எல்லோர் முன்பும் பழனியை மோசமாக பேசிய பாண்டியன், கோபத்தில் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமார், நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டார். கோபப்பட்ட முத்துவேல், குமாரை அடித்து விட்டார். பின் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட அழைத்தார்கள். கோபத்தில் சக்திவேல் கத்தினார். இருந்தாலுமே விடாமல் பாண்டியன் வீட்டில் இருப்பவர்கள் முத்துவேல் உறவினர்களை சாப்பிட அழைத்தார்கள். இதையெல்லாம் பார்த்து முத்துவேல், சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்தது. அப்பத்தாவுமே தன் மகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். சொந்தக்காரர்கள், பாண்டியன் குடும்பத்தை ரொம்ப பெருமையாக பேசினார்கள்.
கோமதி தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த செந்தில், வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொன்னவுடன் மீனாவின் முகம் மாறுகிறது. கோமதி, செந்திலை திட்டினார். இன்னொரு பக்கம் கறி விருந்து போட முடியாததால் உறவினர்கள் எல்லோருமே போன் செய்து கிண்டல் கேலி செய்தார்கள். இதையெல்லாம் கேட்டு முத்துவேல்- சக்திவேல் இருவருமே கோபப்பட்டு குமாரை திட்டிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோபத்தில் சக்திவேல், குமாரை அடித்தார். அப்போது வந்த காந்திமதி, நடந்தது பற்றி பேசிக்கொண்டிருந்தால் என்ன ஆகப்போகுது? அடுத்த வேலையைப் பற்றி பாருங்கள் என்றார். உடனே சக்திவேல், உன் மகள் வந்ததால் சந்தோஷமா? என்றெல்லாம் கேட்டு மீண்டும் வம்பு இழுத்தார். இதனால் காந்திமதி, சக்திவேலை திட்டி விட்ட அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் கடையில்
மாணிக்கம், யாரும் இல்லாத நேரம் பார்த்து கல்லாவில் உள்ள காசை மாணிக்கம் எடுத்து விட்டார். இதை பார்த்த சரவணன், தங்கமயிலிடம் சொல்லி சண்டை போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அரசி, மளிகை கடையின் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது தங்கமயில், என்ன நடக்குமோ? உண்மை வெளிவந்திருமோ? என்று ரொம்பவே பயந்து கொண்டிருக்கிறார். பின் கணக்கில் 1100 ரூபாய் இல்லை என்று பாண்டியனிடம் அரசி சொல்லி இருக்கிறார். ஏற்கனவே பாண்டியன் குடித்திருக்கிறார். இதை கேட்டவுடன் பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போடுகிறார். பழனி தான் பணத்தை எடுத்து இருப்பான் என்று பாண்டியன் ரொம்ப மோசமாக திட்டி விடுகிறார். இதைக் கேட்டு சுகன்யாவிற்கு கோபம் வருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன் போன பிறகு எல்லோருமே பழனிக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இருந்தாலும் பழனி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு தங்கமயில் மீது கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் சமைப்பதாக சொல்லி விட்டு வந்த மீனா சமையல் அறையில் தூங்கி விடுகிறார். இதை பார்த்த செந்தில், ஏன் சமைக்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு மீனா, என்னால் முடியவில்லை. நீயே சமைத்துவிடு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.