குமாரின் சூழ்ச்சிக்கு அரசி கொடுத்த பதிலடியால் உறைந்து போன பாண்டியன் குடும்பம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 25/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார், நான் உன்னை காதலிக்கவில்லை. என் வலையில் சிக்க வைக்க தான் நான் இப்படி செய்தேன் என்று சொன்னார். இதை கேட்டவுடன் அரசி பயந்து அங்கிருந்து தப்பிக்க பார்த்தார். உடனே குமாரின் ஆட்கள் அரசியை பிடித்து விட்டார்கள். அரசி எவ்வளவு முயற்சித்தும் குமாரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. குமார் அரசியை ஒரு காரில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் திருமண வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள். அரசியை பார்க்க கோமதி போனார்.

உடனே சுகன்யா, அரசி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார், எழுப்ப வேண்டாம் என்று சமாளித்து அனுப்பி விட்டார். வீட்டில் எல்லோருமே திருமண வேளையில் மும்முரமாக செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அரசியை ரெடி பண்ண மீனா, ராஜி இருவரும் அவருடைய ரூமிற்கு போனார்கள். ஆனால், அங்கு அரசி இல்லை. பின் வீடு முழுக்க மீனா, ராஜி இருவருமே அரசியை தேடி பார்த்தார்கள். ஆனால், எங்கும் அரசி இல்லை. அதன் பின் இதை பற்றி கதிர்- செந்தில் இடம் மீனா சொனார். பின் வீட்டில் எல்லோருக்குமே அரசி காணாமல் போன விஷயம் தெரிந்து விட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

ஒவ்வொருவரும் அரசி எங்கே போய் இருப்பாள்? என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், இது குமார் செய்த வேலையாக இருக்கும் என்று சொன்னார். அப்போது உறவினர்கள், குமார்- அரிசி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டோம். அப்போது உண்மைதானா? குமாருடன் அரசி ஓடிப் போய் விட்டாளா? என்றெல்லாம் பேசினார்கள். இதைக் கேட்ட பாண்டியன், கோமதி இருவருமே இடிந்து போய் விட்டார்கள். பழனி, குமாரை தேடி கிளம்பினார். பின் சுகன்யா, குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பாவிடம் விசாரித்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சுகன்யா, அரசியை குமார் பார்க்க வேண்டும் என்று சொன்னான். நான் தான் அழைத்துக் கொண்டு போனேன். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. அரசிக்கு என்னானது என்று தெரியவில்லை என்று சக்திவேலிடம் சொல்லி புலம்பி இருந்தார். சக்திவேலும், தன் மகன் செய்த வேலையை நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால், சுகன்யா என்ன நடக்குமோ என்று பயத்தில் இருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீடு சோகத்தில் மூழ்கி கிடந்தது. குமார் தான் அரசியை கடத்திக் கொண்டு சென்றிருப்பார் என்று வீட்டில் உள்ள எல்லோருமே பயந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் அரசியை குமார் கட்டி போட்டு வைத்திருந்தார். அரசி, என்னை எதற்காக கடத்திட்டு வந்தாய். உன்னை நம்பியது தப்பா? ஏன் இப்படி என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று ரொம்ப எமோஷலாக பேசி அழுதார். உடனே குமார், நான் உன்னை காதலிப்பது போல் நம்பி ஏமாத்தினேன். உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை. என்னுடைய சுண்டு விரல் கூட உன் மீது படாது. ஆனால், நாளை கல்யாணம் நடக்கும் போது நீ என்னுடன் தான் இருந்தாய் என்று சொல்லி கொண்டு போய் விடுவேன். நீயும் உன்னுடைய குடும்பமும் அசிங்கப்படணும் என்று ரொம்ப மோசமான வில்லனாக பேசி இருந்தார். இதைக் கேட்டு அரசி கதறினார்.

https://www.youtube.com/watch?v=CLrfzAe4CkU

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருகிறார்கள். அப்போது அரசி- குமாருடன் சென்று இருக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் மாப்பிள்ளையின் அம்மா ரொம்பவே கோபப்படுகிறார். பின் என்ன சொல்வது? என்று தெரியாமல் பாண்டியன் அமைதியாக இருக்கிறார். அப்போது குமார் வந்திருக்கும் விஷயத்தை அறிந்து எல்லோருமே வெளியே போகிறார்கள். காரில் இருந்து குமாரும் அரசியும் வருகிறார்கள். அப்போது குமார், இரவு முழுவதும் என்னுடன் தான் அரசி இருந்தாள் என்று சொல்வதைக் கேட்டு எல்லோருமே இடிந்து போகிறார்கள். உடனே அரசி, கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக்காட்டுகிறார். ஆனால், அது குமார் கட்டுவதில்லை. அரசி தனக்கு தானே கட்டியிருக்கிறார். பின் அரசி, நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் விஷம் குடித்து செத்து விடுவேன் என்று பிளாக்மெயில் செய்தார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு குமார் ஷாக் ஆகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full