பாண்டியனிடம் சிக்கிய கதிர் , பயத்தில் செந்தில் சொன்ன வார்த்தை- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வந்ததிலிருந்து பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல இருந்தார். ஆனால், மீனா- ராஜு இருவரும் போக மறுத்து விட்டார்கள். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார்.

அப்போது, ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வதை சரியாக கவனிக்காமல் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்ததால், அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 21000 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். கடந்த வாரம், தங்கமயில்-சரவணன் ஹனிமூன் சென்று இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம்மின் மொத்த செலவு 26000 என்று தெரிந்தது. இதை சரவணன், கதிரிடம் சொல்லி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்து மீனாவிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். கடைசியில் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விட்டார். அதோடு கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து இருந்தார். கதிர் பணம் அனுப்பியதை அறிந்த சரவணன்-தங்கமயில் சந்தோசமாக ஹனிமூனை கொண்டாடுகிறார்கள். கோமதியின் அம்மா வீட்டில் அவருடைய சின்ன அண்ணன் மகனை பார்க்க பெண் வீட்டில் இருந்து வந்திருந்தார்கள்.

சீரியல் கதை:

அப்போது எல்லோர் கழுத்திலும் நகைகள் நிறைய இருக்க, ராஜி அம்மா கழுத்தில் மட்டும் நகை இல்லை. இதை அவருடைய அப்பா கவனித்து கேட்டதற்கு, என் அம்மா வீட்டில் கொஞ்சம் பிரச்சனை அதனால் கொடுத்திருக்கிறேன் என்று ராஜி அம்மா சொல்ல, கோபமடைந்த அவருடைய அப்பா அடித்து விடுகிறார். அதற்குப் பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி ராஜி அம்மாவை வெளியில் தள்ளி விடுகிறார். அதை பார்த்த கோமதி, அவருடைய அண்ணன்கள் இடம் சண்டை போட்டார். ஒரு வழியாக அப்பத்தா அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.

இன்றைய எபிசோட்:

நேற்று எபிசோடில், பாண்டியன் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செந்தில், சித்தப்பு இருவரும் ஆயிரம் ரூபாய்க்கு என்ன கேட்பாரோ? என்ற பயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், பாண்டியன் மகள், ₹1000 கணக்கு விடுகிறது என்று சொல்ல, பாண்டியன் அதிர்ச்சி ஆகிறார். உடனே பாண்டியன், உன் மகன் இன்னைக்கி கடைக்கு வந்திருந்தான். அவன் வேலையாக தான் இருக்கும் வர சொல்லு என்று சொன்னவுடன் கதிர் வந்து நிற்கிறார்.

சீரியல் ட்ராக் :

அப்போது கதிர், நான் எடுக்கவில்லை என்கிறார். கடைசியில் செந்தில், ஒருவர் குறைவாகத்தான் பணம் கொடுத்தார். அதை நான் மறந்துவிட்டேன் என்று பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேசியிருக்கிறார். இதையெல்லாம் கேட்டு மீனா உள்ளுக்குள்ளேயே, தங்கமயில் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும் என சிரித்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full