கதிர் நிலையை கண்டு மனம் உடைந்து கதறும் பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 8/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ஒரு பெண்ணை கதிர் கடத்தி விட்டான் என்று சொல்லி போலீஸ் தரதரவென இழுத்துச் சென்றது. இதனால் பாண்டியன் குடும்பம் உடைந்து போய் இருந்தது. பின் பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விசாரித்தார். அப்போது கதிர், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், கதிரை உண்மையை சொல்லு என்று அடி அடி என்று வெளுத்து வாங்கி, பயங்கரமாக துன்புறுத்தி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி கொண்டு இருந்தார்.

அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வெளியே ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பாண்டியனின் குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். இதனால் ஆத்திரத்தில் பாண்டியன் அவர்களிடம் சண்டைக்கு போக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. பின் பாண்டியன், என் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வெளியே கூட்டி விடுவேன் என்று சவால் விட்டார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பாண்டியன், கதிரை பார்த்து ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார். அப்போது வந்த ராஜியின் சித்தப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதற்கிடையில் கதிர், நீங்கள் அந்த பெண்ணை கண்டுபிடித்தால் தான் நான் வெளியே வருவேன் என்று செந்தில் இடம் ஐடியா கொடுத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு ராஜி போய் இருந்தார். அப்போது போலீஸ், நீ பெரிய குடும்பத்து பெண்ணாக இருந்து எதற்காக இவனை நம்பி போனாய். இவன் ரொம்ப மோசமானவன் என்று கதிரை சொல்ல,அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் எந்த பெண்ணையும் கடத்தவில்லை என்று கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அந்த பெண், தன்னுடன் படிப்பவர்கள் தான் கடத்தி வைத்ததாக சொன்னவுடன் போலீஸ் கதிரை விட்டது. பாண்டியன் கோபத்தில் போலீசை திட்டி இருந்தார். நேற்று எபிசோட்டில் பாண்டியன் தன்னுடைய மகனை, ராஜியின் அப்பா வீட்டிற்கு அழைத்து சென்று தான் விட்ட சவாலில் வெற்றி பெற்றதை சொல்லி பெருமையாக பேசி இருந்தார். அதோடு என் மகன் மீது எந்த தவறும் இல்லை, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச தேவையில்லை என்றார். இதனால் ராஜி அப்பா, சித்தப்பாவால் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ராஜி, உங்கள் மகன் தான் எங்களை கடத்தி வைத்து தேவையில்லாத வேலை செய்தான் என்றார். அதற்கு பின் தன்னுடைய மகனை பாண்டியன் வீட்டிற்கு அழைத்துப் போனார். அங்கே எல்லோருமே கதிரை விசாரித்து அக்கரையாக பேசி இருந்தார்கள். பின் பாண்டியன் கடைக்கு போகணும் என்று சொன்னவுடன் செந்தில்- சரவணன் இருவரும் கதிர் உடன் இருக்கிறோம் என்றார்கள். அதற்கு மீனா, எல்லோரும் லீவு போட்டுவிடலாம் என்றார். இதனால் பாண்டியன் கோபமாக பார்த்தார்.

https://www.youtube.com/watch?v=5A5dugzwla4

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதிரின் உடம்பு முழுவதுமே போலீஸ் அடித்த அடியால் வீங்கி போய் இருக்காது. நிறைய இடங்களில் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதை பார்த்து கோமதி ரொம்பவே அழுகிறார். ராஜியும், கதிர் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு எமோஷனலாக பேசுகிறார். பின் கதிர் தன்னுடைய அண்ணன்களுடன் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பாண்டியன், கதிர் பக்கத்தில் உட்கார்ந்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full