மீனா செய்த தவறை மறந்து பாண்டியன் மன்னிப்பாரா? செந்தில் எடுக்கும் முடிவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 11/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி டியூசன் எடுக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்து பயங்கர கலவரம் ஆகி இருந்தது. இதனால் மொத்த குடும்பமே ராஜி-மீனாவிடம் பேசாமல் இருந்தார்கள். கோமதியிடம் ராஜி, மீனா இருவருமே மன்னிப்பு கேட்டும் அவர் முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார். பின் நகையை பேங்கில் இருந்து வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து, அவரவர்கள் நகையை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்போது தங்கமயில் நகைகள் எல்லாம் கருகிப் போய் இருந்தது.

உடனே தங்கமயில் யாருக்கும் தெரியாமல் மறைத்தார். உடனே ராஜி நகையை தன் அண்ணன்களிடம் கொடுத்து விட்டார்கள். அதோடு மற்றவர்களின் நகையை பேங்கில் வைக்கலாம் என்றவுடன் தங்கமயில் தடுமாறி இருந்தார். பாண்டியன், ராஜி-மீனாவிடம் பேசுவதில்லை. அவர்கள் எது கொடுத்தாலும் வாங்குவதில்லை. மேலும், வீட்டில் ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ராஜி- மீனா இருவருமே தன்னுடைய மாமியாரிடம் பேச சொல்லி கட்டாயப் படுத்தி இருந்தார்கள். ஆனால், அவர் முடியாது என்று சொல்ல, நாங்கள் வீட்டை விட்டு போகட்டுமா? என்று கேட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் தங்கமயில், கோமதியை சமாதானம் செய்து, நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்து பார்த்து நானே பொறாமை பட்டிருக்கிறேன் என்றெல்லாம் சொல்ல, கோமதி மன்னித்து விட்டார். தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் வீட்டில் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவர், எதற்கு அவர்களை சேர்த்து வைத்தாய்? அவர்கள் ஒன்றாக இருந்தால் உன்னை தனியாக்கி விடுவார்கள் என்று அவருக்கு தேவையில்லாதது எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இன்னொரு பக்கம் ராஜி, மீனா, கோமதி மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கமயில் வந்த உடனே அவர்கள் அமைதியானால் தங்க மயிலுக்கு தன் அம்மா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் கோமதியின் அண்ணன் வீட்டில் ராஜி ஓடிப்போன விஷயத்தை வைத்து பெண் கொடுக்கவில்லை என்று சொன்னவுடன் ராஜியும், அவருடைய அம்மாவையும் தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே ராஜி என் மகள், எனக்கு முக்கியம் என்று வடிவு சொன்னவுடன் ராஜிவின் அப்பா கத்துகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று அவருடைய தம்பி ஏத்தி விட்டார். இந்த வாரம் வேலை செய்யும் இடத்தில் மீனா, செந்திலை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார். மீனா எவ்வளவு போன் செய்தும், மெசேஜ் எல்லாம் போட்டும் அவர் எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில், மொட்டை மாடியில் ராஜி- மீனா-தங்கமயில் மூவருமே கலகலப்பாக நடந்ததை எல்லாம் பற்றி சிரித்துக் கொண்டிருந்தார்கள். ராஜி- மீனா வெளியில் படுத்ததை பார்த்து கோமதி தூங்க வெளியே வந்தார். உடனே ராஜி- மீனா இருவரும் வருத்தப்பட்டு தன்னுடைய மாமியாரின் மடியிலேயே படுத்து அழுதார்கள். மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பும் போது மீனா தன்னுடைய மாமனாரிடம் பேச, அவர் முகம் கொடுத்து கூட பேசாததால் வருத்தப்பட்டு அழுதுகொண்டே சென்றார் மீனா. இந்நிலையில் இன்றைய எபிசோடில், பாண்டியன் வருவதை பார்த்து ராஜி அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுகிறார். இதை கவனித்த கோமதி, எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என்று பாண்டியன் இடம் பேச, தான் செய்த தவறை உணர்கிறார்.

இன்றைய எபிசோட்:

கடையில் மீனா காத்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயம் வந்த பாண்டியனிடம், நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டு மீனா அழுகிறார். இதனால் பாண்டியன் மனமும் மாறி மீனாவை மன்னித்து விடுகிறார். பின் மீனாவை வேலைக்கு கொண்டு போய் விட சொல்லி செந்திலிடம் சொல்ல, அவரும் மீனாவை அழைத்து செல்ல கேட்கிறார். ஆனால், மீனா கோபத்தில் வேண்டாம், நான் நடந்தே போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்து விடுகிறார். அதற்கு பின் கடையில் நடந்ததை அறிந்து கொண்ட செந்தில் தன் அப்பாவின் மீது கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full