பாண்டியனிடம் மீனா சொன்ன வார்த்தை, செந்திலால் வேதனையில் குமுறும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, எனக்கு குவாட்டரஸ் கொடுத்திருப்பது உண்மை தான். ஆனால், எனக்கு அங்கு போக விருப்பமில்லை. இதெல்லாம் செந்தில் உடைய முடிவு தான் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே செந்தில் இடம் போக வேண்டாம் என்று கேட்கிறார்கள். கோமதி ரொம்பவே கெஞ்சி கதறுகிறார். ஆனால், செந்தில் மனமிரங்கவே இல்லை. குவாட்டர்ஸுக்கு போவதில் உறுதியாக இருக்கிறார். பாண்டியன் அதிர்ச்சியில் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
செந்தில், நான் குவாட்டரஸ் போவதில் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொன்னார். கோமதி, கெஞ்சி கதறி அழுதார். செந்தில், முகத்தில் அடித்தது போல் தன்னுடைய அம்மாவை பேசி விட்டார். உடனே கோபப்பட்ட பாண்டியன், யாருக்கு என்ன தோணுதோ செய்யட்டும். நீ எதையும் பேசாதே கோமதி என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் கோமதி ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். அப்போது மீனா, எனக்கு இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லை. உங்கள் மகன்தான் செய்கிறார். எனக்கு குவாட்டரஸ் போக விருப்பமில்லை என்று சொல்லி புரிய வைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வேதனையில் கோமதி தூங்காமல் அழுது கொண்டு இருக்க, பாண்டியன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் ரூமில் செந்தில்- மீனா இருவருமே குவாட்டர்ஸ் போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே மீனா, உங்களுடன் நான் வருகிறேன். ஆனால், எனக்கு சுத்தமாக அதில் விருப்பமும் இல்லை. வீட்டில் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றார். மறுநாள் காலையில் செந்தில், பால் காய்ச்ச போகிறோம். நீங்கள் எல்லோரும் வந்துவிடனும் என்றார். பின் மீனா, எனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. இது எல்லாமே செந்தில் எடுத்த முடிவு தான் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, எவ்வளவோ எடுத்துச்சொல்லி புரிய வைக்கப் போகிறார். ஆனால், செந்தில் கேட்கவில்லை. தன்னுடைய முடிவிலிருந்து மாறாமல் திமிராக வீட்டில் பேசுகிறார். கோபத்தில் பாண்டியன், அவன் அரசாங்கத்து சம்பளம் வாங்குகிறான். அதனால் அப்படி தான் பேசுவான். நீ வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு என்று கோமதியை திட்டுகிறார். உடனே செந்தில், மோசமாக பாண்டியனையும், வீட்டையும் பேசி விடுகிறார். இதனால் பாண்டியன் ரொம்பவே உடைந்து போய் விடுகிறார். அதற்குப்பின் மீனா, பாண்டியனை தனியாக சந்தித்து பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது மீனா, வீட்டை விட்டு வெளியே போக எடுத்த முடிவு செந்தில் தான். எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. அவர் வெளியே போய் கஷ்டப்பட்டால் தான் உங்களுடைய அருமையும் வீட்டினுடைய அருமையும் புரியும் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு பாண்டியன், நீ எதுவாக இருந்தாலும் மாமாவிடம் சொல். எப்போதும் உனக்காக நாங்கள் சப்போர்ட் செய்வோம் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் செந்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கோமதி வேதனையில் அழுது கொண்டிருக்கிறார். ஆனால், கோமதியை பார்த்து ட்ராமா செய்கிறார் என்று செந்தில் சொல்வதால் அவர் ரொம்பவே உடைந்து போய் செந்திலை திட்டி விட்டு செல்கிறார். பின் கதிர் தன்னுடைய அம்மாவிற்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.