பழனியை நினைத்து வேதனைப்படும் பாண்டியன் குடும்பம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 9/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் குடும்பத்தினர் பழனிக்கு பெண் பார்க்க போனார்கள். பழனி- மஞ்சுளா இருவருக்குமே பிடித்து போனதால் வீட்டில் ஒப்பந்தம் பேசி நிச்சயதார்த்தம் வரை பேசி முடித்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், பழனிக்கு பெண் பார்த்து முடித்த விஷயத்தை சொன்னவுடன் கோமதி அண்ணன்கள் கோபப்பட்டு இருந்தார்கள். அதற்கு பின் அவர்கள், பாண்டியனை வழி மறைத்து இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது. பழனிக்கு எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் செய்வோம் என்று மிரட்ட, பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக நிச்சயதார்த்தம், திருமணம் நடக்கும் என்று சவால் விட்டார்.

இந்த வாரம் பழனி, நிச்சயதார்த்தத்திற்கு என்னுடைய அம்மா, அண்ணிகளை எல்லாம் கூப்பிடலாமா? என்று கேட்க, பாண்டியன் சம்மதம் சொன்னார். பின் இதை பற்றி பழனி, தன்னுடைய அம்மா, அண்ணிகள் இடம் சொல்ல, அவர்களும் சம்மதம் சொன்னார்கள். அந்த சமயம் வந்த பழனியின் அண்ணன்கள், அவரை திட்டி வெளியே அனுப்பி விட்டார்கள். பின் பாண்டியன் குடும்பமே நிச்சயதார்த்தத்திற்காக கோவிலுக்கு போய் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பழனியின் அம்மா, அண்ணிகள் எல்லாம் கோயிலுக்கு வந்தார்கள். அதை பார்த்தவுடன் பழனிக்கு ரொம்ப சந்தோஷம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மேலும்,பெண் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை. அப்போது பெண்ணினுடைய உறவினர் ஒருவர், இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அவர்கள் வேணாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றவுடன் பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியானார்கள். பழனியால் எதுவுமே பேச முடியாமல் உறைந்து விட்டார். பின் செந்தில், சரவணன், தங்கமயில், மீனா ஆகிய நான்கு பேருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தார்கள். அப்போது அவர்கள், பழனி மளிகை கடையில் எடுபுடி வேலை செய்தார். உங்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சனை இருக்கு. எங்களுக்கு இந்த சம்பந்தம் தேவை இல்லை என்று பல காரணங்களை சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:

அவர்கள் எடுத்து சொல்லி புரிய வைத்துமே பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளவில்லை. நேற்று எபிசோட்டில் அதோடு கோமதியின் அண்ணன்கள் சொல்லி தான் பெண் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதை அறிந்த பாண்டியன் குடும்பம் ரொம்ப வருத்தப்பட்டர்கள். உடனே பழனி வீட்டுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்து வந்தார். பின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, வேதனையில் தன் மகன்களிடம் சண்டை போட்டார். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

இன்றைய எபிசோட்:

பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், பழனியையும் பார்த்து ஏளனமாக ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பேசி இருந்தார்கள். அப்போது பாண்டியன், இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வதா? அவன் என்ன செய்தான்? என்று எல்லாம் ரொம்ப ஆவேசமாக கத்தி இருந்தார். கோமதியும் ஆத்திரம் பொறுக்காமல் தன்னுடைய அண்ணன்கள் இடம் சண்டைக்கு போனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜியின் அப்பா, நீ பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் வரை உனக்கு கல்யாணம் நடக்காது. இங்கே வந்துவிடு. உனக்கு நாங்கள் கல்யாணம் செய்து வைக்கிறோம் என்று சொல்கிறார்கள். உடனே பழனி, நான் நிம்மதியாக என்னுடைய அக்கா, மச்சான் வீட்டில் இருக்கிறேன். எனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

சீரியல் ட்ராக்:

நாங்கள் அவமானப்பட்டு வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுங்கள் என்று சொல்லி கிளம்புகிறார். கோமதியும் மனம் தாங்காமல் தன்னுடைய அண்ணன்களுக்கு சாபம் விட்டு செல்கிறார். பின் வீட்டில் எல்லோருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பழனி, கடைக்கு நேரமாகிறது கிளம்புங்கள் என்று சொல்லி சென்று விடுகிறார். கடையில் எதைப் பற்றியும் யோசிக்காமல் பழனி மும்முரமாக வியாபாரம் பார்க்கிறார். ஆனால், பாண்டியன்-செந்தில் இருவருமே பழனியின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அப்போது கடைக்கு வருபவர்களுமே பழனியின் நிச்சயதார்த்தம் நின்று போனதை பற்றி தான் பேசுகிறார்கள். அந்த சமயம் வந்த கதிர், பழனியை வெளியே அழைத்து கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full