் பார்த்து ஸ்வீட்டோடு மீனா-செந்தில் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். தனக்கு கிடைத்த ஆர்டரை பாண்டியனிடம் கொடுக்கிறார். அவர் சரவணனிடம் படிக்க சொல்கிறார். சரவணன், அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் செந்திலுக்கு கவர்மெண்டில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் மொத்த விடுமே சந்தோஷப்படுகிறது. ஸ்வீட் எடுத்து கொண்டாடுகிறார்கள். கோமதிக்கு தலைகால் புரியாமல் குதிக்கிறார்.
அப்போது செந்தில், இதற்கெல்லாம் காரணம் மீனாவும் அவருடைய அப்பாவும் தான். அவர் மூலம் தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது என்று சொல்கிறார். பின் செந்தில் மளிகை கடை வேலைக்கு போவதில்லை. அப்போது பாண்டியன், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருந்தார். அங்கு வந்த சரவணன், இனி நான் கடைக்கு வருகிறேன். நான் செய்யும் வேலையை விட்டு விடுகிறேன் என்கிறார். அதற்குப்பின் செந்தில்- கதிர்- ராஜி- மீனா பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், டிராவல்ஸ் ஏஜென்சி ஆரம்பிக்க போகிறேன். அதற்கான ஏற்பாடுகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார். இத்துடன் சீரியல் முடிகிறது