குமார்-அரசி திருமணத்தால் இடிந்து போன பாண்டியன் குடும்பம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வீட்டில் எல்லோருமே பதறிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் செந்தில், கதிர், சரவணன் மூவருமே குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா,பெரிய அப்பாவிடம் சண்டை போட்டார்கள். அவர்களுமே, குமார் இங்கு இல்லை எங்களுக்கு எந்த விஷயம் தெரியாது என்றார்கள். ஆனால், சக்திவேல் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.
அதற்குப்பின் முத்துவேல், சக்திவேல் இடம் குமார் எங்கே? என்று கேட்க, அவர் திருச்சி சென்றிருக்கிறான் என்று சொன்னார்.

அவரும் அதை நம்பி விட்டார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து எல்லோரும் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் பாண்டியன் கதி கலங்கி நின்றார். பின் மாப்பிளை வீட்டார், அரசி எங்கே? நேரம் ஆகிறது என்று கேட்டார்கள். உடனே அங்கிருந்து உறவினர், அரசி, குமாருடன் ஓடிவிட்டாள் என்று சொன்னவுடன் மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் ஷாக் ஆனார்கள். பாண்டியன் குடும்பத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அரசி வீட்டில் இல்லை என்பதை தெரிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டில் ஷாக் ஆனார்கள். மாப்பிள்ளை அம்மா பயங்கரமாக கோவப்பட்டு கோமதியையும் பாண்டியனையும் பேசி இருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், மாப்பிள்ளை அம்மா கேட்கவில்லை. அரசி, குமாருடன் ஓடி சென்ற விஷயத்தைப் பற்றி வெளியே எல்லோருமே கேவலமாக பேசி இருந்தார்கள். அவமானத்தில் பாண்டியன் கூனிக்குருங்கி போயிருந்தார். அந்த சமயம் பார்த்து குமார் வந்தார். குமாரை பார்த்தவுடன் பாண்டியன் மகன்கள் அவரை அடிக்கப் போனார்கள்.

நேற்று எபிசோட்:

உடனே குமார், நான் இல்லாமல் வாழ முடியாது என்று அவள் தான் ஓடி வந்துவிட்டாள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இரவு முழுவதும் என்னுடன் தான் அவள் இருந்தாள் என்று பொய் சொன்னார். இதைக் கேட்டவுடன் பாண்டியன் குடும்பமும், மாப்பிள்ளை வீட்டாருமே அதிர்ச்சியானார்கள். அதற்குப்பின் காரில் இருந்து இறங்கி அரசி வந்தார். என்ன நடந்தது? என்று அரசி இடம் கேட்டார்கள். ஆனால், அரசி அமைதியாக இருந்தார் அதற்கு பின் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினார். அதை பார்த்தவுடன் குமார் ஆடிப் போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி கழுத்தில் தாலி இருந்ததைப் பார்த்து எல்லோருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். மாப்பிள்ளை அம்மா, பாண்டியன் குடும்பத்தையும் அரசியையும் ரொம்ப மோசமாக திட்டுகிறார். மாப்பிள்ளை அரசிடம் பேச போனதற்கு கூட தடுத்த நிறுத்தி பாண்டியன் குடும்பத்திற்கு சாபம் விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார் மாப்பிளை அம்மா. முத்துவேல் குடும்பமும் ரொம்பவே சாக்கில் இருக்கிறது. அதற்குப்பின் அரசி, நான் இல்லை என்றால் செத்து விடுவேன் என்று குமார் பிளாக்மெயில் செய்தார்.

சீரியல் ட்ராக்:

அதனால் தான் நான் திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பாண்டியன் உடைந்து போய்விடுகிறார். சக்திவேல் உள்ளுக்குள் சந்தோசப்படுகிறார். குமாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே நிற்கிறார். ஆனால், உண்மையில் அந்த தாலியை குமார் கட்டவில்லை. குமாரை பழிவாங்கத்தான் அரசி அந்த தாலியை தனக்கு தானே கட்டிக் கொண்டார். பின் அரசி, தன்னுடைய தந்தையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோவத்தில் மீனா, குமாரையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full