அரசியை நினைத்து கவலைப்படும் பாண்டியன் குடும்பம், மாப்பிள்ளைக்கு உண்மை தெரிந்ததா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சுகன்யா, அரசி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார், எழுப்ப வேண்டாம் என்று சமாளித்து அனுப்பி விட்டார். வீட்டில் எல்லோருமே திருமண வேளையில் மும்முரமாக செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அரசியை ரெடி பண்ண மீனா, ராஜி இருவரும் அவருடைய ரூமிற்கு போனார்கள். ஆனால், அங்கு அரசி இல்லை. பின் வீடு முழுக்க மீனா, ராஜி இருவருமே அரசியை தேடி பார்த்தார்கள். ஆனால், எங்கும் அரசி இல்லை. அதன் பின் இதை பற்றி கதிர்- செந்தில் இடம் மீனா சொனார். பின் வீட்டில் எல்லோருக்குமே அரசி காணாமல் போன விஷயம் தெரிந்து விட்டது.

ஒவ்வொருவரும் அரசி எங்கே போய் இருப்பாள்? என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், இது குமார் செய்த வேலையாக இருக்கும் என்று சொன்னார். அப்போது உறவினர்கள், குமார்- அரிசி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டோம். அப்போது உண்மைதானா? குமாருடன் அரசி ஓடிப் போய் விட்டாளா? என்றெல்லாம் பேசினார்கள். இதைக் கேட்ட பாண்டியன், கோமதி இருவருமே இடிந்து போய் விட்டார்கள். பழனி, குமாரை தேடி கிளம்பினார். பின் சுகன்யா, குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பாவிடம் விசாரித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சுகன்யா, அரசியை குமார் பார்க்க வேண்டும் என்று சொன்னான். நான் தான் அழைத்துக் கொண்டு போனேன். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. அரசிக்கு என்னானது என்று தெரியவில்லை என்று சக்திவேலிடம் சொல்லி புலம்பி இருந்தார். சக்திவேலும், தன் மகன் செய்த வேலையை நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால், சுகன்யா என்ன நடக்குமோ என்று பயத்தில் இருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீடு சோகத்தில் மூழ்கி கிடந்தது. குமார் தான் அரசியை கடத்திக் கொண்டு சென்றிருப்பார் என்று வீட்டில் உள்ள எல்லோருமே பயந்தார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் அரசியை குமார் கட்டி போட்டு வைத்திருந்தார். அரசி, என்னை எதற்காக கடத்திட்டு வந்தாய். உன்னை நம்பியது தப்பா? ஏன் இப்படி என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று ரொம்ப எமோஷலாக பேசி அழுதார். உடனே குமார், நான் உன்னை காதலிப்பது போல் நம்பி ஏமாத்தினேன். உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை. என்னுடைய சுண்டு விரல் கூட உன் மீது படாது. ஆனால், நாளை கல்யாணம் நடக்கும் போது நீ என்னுடன் தான் இருந்தாய் என்று சொல்லி கொண்டு போய் விடுவேன். நீயும் உன்னுடைய குடும்பமும் அசிங்கப்படணும் என்று ரொம்ப மோசமான வில்லனாக பேசி இருந்தார். இதைக் கேட்டு அரசி கதறினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரிசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வீட்டில் எல்லோருமே பதறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பதில் செந்தில், கதிர், சரவணன் மூவருமே குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா,பெரிய அப்பாவிடம் சண்டை போடுகிறார்கள். அவர்களுமே, குமார் இங்கு இல்லை எங்களுக்கு எந்த விஷயம் தெரியாது என்கிறார்கள். ஆனால், சக்திவேல் உள்ளுக்குள் சந்தோஷப்டுகிறார்.
அதற்குப்பின் முத்துவேல், சக்திவேல் இடம் குமார் எங்கே? என்று கேட்க, அவர் திருச்சி சென்றிருக்கிறான் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அவரும் அதை நம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து எல்லோரும் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் பாண்டியன் கதி கலங்கி நிற்கிறார். பின் மாப்பிளை வீட்டார், அரசி எங்கே? நேரம் ஆகிறது என்று கேட்கிறார்கள். உடனே அங்கிருந்து உறவினர், அரசி, குமாருடன் ஓடிவிட்டாள் என்று சொன்னவுடன் மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் ஷாக் ஆகிறார்கள். பாண்டியன் குடும்பத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full