எலியும் பூனையுமா மோதிக்கொள்ளும் கதிர், செந்தில் ஜோடி- அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் நகையை பேங்கில் இருந்து வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து ராஜி நகையை தன் அண்ணன்களிடம் கொடுத்து விட்டார். வீட்டில் ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ராஜி- மீனா இருவருமே தன்னுடைய மாமியாரிடம் பேச சொல்லி கட்டாயப் படுத்தி இருந்தார்கள். ஆனால், அவர் முடியாது என்று சொல்ல, பின் தங்கமயில், கோமதியை சமாதானம் செய்ய, கோமதி மன்னித்து விட்டார். இந்த வாரம் ராஜி, மீனா, கோமதி மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கமயில் வந்த உடனே அவர்கள் அமைதியானால் தங்க மயிலுக்கு தன் அம்மா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டார்.
பின் மீனா மன்னிப்பு கேட்டும் செந்தில் மனம் இறங்கவில்லை. ராஜி- மீனா வெளியில் படுத்ததை பார்த்து கோமதி தூங்க வெளியே வந்தார். இருவரும் வருத்தப்பட்டு தன்னுடைய மாமியாரின் மடியிலேயே படுத்து அழுதார்கள். மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பும் போது மீனா தன்னுடைய மாமனாரிடம் பேச, அவர் முகம் கொடுத்து கூட பேசாததால் வருத்தப்பட்டு அழுதுகொண்டே சென்றார் மீனா. நேற்று எபிசோடில், பாண்டியன் வருவதை பார்த்து ராஜி அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார். இதை கவனித்த கோமதி, எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என்று பாண்டியன் இடம் பேச, அவரும் தான் செய்த தவறை உணர்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கடைக்கு வந்த மீனா, நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுகிறார். இதனால் பாண்டியன் மனமும் மாறி மீனாவை மன்னித்து விடுகிறார். பின் மீனாவை வேலைக்கு கொண்டு போய் விட சொல்லி செந்திலிடம் சொல்ல, அவரும் மீனாவை அழைத்து செல்ல கேட்கிறார். ஆனால், மீனா கோபத்தில் வேண்டாம் என்று சொல்லி கிளம்புகிறார். நேற்று எபிசோடில், கல்லூரிக்கு போகும் வழியில் கதிர்- ராஜி இருவருமே மறைமுகமாக பேசி கொண்டதால், ராஜி திட்டிவிட்டு அமைதியாகி விட்டார். வீட்டில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை குறித்து கோமதி அவரின் தம்பியிடம் பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதைக் கேட்ட தங்கமயில் சந்தோசப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் போனில் சொன்னார். பின் மீனா- ராஜி இருவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜு, நான் மீண்டும் டியூஷன் எடுக்க போகிறேன் என்று சொன்னவுடன் மீனா அதிர்ச்சியாகி வீட்டில் சொல்லிவிடு என்று அறிவுரை செய்தார். அந்த சமயம் வந்த தங்கமயில், பாண்டியனின் பிறந்தநாளை பற்றி சொல்கிறார். கடைசியில் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அவர் வந்தவுடன் ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில், பாண்டியன் கூப்பிட்டவுடன் ராஜு- மீனா இருவருமே வெளியே வருகிறார்கள். அப்போது கோமதி, உங்களுக்கு கோபம் தீர்ந்து விட்டதா? என்று கேட்டதற்கு, நான் என் குடும்பத்தின் மேல் எதுக்கு கோபப்படுகிறேன் என்று சொல்லி அவர்களுக்கு வாங்கி தந்த தின்பண்டத்தை கொடுக்கிறார். இதை பார்த்து செந்தில்- கதிர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். பின் ரூமில் கதிர் ஏதோ தேடிக் கொண்டிருக்க, ராஜுயின் உடை கீழே விழுந்ததை பார்க்காமல் அதை தூக்கி போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்த ராஜி, கதிர் இடம் சண்டை போட்டு வெளியே தூங்க வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இடையே சண்டை நடக்கிறது. அதற்கு செந்தில், உன்னிடம் நான் பேசவே மாட்டேன் என்று சொல்ல, மீனாவும் நானும் பேச மாட்டேன் என்று தூங்க வெளியில் வந்து விடுகிறார். ராஜி- மீனா இருவருமே மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்கள். செந்தில், மீனாவை தேடி மொட்டை மாடிக்கு வருகிறார். அதை கவனித்த மீனா உள்ளுக்குள்ளே சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.