அரசியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம், திருமணம் நடக்குமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 23/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நல்லபடியாக அரசிக்கு நலங்கு வைக்கும் பங்க்ஷன் முடிந்து விட்டது. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருந்தார்கள். ஆனால், சுகன்யா மட்டும் பதட்டத்திலேயே இருந்தார். காரணம் குமார், சுகன்யாவுக்கு போன் செய்தபடியே இருந்தார். ஆனால், சுகன்யாவால் போன் பேச முடியவில்லை. நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்த பிறகு அரசியை தனியாக சந்தித்து சுகன்யா பேசினார். அப்போது சுகன்யா, குமார் போன் செய்து கொண்டிருக்கிறான். நீ பேசு என்று சொன்னார். ஆனால், அரசி போனை வாங்க மறுத்தார்.

பின் சுகன்யா, குமார் போன் செய்தவுடன் வலுக்கட்டாயமாக அரசிடம் கொடுத்து பேச வைத்தார். அப்போது குமார், நல்லபடியாக ஃபங்ஷன் முடிந்து விட்டதா? ஆனால், இந்த திருமணம் நடக்காது என்று வழக்கம்போல அவரை போட்டோவை வைத்து மிரட்டி இருந்தார். அதற்கு அரசி, நான் என் அப்பா அம்மா சொல்வதை தான் கேட்பேன். தயவு செய்து உன்னை காதலித்ததற்கு என்னை மன்னித்துவிடு என்று கேட்டார். உடனே குமார், நீ நேரில் வந்து மன்னிப்பு கேள் என்று சொன்னார். அதற்கு சுகன்யா, மன்னிப்பு தானே போய் நேரில் கேட்டு விட்டு வந்துவிடு. இந்த பிரச்சனை முடிந்துவிடும் என்று அரசியை அனுப்பி வைக்க பார்த்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அரசி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியே கிளம்பப் பார்த்தார். அந்த சமயம் பார்த்து அரசியின் அண்ணன், அம்மா வந்து விட்டார்கள். ஆனால், அரசி ஏதோசொல்லி சமாளித்தார். நேற்று எபிசோட்டில் சுகன்யா, அரசியை எப்படியாவது குமாரிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சித்தார். அப்போது வீட்டில் உறவினர்கள் எல்லோருமே இருப்பதால் வெளியில் போக கஷ்டமானது. பின் எப்படியோ போராடி அரசியை வெளியே அனுப்பி வைத்தார் சுகன்யா. இன்னொரு பக்கம் குமாரை சந்தித்து மன்னிக்க கேட்டார் அரசி.

நேற்று எபிசோட்:

அப்போது குமார், நான் உன்னை காதலிக்கவில்லை. என் வலையில் சிக்க வைக்க தான் நான் இப்படி செய்தேன் என்று சொன்னார். இதை கேட்டவுடன் அரசி பயந்து அங்கிருந்து தப்பிக்க பார்த்தார். உடனே குமாரின் ஆட்கள் அரசியை பிடித்து விட்டார்கள். அரசி எவ்வளவு முயற்சித்தும் குமாரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. குமார் அரசியை ஒரு காரில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் திருமண வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள். அரசியை பார்க்க கோமதி போனார். உடனே சுகன்யா, அரசி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார், எழுப்ப வேண்டாம் என்று சமாளித்து அனுப்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே திருமண வேளையில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அரசியை ரெடி பண்ண மீனா, ராஜி இருவரும் அவருடைய ரூமிற்கு போகிறார்கள். ஆனால், அங்கு அரசி இல்லை. பின் வீடு முழுக்க மீனா, ராஜி இருவருமே அரசியை தேடுகிறார்கள். அதன் பின் கதிர்- செந்தில் இடம் சொல்கிறார்கள். பின் வீட்டில் எல்லோருக்குமே அரசி காணாமல் போன விஷயம் தெரிந்து விடுகிறது.

சீரியல் ட்ராக்:

ஒவ்வொருவரும் அரசு எங்கே போய் இருப்பாள்? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், குமார் உடன் அரசி சென்று இருப்பாரா? என்று சொல்கிறார். அப்போது உறவினர்கள், குமார்- அரிசி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டோம். அப்போது உண்மைதானா? குமாருடன் அரசி ஓடிப் போய் விட்டாளா? என்றெல்லாம் பேசுகிறார்கள். இதைக் கேட்டு பாண்டியன், கோமதி இருவருமே இடிந்து போய் விடுகிறார்கள். பழனி, குமாரை தேடி கிளம்புகிறார். பின் சுகன்யா, குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பாவிடம் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full