நின்றுபோன நிச்சயதார்த்தம், அதிர்ச்சியில் பழனி, சோகத்தில் பாண்டியன் குடும்பம் - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 7/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், பழனிக்காக பெண் பார்த்து இருப்பதை வீட்டில் சொல்ல, எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பழனி, குஷியில் வெட்கப்பட்டார். பின் இதைப்பற்றி பழனி, தன் அண்ணன்கள் இடம் சொல்ல, அவர்கள் கோபப்பட்டு சண்டை போட்டு இருந்தார்கள். பின் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்க போனார்கள். பழனி- மஞ்சுளா இருவருக்குமே பிடித்து போனதால் வீட்டில் ஒப்பந்தம் பேசி நிச்சயதார்த்தம் வரை பேசி முடித்தார்கள்.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் வெளியில் நின்று, பழனிக்கு இன்னும் நான்கு நாட்களில் நிச்சயதார்த்தம். அண்ணன்கள் நிச்சயதார்த்தத்திற்கு வரலாம். என் தலைமையில் தான் கல்யாணம் என்று அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசி இருந்தார். அதன் பின் கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வரும் வழியை மறைத்து இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது. பழனிக்கு எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் செய்வோம் என்று மிரட்ட, பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக நிச்சயதார்த்தம், திருமணம் நடக்கும் என்று சவால் விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுத்தார். நேற்று எபிசோட்டில் பழனி, நிச்சயதார்த்தத்திற்கு என்னுடைய அம்மா, அண்ணிகளை எல்லாம் கூப்பிடலாமா? என்று கேட்க, பாண்டியன் சிரித்துக் கொண்டே சம்மதம் சொன்னார். உடனே பழனி, தன்னுடைய அம்மா, அண்ணிகள் இடம் நிச்சயதார்த்தத்தை பற்றி சொல்லி அழைத்தார். அவர்களும் சம்மதம் சொன்னார்கள். அந்த சமயம் வந்த பழனியின் அண்ணன்கள், அவரை திட்டி வெளியே அனுப்பி விட்டார்கள்.

நேற்று எபிசோட்:

மேலும், நிச்சயதார்த்தத்திற்காக பாண்டியன் வீட்டில் எல்லோருமே கோயிலுக்கு கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் பழனியின் அம்மா, அண்ணிகளும் தயாராகி இருந்தார்கள். அதை பார்த்தவுடன் அவருடைய கணவன்கள் சண்டை போட, வாக்குவாதம் அதிகமானது. உடனே ராஜி அப்பா, அவர்கள் போகட்டும் என்றவுடன் எல்லோருமே சந்தோசமாக கிளம்பி இருந்தர்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?என்று தன்னுடைய அண்ணனிடம் தம்பி கேட்க, அவர் நிச்சயதார்த்தம் நடந்தால் தானே, அசிங்கப்பட்டு வரட்டும் என்று சிரித்துக் கொண்டு சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பமே நிச்சயதார்த்தத்திற்காக கோவிலுக்கு போய்விடுகிறார்கள். அங்கு சொந்தக்காரர்கள் எல்லாம் பார்த்து வரவேற்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் பாண்டியன் குடும்பம். அந்த சமயம் பார்த்து பழனியின் அம்மா, அண்ணிகள் எல்லாம் கோயிலுக்கு வந்தார்கள். அதை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப சந்தோஷம். நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பெண் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை. அப்போது பெண்ணினுடைய உறவினர் ஒருவர், இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அவர்கள் வேணாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றவுடன் பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியாகிறது.

சீரியல் ட்ராக்:

பழனியால் எதுவுமே பேச முடியாமல் உறைந்து விடுகிறார். பின் செந்தில், சரவணன், தங்கமயில், மீனா ஆகிய நான்கு பேருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார்கள். அப்போது அவர்கள், பழனி மளிகை கடையில் எடுபுடி வேலை செய்கிறார். உங்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சனை இருக்கு. எங்களுக்கு இந்த சம்பந்தம் தேவை இல்லை. உங்கள் குடும்பத்தை தப்பாக சொல்கிறார்கள் என்று பல காரணங்களை சொல்கிறார்கள். அவர்கள் நான்கு பேரும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்கள். ஆனால், பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full