அரசியால் மனமுடைந்து வெளியே போன பாண்டியன், சந்தோஷத்தில் முத்துவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார், நான் இல்லாமல் வாழ முடியாது என்று அவள் தான் ஓடி வந்துவிட்டாள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இரவு முழுவதும் என்னுடன் தான் அவள் இருந்தாள் என்று பொய் சொன்னார். இதைக் கேட்டவுடன் பாண்டியன் குடும்பமும், மாப்பிள்ளை வீட்டாருமே அதிர்ச்சியானார்கள். அதற்குப்பின் காரில் இருந்து இறங்கி அரசி வந்தார். என்ன நடந்தது? என்று அரசி இடம் கேட்டார்கள். ஆனால், அரசி அமைதியாக இருந்தார் அதற்கு பின் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினார். அதை பார்த்தவுடன் குமார் ஆடிப் போனார்.

அரசி கழுத்தில் தாலி இருந்ததைப் பார்த்து எல்லோருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். மாப்பிள்ளை அம்மா, பாண்டியன் குடும்பத்தையும் அரசியையும் ரொம்ப மோசமாக திட்டுகிறார். மாப்பிள்ளை அரசிடம் பேச போனதற்கு கூட தடுத்த நிறுத்தி பாண்டியன் குடும்பத்திற்கு சாபம் விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார் மாப்பிளை அம்மா. முத்துவேல் குடும்பமும் ரொம்பவே சாக்கில் இருந்தது. அதற்குப்பின் அரசி, நான் இல்லை என்றால் செத்து விடுவேன் என்று குமார் பிளாக்மெயில் செய்தார். அதனால் தான் நான் திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதைக் கேட்டவுடன் பாண்டியன் உடைந்து போய்விட்டார். சக்திவேல் உள்ளுக்குள் சந்தோசப்பட்டார். குமாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே நின்றார். ஆனால், உண்மையில் அந்த தாலியை குமார் கட்டவில்லை. குமாரை பழிவாங்கத்தான் அரசி அந்த தாலியை தனக்கு தானே கட்டிக் கொண்டார். பின் அரசி, தன்னுடைய தந்தையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். கோவத்தில் மீனா, குமாரையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் அரசி, பாண்டியனின் காலில் விழுந்து கதறி அழுதார். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார். பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே அரசியையும் குமாரின் குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, ரெண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதில் என்ன பிரச்சனை? அவர்களை வாழவிடுங்கள் என்று அரசியின் கையைப் பிடித்து இழுத்தார். அரசி, குமார் கையைப் பிடித்தார். இதை பார்த்து பாண்டியன்- கோமதி இருவருமே நொறுங்கி விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் அப்பத்தா, குமார்- அரசி இருவரையும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சொன்னார்கள்.
வீட்டுக்குள் சென்றவுடன் முத்துவேல், குமார் திருமணம் செய்து கொண்டதை பற்றி விசாரிக்க, சக்திவேல் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். குமார் உண்மையை சொல்ல வந்தார். ஆனால், குமாரை பேசவிடாமல் முத்துவேல் தடுத்தார். உடனே அரசி, தாலி கட்டும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பயப்படுகிறீர்கள் என்று இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோவை அரசி காண்பித்தார். இதை பார்த்துடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. குமாருக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அதிர்ச்சியில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரொம்ப வேதனையில் இருக்கிறார்கள். பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கோமதி கோபப்பட்டு தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் திட்டிக் கொண்டிருக்கிறார். பாண்டியன் மளிகை சென்று அரசி சொன்னதைப் பற்றி எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். கடைக்கு வந்தவர்கள் எல்லோருமே அரசி திருமணத்தைப் பற்றிய விசாரிக்கிறார்கள். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் முத்துவேல், அரசியை திருமணம் செய்து வந்ததை பற்றி சந்தோஷமாக குமாரை பாராட்டி பேசுகிறார். சக்திவேலும் குமாரை பாராட்டுகிறார். குமார் உள்ளுக்குள், நான் திருமணம் செய்யவில்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full